விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகிலுள்ள கலித்திறம்பட்டு கந்தப்பன் சாவடி கிராமத்தைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவரின் மனைவி சரோஜா, மகள் பூங்காவனம் இருவரும் விவசாயக் கூலியாக வேலை பார்த்தபடி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்துவருகிறார் கள். கடந்த ஏழாம் தேதி காலையில் நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தவர் கள் சந்தேகப்பட்டு வீட்டைத் திறந்து பார்த்தபோது, தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக, கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், போலீசார் விரைந்து வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதிகாலை 3 மணியளவில் அப்பெண்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதன், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது எதிர்த்தவர்களைத் தடியால் தாக்கியதில் அவர்கள் மயக்கமடைய, அந்நிலையிலேயே அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், ஒரு பவுன் செயினையும், அரை பவுன் கம்மலையும் திருடிச் சென்றிருக்கிறான் என தெரிய வந்துள்ளது.
அன்றிரவு, அதே பகுதியிலுள்ள செங்கற்சூளையில் வேலைபார்த்துவரும் நாகலிங்கம், அவரது மனைவி அஞ்சம்மாள் இருவரும் குடிசையினுள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நுழைந்த மர்ம மனிதன், அஞ்சம்மாளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அவர் கூச்சல் போடவே, அஞ்சம்மாளைத் தடியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டான். புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அஞ்சம்மாளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இவ்விரு சம்பவங்களும் ஒரே இரவில் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாலியல் கொலைகாரனைப் பிடிப்பதற்காக விழுப்புரம் மாவட்டக் கூடுதல் கண்காணிப் பாளர் கோவிந்தராஜ், டவுன் டி.எஸ்.பி. பார்த்திபன் ஆகியோர் உள்ளிட்ட எட்டு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியதில், ஒட்டநந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கவிதாஸ் என்பவனைப் பிடித்தனர். கவிதாஸ் ஒரு சைக்கோ கொலை, கொள்ளைக்காரன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரையும் கொலைசெய்து நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டான். அஞ்சம்மாளைத் தாக்கியதையும் ஒப்புக்கொண்டான்.
கவிதாஸ் கந்தப்பன்சாவடி பகுதியில் ஜேசிபி டிரைவராக வேலை செய்து வந்துள் ளான். அப்போது சரோஜா, பூங்காவனம் வீட் டில் தண்ணீர் குடிக்கச் செல்வது, உணவருந்துவ தென பழக்கமாகியிருக்கிறது. வயதான தாய், மகள் இருவரும் தனியாக வசித்து வருவதைத் தெரிந்துகொண்ட கவிதாஸ், சம்பவத்தன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் புகுந்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய் துள்ளதை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநாதா கூறும்போது, "கவிதாஸ் ஒரு சைக்கோ கொலைகாரன். ஏற்கனவே கடந்த ஜனவரியில், திருப்பாப்புலியூரில் வயதான இரு பெண்களைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, நகைகளைக் கொள்ளையடித்துள் ளான். திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலை யத்தில் இதேபோன்று ஒரு கொலை மற்றும் பலாத்கார வழக்கும், திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை கொள்ளை வழக்கு, சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத் தில் கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கவிதாஸ் கிராமப்புறங்களில் ஒதுக்குப்புறமாக வசித்து வரும் ஆதரவற்ற நடுத்தர வயதைக் கடந்த பெண்களை நோட்டமிட்டு, அவர்கள் தூங்கும்போது பாலியல் பலாத்காரம் செய்வது, போராடினால், தாக்குதல் நடத்தி மயக்கமடையச்செய்து பாலியல் பலாத்காரம் செய்யும் சைக்கோ குணமுடையவன். அப்படிப்பட்டவனை 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது" என்றார்.
கவிதாஸ் மீது இதுவரை 6 பாலியல் பலாத்கார, கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புதூர் கிராமத்தில், ஆறாயி என்ற மூதாட்டியை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்தபோது, தடுக்க வந்த பேரனை அடித்துக் கொலை செய்தான். அதேபோல, பெரிய பாபுசமுத்திரம் கிராமத்தில், ரங்கநாதன் அவரது மனைவி பொற்கலை இருவரையும் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்த சம் பவத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனைக் கைது செய்தனர். அதன்பிறகு தற்போது கவிதாஸ் என்ற சைக்கோ கொலைகாரன் பிடிபட்டுள் ளான். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் தனித்து வசித்துவரும் பெண் களைக் குறி வைப்பான். அவர்களால் எதிர்த்துப் போராட உடலில் பலம் இருக்காது. இப்படி யான சைக்கோ கொலைகாரர்கள் அவ்வப் போது முளைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது" என்கிறார்கள் பெண்கள் அமைப்பினர்.