Advertisment

இப்போதும் செய்யாதுரை கொடி பறக்கிறது!-நடைமுறையை மாற்றிய நெடுஞ்சாலைத்துறை!

cc

"இதையெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாய்ங்க'’ எனச் சொல்லும்படியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் முறைகேடுகள் நடந்தன. அதன் நீட்சியானது விட்டகுறை, தொட்டகுறையாக, தி.மு.க. ஆட்சியிலும் தொடரவே செய்கிறது.

Advertisment

vv

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்களான செய்யாதுரையையும் அவரது மகன் நாகராஜனையும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.களின் பினாமிகள் என்று விமர்சித் திருந்தது நிரூபணமாகி வருகிறது.

கடந்த ஆட்சியின்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட

"இதையெல்லாம் வெளில சொன்னா சிரிச்சிருவாய்ங்க'’ எனச் சொல்லும்படியாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் முறைகேடுகள் நடந்தன. அதன் நீட்சியானது விட்டகுறை, தொட்டகுறையாக, தி.மு.க. ஆட்சியிலும் தொடரவே செய்கிறது.

Advertisment

vv

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்களான செய்யாதுரையையும் அவரது மகன் நாகராஜனையும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.களின் பினாமிகள் என்று விமர்சித் திருந்தது நிரூபணமாகி வருகிறது.

கடந்த ஆட்சியின்போது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலை கள் அமைக்கும் பணி நடை பெற்று வந்தன. அதற்காக, 641 கி.மீ. நீளச் சாலை களுக்கான, மொத்த மதிப் பீட்டு தொகை ரூ.612 கோடிக்கான, 5 ஆண்டுகளுக்கான ஒப்பந் தம், எடப்பாடி பழனியின் நண்பரது சம்பந்தியான செய்யாதுரைக்கு 2019-ல் வழங்கப்பட்டது.

Advertisment

மேலும், 7 உதவி கோட்டப் பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, கண்காணிப்பு பொறியாளர் ஆகிய 10 பேருக்கும், விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் பணமான ரூ.1 கோடியே 19 லட்சத்து 500-ல் பொலிரோ வாகனங்கள் 10 கொள்முதல் செய்யப்பட்டு, செய்யாதுரை நிறுவனத்தின் பெயரில் பதிவாகி யுள்ளன. மற்ற மாவட்டங்களில் அரசு அதிகாரிகளின் பெயரில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்திலோ செய்யாதுரையின் கொடியை நெடுஞ்சாலைத்துறையினரே பறக்கவிட்டுள்ளனர். அந்த 10 வாகனங்களுக்கும், டீசல் போடுவது, ஓட்டுனருக்கு சம்பளம் தருவது போன்ற பராமரிப்பு செலவினங்களுக்காக, மாதந்தோறும் கி.மீ.க்கு ரூ.23 வீதம், ரூ.90 லட்சம் வரை வாரி யிறைத்துள்ளனர். ஊழல் மோசடிக்கு ஆதர வளித்து வந்த திருநெல்வேலி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளருக்கு இன்னோவா கார் ஒன்றைப் பரிசளித்து, அந்த ஒப்பந்த நிறுவனம் தாராளம் காட்டியது. அந்த வாகனம் அரசு முத்திரையுடன், இன்று வரையிலும் சட்ட மீறலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

cc

பொதுவான நடைமுறை என்னவென்றால், புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒதுக்கீடாகி, டெண்டர் விடப்படும். சாலைகள் போடப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்தால், மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீர் செய்யப்படும். அதுபோல், சாலைகள் அமைப்பதைப் பார்வையிடும் அதிகாரிகள், தர ஆய்வு நடத்தும் அதிகாரிகள் போன்றோர் அரசு வாகனங்களில் செல்வார்கள். அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் டீசல் செலவுகளை, உபயோகப்படுத்தும் அதிகாரிகளே அரசு செலவில் செய்துகொள்வர். இந்த நடைமுறையை செய்யாதுரை நிறுவனம் பலனடையும் வகையில், எடப்பாடி அரசு மாற்றியுள்ளது.

செய்யாதுரையின் நிறுவனத்துக்கு ‘அடிமை’ போல வேலை பார்த்துவந்த ‘பிள்ளையார்’ பெயரைக்கொண்ட விருதுநகர் மாவட்ட உதவி கோட்டப்பொறியாளரை ‘எஸ்.பி.கே. நிறுவனத்தின் மேலாளர்’ என்றே அத்துறையினர் சிலாகித்துச் சொல்வார்கள். தி.மு.க. ஆட்சியிலும் அந்த உதவி கோட்டப்பொறியாளர், தான் விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் பெற்றுள்ளது, விந்தையாகத்தான் இருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை ஊழலையும் முறைகேடுகளையும், ருசிகண்ட அதிகாரிகள் தொடர்வதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு, தி.மு.க. அரசு தயங்காது என்பதே அத்துறையினரின் பொதுவான எதிர் பார்ப்பாக உள்ளது.

தனது கவனத்திற்கு வரக்கூடிய ஒவ்வொரு புகாரையும் துறையின் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அது குறித்து ஊடகங்களுக்கும் விரிவாக விளக்கமளிப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்திலும் அந்த நடவடிக்கை இருக்கும் என நம்புகிறார்கள்.

nkn091021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe