மிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடந்துமுடிந்து, மேயர்கள், சேர்மன்கள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள மாநகராட்சி கள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கல்விப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கான சொத்து வரியை, அதிகபட்சமாக 100% வரை உயர்த்தியிருப்பது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

d

வரி உயர்வு எவ்வளவு?

600 ச.அடிக்கு குறைவான குடியிருப்புக்கு 25%, 601 -1,200 ச.அடி வரையிலான குடியிருப்புக்கு 50%, 1,201 -1,800 ச.அடி வரையிலான குடி யிருப்புக்கு 75%, 1,800 சதுர அடிக்கும் அதிகமான குடியிருப்புக்கு 100%, வணிகப் பயன்பாட்டுக் கட்டடத்துக்கு 100%, தொழிற்சாலை, கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு 75% வரை சொத்து வரி உயர்த்தப்படும். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, சொத்து மதிப்பு உயர்வு குறித்த குழுவின் பரிந்துரைப்படி, சென்னையில் முக்கிய பகுதிகளின் சொத்து வரி 50 முதல் 150 சதவீதமாகவும், 2011-ல் சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதுமுள்ள மற்ற மாநகராட்சிகளின் வரி விகிதங்கள் 50 முதல் 100 சதவீதம்வரை உயரக்கூடுமெனவும் தெரிகிறது.

சொந்த வீடு, வணிகக் கட்டடங்கள் வைத்திருப்பவர்களுக்கான சொத்து வரி உயர்வதால், அந்த சுமை, வாடகைக் கட்டண உயர்வில் எதிரொலிக்குமென்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், டோல் கட்டணங்கள் உயர்வால், காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்ததால், டீ, காபியிலிருந்து, உணவகங்கள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சொத்து வரி உயர்வும் இன்னொரு சுமை போல் ஏறியிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertisment

ddஅமைச்சர் விளக்கம்

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, "மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசின் 15-வது நிதி ஆணையம் கூறியதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப் பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு, நாட்டின் மற்ற நகரங்களைவிட மிகவும் குறைவு. இதற்கு முந்தைய சொத்து வரிச் சீராய்வு களின்போது, பரப்பளவு குறைவான கட்டடங்களுக்கு, குறைவாக சொத்து வரி உயர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்வதால், அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த வரி உயர்வால், 83 சதவீத குடியிருப்புகளில் வசிக்கும், அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்ப மக்களுக்கு, பெருமளவு சிரமம் ஏற்படாது'' என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisment

சொத்து வரி உயர்வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த நேரத்தில் இந்த விடியா அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது. வேலை இல்லாமல், வாழ்வாதாரமே இல்லாமல் மக்கள் இருக்கும் நிலையில் இந்த வரியை உயர்த்தி உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்ட பேரவைத் தேர்தல் வந்தாலும் வரலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமரே கூறி உள்ளார். எனவே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யப் பாருங்கள்'' என்றார்.

dd

சொத்து வரி உயர்வு அவசியமா?

சொத்து வரியை உயர்த்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவது சாத்தியமா என்று, விருத்தாசலம் முன்னாள் நகர்மன்றத் தலைவரான கண் மருத்துவர் வள்ளுவனிடம் கேட்டோம். "உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பணத்தை வசூலித்தாலே சொத்து வரியை வசூலிக்கத் தேவையிருக்காது. உதாரண மாக, விருத்தாசலம் நகராட்சிக்கு மட்டும் 1965 முதல் 2015 வரை, 206,36,16,332 ரூபாய் வரி வருவாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதேபோல தமிழகத்தி லுள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட பணத்தை வசூலித்தாலே அந்த நிதியைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புக் குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நிலுவை வைக்காமல் வரி வருவாயை வசூலிக்க வேண்டும்'' என்கிறார்.

"ஊரக நகர்ப்புற பகுதிகளுக்கு தண்ணீர், மின்சாரம் புதிய வீடு கட்ட அனுமதி இப்படி பல்வேறு விதங்களில் இருபத்தி மூன்று விதமான வரி வருவாய் அரசுக்கு மக்கள் செலுத்தி வரு கிறார்கள் இந்த வருவாயை ஒவ்வொரு ஆண்டும் பாக்கி இல்லாமல் முறையாக வசூலித்தாலே எப்போதும் புதிய வரி விதிப்பு தேவையில்லை'' என்கிறார் எழுத்தாளர் புவனகிரி ஜெயபாலன்.

- எஸ்.பி.எஸ்.,

துரை மகேஷ், தெ.சு.கவுதமன்