சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொடூரமான முறையில் போலீஸ் சித்ரவதையால் கொல் லப்பட்டதில், தற்போது வீடியோ ஆதாரங்கள் வெளியாகி தமிழ்நாட் டையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் சூழ-ல், அதேபோன்ற சைக்கோத் தனமான காவல் அதிகாரியின் கொடூரத்தால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நெல்லை மாவட்டம், அம்பை சரக ஏ.எஸ்.பி.யாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பொறுப்பேற்றார். இவர், மனிதாபிமானமில்லாமல் மிகக்கொடூரமாக நடந்துகொள்வதாகவும், பற்களை கட்டிங் ப்ளையரால் கோரத்தனமாகப் பிடுங்கியுள்ளா ரென்றும் அதிரவைக்கும் குற்றச்சாட்டை மாவட்டக் கலெக்டரான கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ளனர், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ், லட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோர்.
இவ்விவகாரம் குறித்து நாம் விசாரிக்கையில், "இரண்டு வாரத்திற்கு முன்பு அடிதடி வழக்கில் சிக்கிய கல்லிடைக்குறிச்சி சுபாஷ், லட்சுமிசங்கர், வெங்கடேஷ் மூவரும் விசாரணைக்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், அங்குள்ள அறைக்கு அவர்களைத் தனித்தனியே வரவழைத்து, வாயில் ஜல்லிக்கற்களைப் போட்டு பற்களைக் கடிக்கும்படி கூறி லத்தியாலடிக்க, கற்களைக் கடித்ததில் பல்லில் ரத்தம் கொப்பளிக்க, அவர்களின் கைகளையும் தலையையும் இரு கான்ஸ்டபிள்கள் பிடித்துக்கொள்ள... கதறக் கதற பற்களைக் கட்டிங் ப்ளேயரால் பிடுங்கி அனுப்பியுள்ளார்!
இவர்களிடம் மட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்னர், சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததாகத் தரப்பட்ட புகார் குறித்த விசாரணையின்போது, ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபருக்கும், கட்டிங் ப்ளேயரால் அவரின் 3 பற்களைப் பிடுங
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொடூரமான முறையில் போலீஸ் சித்ரவதையால் கொல் லப்பட்டதில், தற்போது வீடியோ ஆதாரங்கள் வெளியாகி தமிழ்நாட் டையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் சூழ-ல், அதேபோன்ற சைக்கோத் தனமான காவல் அதிகாரியின் கொடூரத்தால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நெல்லை மாவட்டம், அம்பை சரக ஏ.எஸ்.பி.யாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பொறுப்பேற்றார். இவர், மனிதாபிமானமில்லாமல் மிகக்கொடூரமாக நடந்துகொள்வதாகவும், பற்களை கட்டிங் ப்ளையரால் கோரத்தனமாகப் பிடுங்கியுள்ளா ரென்றும் அதிரவைக்கும் குற்றச்சாட்டை மாவட்டக் கலெக்டரான கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ளனர், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுபாஷ், லட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோர்.
இவ்விவகாரம் குறித்து நாம் விசாரிக்கையில், "இரண்டு வாரத்திற்கு முன்பு அடிதடி வழக்கில் சிக்கிய கல்லிடைக்குறிச்சி சுபாஷ், லட்சுமிசங்கர், வெங்கடேஷ் மூவரும் விசாரணைக்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், அங்குள்ள அறைக்கு அவர்களைத் தனித்தனியே வரவழைத்து, வாயில் ஜல்லிக்கற்களைப் போட்டு பற்களைக் கடிக்கும்படி கூறி லத்தியாலடிக்க, கற்களைக் கடித்ததில் பல்லில் ரத்தம் கொப்பளிக்க, அவர்களின் கைகளையும் தலையையும் இரு கான்ஸ்டபிள்கள் பிடித்துக்கொள்ள... கதறக் கதற பற்களைக் கட்டிங் ப்ளேயரால் பிடுங்கி அனுப்பியுள்ளார்!
இவர்களிடம் மட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்னர், சி.சி.டி.வி. கேமராவை உடைத்ததாகத் தரப்பட்ட புகார் குறித்த விசாரணையின்போது, ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபருக்கும், கட்டிங் ப்ளேயரால் அவரின் 3 பற்களைப் பிடுங்கியிருக்கிறார் ஏ.எஸ்.பி. இன்னொரு சம்பவத்தில், வி.கே.புரம் பக்கமுள்ள சிவந்திபுரத்தில், மாயாண்டி, அவரது சகோதரர்களான செல்லப்பா, மாரியப்பன் ஆகியோர், மேலும் இருவருடன் இணைந்து, பல வருடங்களாக மட்டன் கடை நடத்திவந்தனர். இந்த ஐவரும், மட்டன்கடை சகோதரர்கள் என்று அப்பகுதியில் பிரபலமானவர்கள். இவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் காதலித்த பெண்ணோடு, இன்னொருவருக்கு திருமணமாகியிருக்கிறது. இந்நிலையில், அப்பெண்ணின் கணவன், முன்னாள் காதலனிடம் வந்து, செல்போனில் தனது மனைவி யின் படங்கள் இருந்தால் கொடுத்துவிடும்படி மிரட்டியிருக்கிறார். படங்கள் இல்லையென்று சொல்லியும் அடித்து உதைத்து, செல்லைப் பறித்துச் சென்றிருக்கிறார். இதையறிந்த மாயாண்டி சகோதரர்கள், தங்கள் நண்பனின் செல்லைத் திருப்பிக்கொடுக்கும்படி அவரிடம் கேட்க, அவரோ தூத்துக்குடியிலிருந்து கூலிப்படையினரை வரவழைத்து, மாயாண்டி சகோதரர்களை ஆயுதங்களுடன் நோட்டமிடச் செய்திருக்கிறார். விபரீதம் நடக்கவிருப்பதை யூகித்த மாயாண்டி சகோதரர்கள், கூலிப்படையினரில் மூவரைப் பிடித்ததோடு, போலீசுக்கு போனில் தகவல் சொல்ல, போலீசோ ஏதோ கேங்வார் போன்று, இந்த மூவரோடு, மட்டன் கடை சகோதரர்கள் ஐவரையும் சேர்த்து கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவ்விவகாரத்திலும் விசாரணையில் இறங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், கூலிப் படை யினரை விசாரிப்பதை விட்டுவிட்டு, புகா ரளித்த மட்டன் கடை சகோதரர்களையும் சேர்த்தே குற்றவாளி யாக்கி, தனது சைக் கோத்தனத்தைக் காட்டி யிருக்கிறார். எட்டு பேரையும் உடைகளைக் களைந்து, ஜட்டியோடு நிற்க வைத்தவர், தானும் உடை களைக் களைந்து ஜட்டி யோடு வேறோரு அறையில் இருந்துகொண்டு, எட்டு பேரையும் ஒவ்வொருவராக வரவைத்திருக்கிறார். உள்ளே வந்ததும், கால், கைகளை இரு போலீசார் இறுக்கிப் பிடித்துக் கொள்ள, கனமான கல்லை வாயினுள் திணித்து அழுத்திக் கடிக்கச்சொல்லி, புட்டத்திலும், தோள்பட்டையிலும் லத்தியால் அடித்திருக்கிறார். வேதனை யால் கதறியவரை, வழக்கம்போல் கட்டிங் ப்ளேயரால் அவரது பற்களைப் பிடுங்கியிருக்கிறார் பல்வீர்சிங். மட்டன் கடை சகோதரர்களில் ஒருவரான மாரியப்பனுக்கு திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகியுள்ளதெனக் கூறி அவரை விட்டுவிடும்படி சொன்ன போது, "ஓ! யு ஆர் மேரிட்?' எனக் குதர்க்கமாகக் கேட்டபடி அவரது ஜட்டியினுள் கைவிட்டு, விதைப்பையை நசுக்கி அலறவிட்டு குரூரமாக ரசித் திருக்கிறார். இப்படியாக 8 பேரையும் சித்ரவதை செய்திருக்கிறார் என்கிறார்கள்.
"நாங்க எந்த குற்றத்திலயும் ஈடுபடல. எங்களைத் தாக்கவந்த கூலிப்படையப் புடுச்சி போலீஸ்ட்ட ஒப்படைச்சோம். என் தம்பி மாரியப்பனின் ஆணுறுப்பு விதையை ஏ.எஸ்.பி. சேதப்படுத் தியதால அவன் நடக்க முடியாம சிரமப் படுறான்யா. தப்பே செய்யாத எங்களுக்கு இந்த தண்டனையா?'' என தேம்பினார் மட்டன் கடை செல்லப்பா.
இதேபோல், சிவந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் வேதநாராயண னின் மீது புகார் கொடுக்க, வேதநாராயணனுக்கும் இதே கட்டிங் ப்ளேயர் ட்ரீட்மென்ட்தான்! இது போல் ஒரு வாலிபரிடம் சைக்கோத்தனத்தைக் காட்ட, அவருக்கு முதுகுத் தண்டுவடம் பாதிப்பாக... தகவலறிந்து மாவட்ட எஸ்.பி.சரவணன், பல்வீர் சிங்கை அழைத்துக் கண்டித் திருக்கிறார்.
பல்வீர்சிங் குறித்து புகாரளிக்கக்கூடாதென போலீசாரில் சிலரே பாதிக்கப்பட்டோரை மிரட்டுவதாகத் தெரிகிறது. குறிப்பாக புகாரளித்த சுபாஷ், லட்சுமிசங்கர், வெங்கடேஷ் மூவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அவர்களின் வாயடைத்த தோடு, விசாரணைக்கு வரவிடாமல் செய்திருக்கிறார்களாம். தவிர, பாதிக் கப்பட்ட சூர்யா என்பவர், தனக்கு அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று சப்கலெக்டரிடம் சொல்ல வைக்கப்பட்டுள்ளாராம். இப்படியான சூழலில் இவ்விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டு மென்றால், ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கை கைது செய்தபின் விசாரிக்க வேண்டுமென்று அம்பை எம்.எல்.ஏ. இசக்கிசுப்பையா வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணை யில், பல்பீர்சிங் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருப்பது தெரியவந்ததால், பல்பீர்சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். இந்த ஏ.எஸ்.பி. பல்வீர்சிங், இந்திய அளவில் ஃபேமஸான கொள்ளைக் கும்பல் பவாரியாவின் பக்கத்து ஏரியாவைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப் போராடும் நேதாஜிசுபாஷ் சேனையின் தலைவரான மகாராஜனோ, "ஏ.எஸ்.பி., புல நிலவரம் தெரியாமல் கர்ண கொடூரமாகவும், சைக்கோவாகவும் நடந்துகொள்கிறார். அப்படிப்பட்டவர் போலீஸ் வேலைக்கு அன்ஃபிட். அரசு தலையிட்டு விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்வதுடன், ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
மார்ச் 29 அன்று, பாதிக்கப்பட்ட சூர்யா, சப்கலெக் டரிடம் விசாரணைக்காக ஆஐராகிவிட்டுச் சென்றிருக்கிறார். மதியத்திற்குமேல் நேதாஜிசுபாஷ் சேனை தலைவர் மகாராஜன், பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன், ரூபன், இன்னொரு மாரியப்பன், சுபாஷ் ஆகியோரை சப்-கலெக்டரின் விசாரணைக்கு ஆஜர்படுத்தியிருக்கிறார். ஆனால் சப்கலெக்டரோ, "சம்மன் கொடுக்கப்பட்டவர்களிடம் மட்டுமே விசாரிக்கிறோம். இவர்களை விசாரிக்க முடியாது'' என்றவரிடம், "காலையில் சூர்யா ஆஐராகிவிட்டுச் சென்றிருக்கிறார். அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. அது மட்டும் எப்படி?'' என கேட்டிருக்கிறார் மகாராஜன். அதற்கு "நீங்கள் அவர்களுடன் கலெக்டரைப் பாருங்கள்'' என்றதால் வெறுத்துப்போய் வெளியேறிய மகாராஜன், சப்-கலெக்டரின் விசாரணைக்கு அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரிக்கையில், "ஏ.எஸ்.பி. பல்பீர்சிங்கும், சப்கலெக்டர் முகமது சபீர் ஆலமும் ஒரே சென்டரில் படித்தவர்களாம். நெருங்கிய நண்பர்களாம். மேலும், தற்போது இவர்கள் ஒரே குவார்ட்டர்ஸில் தங்கியிருப்பவர்கள் என்பதால் விசாரணை எத்திசையில் போகுமோ'' என்கிறார்கள் பூடகமாக.
இந்த விவகாரம் தமிழ்நாட் டளவில் கொந்தளிப்பை ஏற் படுத்தியதால், தமிழக சட்டப்பேர வையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "அம்பை ஏ.எஸ்.பி. விவகாரத்தில் புகார் வந்த உடனேயே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவை எல்லாம் சம்பவம் நடந்த உடனே இந்த அரசு எடுத்த நடவடிக்கை'' என்றார்.
தென் தமிழ்நாட்டில் காவல் துறையினரின் விசாரணை முறையில் பரவலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சாத்தான்குளம் படுகொலைகளுக்குப் பின்னர், விசாரணைக் கைதிகளை விசாரிக்கும் முறை குறித்து தீவிர ஆய்வு நடத்த வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்த ஆய்வினை நடத்தினால்தான் இத்தகைய சைக்கோத்தனமான குரூர அதிகாரிகளை காவல்துறையிலிருந்தே களையெடுக்க முடியும்.