Advertisment

ப்ராடு கணவன்! நியாயம் கேட்கும் அபலைப்பெண்! -அலையவிடும் இரு மாவட்ட போலீஸ்!

ss

வேலூர் மாநகரம் காங்கேயநல்லூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு-சிட்டிமா தம்பதி. இவர்களது மூத்த மகள் கனிமொழிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியலில் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

ff

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமத் தூர் வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், “"எனது மகன் விக்னேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறோம், உங்கள் மகள் ஜாதகத்தை இணையத்தில் பார்த்தோம்''’என பேசியுள்ளார். தங்களது மகன் சி.பி.ஐ.யில் இன்ஸ்பெக்டராக டெல்லியில் வேலைபார்ப்பதாகச் சொல்லியுள்ளனர். விக்னேஷ், ஐ.டி. கார்டு, சம்பள பட்டியல் ஜெராக்ஸ் தந்துள்ளார். 25-10-2022ல் வாணியம்பாடியில் இவர்களது திருமணம் ஏக தடபுடலுடன் நடை பெற்றுள்ளது. அதன்பின் நடந்தது பற்றி கனிமொழி நம்மிடம் பேசினார்.. “"திருமணம் முடிந்து இரண்டு நாள்கூட அவங்க ஊர்ல தங்கல. வேலூர்லயே வீடெடுத்து தங்கவச்சான். அவனோட செல் போனுக்கு யார் கால் செய்தாலும் தனியா போய் பேசுவான். நான் அவனோட செல்போனை தொட்டாலே அடிப்பான். திருமணமாகி 18-

வேலூர் மாநகரம் காங்கேயநல்லூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு-சிட்டிமா தம்பதி. இவர்களது மூத்த மகள் கனிமொழிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியலில் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

ff

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமத் தூர் வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், “"எனது மகன் விக்னேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறோம், உங்கள் மகள் ஜாதகத்தை இணையத்தில் பார்த்தோம்''’என பேசியுள்ளார். தங்களது மகன் சி.பி.ஐ.யில் இன்ஸ்பெக்டராக டெல்லியில் வேலைபார்ப்பதாகச் சொல்லியுள்ளனர். விக்னேஷ், ஐ.டி. கார்டு, சம்பள பட்டியல் ஜெராக்ஸ் தந்துள்ளார். 25-10-2022ல் வாணியம்பாடியில் இவர்களது திருமணம் ஏக தடபுடலுடன் நடை பெற்றுள்ளது. அதன்பின் நடந்தது பற்றி கனிமொழி நம்மிடம் பேசினார்.. “"திருமணம் முடிந்து இரண்டு நாள்கூட அவங்க ஊர்ல தங்கல. வேலூர்லயே வீடெடுத்து தங்கவச்சான். அவனோட செல் போனுக்கு யார் கால் செய்தாலும் தனியா போய் பேசுவான். நான் அவனோட செல்போனை தொட்டாலே அடிப்பான். திருமணமாகி 18-வது நாள், "போன் வந்தா எதுக்கு தனியா போய் பேசறீங்க'ன்னு கேட்டேன், அதுக்கு என்னை அடிச்சு, உதைச்சான். ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகி சிகிச்சையெடுத்தேன்.

Advertisment

2023 மார்ச் மாதம் என்னை டெல்லிக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். ஆபீஸ் கோட்டர்ஸ்ல வீடு கிடைக்கலன்னு சொல்லி, தனியார் அபார்ட் மெண்ட்ல தங்கவச்சான். தினமும் காலையில போவான், ராத்திரிதான் வருவான். என்னை அடிச்சு டார்ச்சர் செய்தான். நான் பக்கத்துல ஒரு சூப்பர்மார்க்கெட்டுக்கு மளிகைப்பொருள் வாங்கப் போவேன். அங்க தமிழ்காரங்க வேலை செய்தாங்க. அவங்ககிட்ட என் பிரச்சனையைச் சொல்லி அழுதேன். அவங்க மூலமா டெல்லியிலயிருந்து தப்பிச்சி வேலூருக்கு வந்துட்டேன்.

ஒரு மாசம் பொறுத்து நான் பெங்களுரூவுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வந்துட்டேன்னு சொல்லி வீட்டுக்கு வந்து, கெஞ்சிக் கூத்தாடி அழைச்சிட்டுப் போனான். அங்கேயும் அதே கதை... வீட்டுக்கு வந்துட்டேன்.

vv

2024 ஜனவரி 8-ஆம் தேதி எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டவன் வாந்தியெடுத்தான். என்னன்னு கேட்டதுக்கு விஷம் குடிச்சிட்டேன்னு சொன்னான். அதிர்ச்சியாகி அவனை நாங்க சி.எம். சி.யில் சேர்த்தோம். அவன் மருத்துவமனையில இருக்கிறது தெரிஞ்சு அவன்கிட்ட வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த 30, 40 பேர் ஹாஸ் பிட்டல்லயே வந்து பிரச்சினை செஞ்சாங்க.

வெறுத்துப்போய் 2024 ஜனவரி 10-ஆம் தேதி காட்பாடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தேன். "உன்னை கல்யாணம் செஞ்சு தந்த ஊர்ல போய் புகார் தா'ன்னு சொல்லிட்டாங்க. ஜனவரி 10-ஆம் தேதி திருவண்ணாமலை எஸ்.பி.யிடம் புகார் தந்தேன், ஜம்னாமத்தூர் காவல்நிலைய எஸ்.ஐ. சிவாஜி, "நீ உன் ஊர்ல போய் புகார் தா, அங்கதானே நீ இப்ப இருக்க?'ன்னு அனுப்பிட்டாரு.

போளூர் மகளிர் காவல்நிலை யம், வேலூர் எஸ்.பி. அலுவலகம், வேலூர் போலீஸுக்கு ஆன்லைன்ல புகார், திருவண்ணாமலை கலெக்டரை சந்திச்சி பிப்ரவரி மாதம் மனு தந்தேன். இப்போ வரை விசாரிக் கலை. மார்ச் 8-ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு பதிவுத் தபாலில் புகாரனுப்பி னேன்... என்னன்னுகூட விசாரிக்கலை. மார்ச் 13-ஆம் தேதி வேலூர் எஸ்.பி.யைச் சந்தித்து, "இரண்டு மாவட்ட போலீ ஸும் என் புகாரை வாங்க லை'ன்னு சொன்னேன். அவர் என் புகாரை காட் பாடி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டரை விசாரிக்கச் சொன்னார்.

நடந்ததைச் சொல்லி "கல்யாணத்தப்ப எங்கப்பா போட்ட 15 பவுனில் 10 பவுன் தங்க நகை, வண்டி வாங்கத் தந்த 2 லட்ச ரூபாய் பணம், 3 லட்சத்துக்கு சீர்வரிசை செய்தார், அதை மட்டும் வாங்கித்தாங்க'ன்னு சொன்னேன்.

"என்னை விசாரிக்க மட்டும்தான் சொன்னார், எப்.ஐ.ஆர். எல்லாம் போட மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. இப்ப அவன் வேலைவாங்கித் தர்றதா 1 கோடி வரை ஏமாத்தியிருக்கான்னு போலீஸ் தேடிக்கிட்டிருக்காங்க. இவன் பிராடுன்னு, நான் ஜனவரி மாதமே சொன்னேன், அதைக் கண்டுக்கல. இப்போ அவன் குடும்பமே தலைமறைவாகிடுச்சி. அவங் கம்மா சத்துணவுல சமையல் வேலை செய்யறாங்க. பல மாசமா அவங்க வேலைக்கே போகலையாம். ஆனா அவுங் களுக்கு சட்டவிரோதமா அரசு சம்பளம் போகுது. நான் சட்டப்படி நடவடிக்கை எடுங்கன்னு புகார் தருவதற்காக கடந்த 6 மாதமா முயற்சி செய்றேன். என் புகாரை இரண்டு மாவட்ட போலீஸும் விசாரிக்கவே மாட்டேங்கிறாங்க. என்னை மட்டுமில்லை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரு டாக்டரை ஏமாத்தி திருமணம் செஞ்சிருக்கான். இதெல்லாம் தெரியாம நான் ஏமாந்துட்டேன்'' ’என்றார்.

விக்னேஷ் உட்பட அவன் குடும்பத் தினரை செல்போனில் தொடர்புகொண்ட போது ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி வேலூர் எஸ்.பி. மணிவண்ண னை தொடர்புகொண்டு கேட்டபோது, முழுத் தகவலையும் வாங்கிக்கொள்ளாமல், பெயர் மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டு "நான் விசாரிக்கிறேன்' என முடித்துக் கொண்டார்.

ஜம்னாமத்தூர் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டபோது, இரண்டு செல்நம்பரும் ஸ்விட்ச் ஆப். காவல்நிலைய தொலைபேசி எண் உபயோகத்திலேயே இல்லை என்றது.

திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் விசாரித்தபோது, “"வேலைக் குப் பணம் வாங்கி ஏமாற்றிய விக்னேஷை தேடிக்கிட்டிருக்கோம். அந்தப் பொண்ணு குடும்பத்துக்கு பணம் செலவு செய்ததா ஒரு கடிதம் அனுப்பியிருக்கான், அவன் விவகாரத்தை திசை திருப்பறான்னு நினைக்கிறோம்''’என்றார் அந்த அதிகாரி.

nkn130724
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe