"ஹலோ தலைவரே, தமிழக அமைச்ச ரவையில் பரபரப்பாக எதிர்பார்க் கப்பட்ட மாற்றம் நடந்திருக்கு.''”
"ஆமாம்பா, அதுபற்றிய தனி ஸ்டோரி நம்ம நக்கீரன்ல வருது. அதனால், சங்கரமடத்தில் நடந்த புதிய நியமனம் பற்றி உனக்குத் தெரிஞ்சதை சொல்லு.''”
"ஓ.கே.ங்க தலைவரே, பழமைவாய்ந்த சங்கரமடம், பல்வேறு விவகாரங்களில் சிக்கிய வகையிலும் பிரசித்தி பெற்றதாகும். இதன் 71ஆவது பீடாதிபதியாக தற்போது ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியைச் சேர்ந்த கணேசசர்மா டிராவிட் என்பவர் தேர்வாகி இருக்கிறார். அட்சய திருதியை நாளான 30ஆம் தேதி, இவரை இளைய மடாதிபதியாக தற்போதைய மடாதிபதி விஜயேந்திரர் நியமனம் செய்கிறார். இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, தனக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை இளைய பீடாதி பதியாக்க முயன்றார். இது பற்றிய ரகசியங்களை அப்போதே நமது நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் வெளிப்படுத்தியதால் அந்த முயற்சி பலிக்கவில்லை. இருந்தும் ஆடிட்டரின் தொடர் முயற்சியால், இப்போது ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா, மடத்திற்குள் நுழைந்திருக்கிறார். இப்போது எதற்காக புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்வி, அவர்கள் தரப்பிலேயே எழுந்திருக்கிறது.''
"ஜெயேந்திரர் மறைந்த பிறகு, காஞ்சிமட சொத்துக்கள் சிலவற்றை ஆடிட்டரின் ஆதரவுடன், இப்போதைய பீடாதிபதி விஜயேந்திரரின் சொந்த பந்தங்கள் சிலர் பிரித்துக் கொண்டார்களாம். இந்த பங்கீடு விவகாரங்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதால், இந்த கணேச சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். 20 வயதைக் கடந்த ஒருவர் சங்கர மடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல்முறை என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது.''”
"சரிப்பா, நெய்வேலியில் என்.எல்.சி.யில் தொழிற் சங்கங்களுக்கான தேர்தல் நடந்திருக்கிறதே?''”
"என்.எல்.சி. நிறுவனத்தில், பல்வேறு அர சியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டும்தான் நிர்வாகத்திடம், தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றிப் பேச முடியும். எனவே, அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தேர்தல் கடந்த 25ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்த-ல் தொ.மு.ச.வின் வெற்றியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே நக்கீரனில் விரிவாக எழுதியிருந்தோம். ஒரு மினி பொதுத்தேர்தல் எப்படி நடக்குமோ? அதற்குக் கொஞ்சமும் குறையாமல், பதட்டப் பரபரப்புகளுடனே அந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போட்டி யிட்டன. எனினும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மட்டுமே அங்கீகாரத்திற்கான சங்கங்களாகத் தேர்வு பெற்றுள்ளன. கடந்தமுறை இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் தொ.மு.ச. மட்டுமே அங்கீகாரம் பெறும் என முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லப் பட்ட நிலையில்... அ.தி.மு.க. சங்கமும் அங்கீகாரம் பெற்ற செய்தி அவரை எட்டியபோது, சம்மந்தப் பட்டவர்களிடம் தனது எரிச்சலை அவர் வெளிப்படுத்தினாராம்.''”
"அதற்குக் காரணம், அங்கே தி.மு.க.வுக்கான வாக்குகள் அணி மாறி விழுந்ததுதான் என்கிறார்களே?''
"ஆமாங்க தலைவரே, இந்தத் தேர்தலில், என்.எல்.சி. ஊழியர்களின் மொத்த வாக்குகளான 6,822-ல், 6,364 மட்டுமே பதிவாகியிருந்த

"ஆமாங்க தலைவரே, இந்தத் தேர்தலில், என்.எல்.சி. ஊழியர்களின் மொத்த வாக்குகளான 6,822-ல், 6,364 மட்டுமே பதிவாகியிருந்தன. தேர் தலுக்கு முன்பு, தி.மு.க.வின் சங்கமான தொ.மு.ச., ஏற்கனவே வாங்கியபடி, 51 சத வாக்குகளைப் பெற்று, சிங்கிளாக வெற்றிபெறும் என்று மாவட்ட அமைச்சர்களும் தொ.மு.ச.வினரும் ஸ்டாலினிடம் சொல்லியிருந்த நிலையில், தொ.மு.ச.வுக்கு 39 சத வாக்குகள் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. இதில் ஷாக்கான ஸ்டாலின், மீதமிருந்த 11 சதவீத வாக்குகள் எப்படி தி.மு.க.வின் கையில் இருந்து நழுவின என்று கேட்டாராம். அதேபோல, கடந்தமுறை 711 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த அ.தி.மு.க. இந்தமுறை 1,389 வாக்குகளைப் பெற்று, அங்கீகாரத்தையும் கைப்பற்றியிருக்கிறது. அ.தி.மு.க.வுக்குக் கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் தி.மு.க.வுக்கு சொந்தமானவை என்கிறார்கள். அதேபோல் பா.ம.க.வுக்கும் 215 தி.மு.க. வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் வாக்குக் கணக்கு சொல்கிறது. இதில் ஒரு ஓட்டுக்கு மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய்வரை ஆளுங்கட்சித் தரப்பு விநியோகித்ததாம். அப்படியிருந்தும் இந்த வாக்குச் சரிவு, தி.மு.க. தரப்பை ரொம்பவே சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.''”
"நடிகர் விஜய் கட்சி, ரகசியமாக பா.ம.க. வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய தாகவும் ஒரு செய்தி உலவியதே?''”
"பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸை, நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிப் பொருளாளரான வெங்கட்ராமன் தைலாபுரம் தோட்டத்தில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும், த.வெ.க. கூட்டணிக்குள் பா.ம.க. வரவேண்டும் என்கிற நடிகர் விஜய்யின் விருப்பத்தை அவரிடம் தெரிவித்த தாகவும் கடந்தவாரம் ஒரு தகவல் ரெக்கை கட்டிப் பறந்தது. ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை என்கிறது தைலாபுரத் தரப்பு. இதுவரை தேர்தல் களத்தில் தங்களின் பலம் என்ன என்பதை நிரூபிக்காத ஒரு கட்சியோடு, ராமதாஸ் கூட்டணி பற்றிப் பேசுவாரா? அப்படியே பேசினாலும், அதிக பிரபலம் இல்லாத ஒருவருடன் அவர் பேசுவாரா? எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் டாக்டர் ராம தாஸை சந்திக்க வருபவர்களுக்கு, குறைந்தபட்சத் தகுதிகள் இருக்கவேண்டும். அந்த தகுதி, விஜய் கட்சியில் யாருக்குமே இல்லை. இது விஜய் கட்சியின் சோசியல் மீடியாவினர் பரப்பிய வதந்தி என்று அவர்கள் விளக்கமும் தருகிறார்கள்.''”
"இந்த நேரத்தில் மீண்டும் பா.ம.க.வில் பதட் டப் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அன்பு மணிக்கும் அக்கட்சியின் செயல் தலைவரான ஜி.கே.மணிக்கும் இடையிலான உரசல் இப்போது உச்சத்தை அடைந்திருக்கிறது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டார் சௌமியா அன்புமணியைத் தேர்தலில் தோற்கடித்தார். கட்சியில் தேவையின்றி அத்துமீறுகிறார் என்றெல்லாம் ஜி.கே.மணி மீது, அன்புமணி தரப்பு குற்றச்சாட்டு களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.''
"ராமதாஸுக்கும் அன்பு மணிக்கும் இடையில் புகைச்சல் உருவாகக் காரணமே, ஜி.கே. மணி மீது அன்புமணி காட்ட ஆரம்பித்த பகைமைதானாம். இப்படியாக அன்பு மணி தரப்பில் இருந்து கொடுக்கப் படும் நெருக்கடிகள், விரைவில் ஜி.கே .மணியை தி.மு.க. பக்கம் கொண்டு சென்றுவிடும் என்கிற பேச்சும், பாட் டாளிகள் தரப்பிலேயே எழுந்திருக்கிறது.''
"எடப்பாடி கூட்டிய கூட்டங் களைப் புறக்கணித்துவந்த செங்கோட் டையன், மா.செ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறாரே?''”
"பா.ஜ.க. தனக்கு கிரீடம் சூட்டும் என்ற நம்பிக்கையில், எடப்பாடியை எதிர்த்துவந்த செங்கோட்டையன், தொடர்ந்து அவரைப் புறக் கணித்து வந்தார். கடைசியாக அண்மையில் எடப்பாடி கொடுத்த கறி விருந்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் 25ஆம் தேதி நடந்த அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்திற்கு வந்தவர், அதில் அமைதியாகக் கலந்துகொண் டார். அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, எப்படி பா.ஜ.க. கூட்டணி அமைந்தது? என்று விளக்கிவிட்டு, ’இப் போதைய நிலையில் இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் இந்தக் கூட்டணியை அமைக்க நேர்ந்தது. இது தொடர்பாக கட்சியினர் மத்தியில் உள்ள அதிருப்திகளையும் சரி செய்து விடலாம். நீங்கள் உங்கள் பணிகளைச் செய்யுங்கள்’ என்று சொல்ல, கட்சிக்குள் எதிர்க்குரல் எழுப்பிவந்த செங்கோட்டையன், வேலுமணி உட்பட அனைவரும் கப்சிப் என்று உட் கார்ந்திருந்தார்களாம். இது, எடப்பாடியை நிம்மதியடையச் செய்திருக்கிறது. இடையில் எடப்பாடியுடன் முறுக்கிக் கொண்டிருந்த செங்கோட்டையன், அவர் அனுப்பிவைத்த கனமான 2 ஸ்வீட் பாக்ஸுகளை வாங்கிக் கொண்டார் என்றும், அதன் பிறகே இந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்றும் அக்கட்சியின் சீனியர்களி டையே பேச்சு அடிபடுகிறது.''”
"மாஜி பா.ஜ.க. நிர்வாகி கதிகலங்கிப்போய் நிற்கிறாரே?''
"ஆமாங்க தலைவரே, மாநிலத் தலைவர் பதவியை இழந்த அந்த பா.ஜ.க. புள்ளி, கட்சியிலேயே தேசிய அளவில் அதிகாரம் மிக்க பொறுப்பைத் தனக்குத் தரப்போகிறார்கள் என்று நம்பிக்கொண்டு இருந் தார். அதன் மூலம் தமிழக அரசியலில் மீண்டும் தன் அதிகாரத்தைச் செலுத்தலாம் என்றும் அவர் கித்தாப்பாக வலம் வந்தார். ஆனால் அமித்ஷாவும் மோடியும் அவரை ஒரு பொருட்டாகவே கருத வில்லை. சொல்லிக்கொள்ளும்படி, அவருக்குப் பெரிதாகப் பதவியையும் அவர்கள் வழங்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த அவர், ’எனக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் மனசு வைத்து, என்னை ராஜ்யசபா எம்.பி.யாக ஆக்குங்கள். கட்சியை நம்பி, என் போலீஸ் உத்தியோகத்தையும் விட்டுவிட்டு வந்து விட்டேன்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிட மும் கெஞ்சிப்பார்த்தாராம். அவர்கள் மறுத்துவிடவே, பா.ஜ.க. ஆளும் குஜராத், ம.பி. போன்ற மாநிலங்களிலும் கெஞ்சினாராம். ஒன்றும் கதைக்கு ஆகாத நிலையில், அவர் பலத்த அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள்.''”.
"டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தகுதியானவர்கள் பெறவேண்டிய பணியை, ஒருவர் தட்டிப் பறிக்க முயல்கிறார் என்கிறார்களே?''”
"டெல்லியிலுள்ள தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில், கேட்டரிங் மேனஜராக இருந்த தெய்வசிகாமணி, கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்று விட்டார். இப்போதுவரை அவரது பணியிடம் காலியாகவே இருக்கிறது. இதே இல்லத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் மகேஷ் என்கிற கணேசன், அந்த கேட்டரிங் மேனேஜர் பதவியைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளாராம். இங்கே, தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் முக்கிய வி.ய்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் தமிழ்நாடு இல்லத்தில்தான் தங்குவார்கள். அப்போது அவர்களிடம் ‘உங்களைப் போன்ற தகுதியானவர்கள் அதிகம் இல்லை. உங்களுக்கு எது தேவைப்பட்டாலும் சொல்லுங் கள். நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்று சொல்லி, அவர்களின் நட்பைப் பெற்று விடுவாராம் கணேசன். அந்த வகையில், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இவருக்காகக் காய் நகர்த்தி வருகிறார்களாம். இந்த நிலையில், அந்த கேட்டரிங் மேனேஜர் போஸ்டிங்கில், அரசின் பொதுத் துறையில் பணிபுரியும் தகுதியானவர்களில் இருந்து ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும் என்கிற குரல் தமிழ்நாடு இல்லம்வரை எதிரொலிக்கிறதாம்.''”
"சென்னைக்குள் ராக்கெட் ராஜா நுழையக்கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டிருக்கிறதே?''”
"ராக்கெட் ராஜா மற்றும் நெடுங்குன்றம் சூர்யா, லெனின் என்னும் ’ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு’ குற்றவாளி களான மூவரையும் ’செக்ஷன் 51-ஏ ஆஃப் சென்னை’ என்கிற 1800களில் பிறப் பிக்கப்பட்ட பிரிட்டிஷ்கால சட்டத் தின்படி, சென்னை நகருக்குள் நுழையக் கூடாது என்று காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டிருக்கிறார். இதில் நீதிமன்றத்தில் ஆஜராகவும், காவல்துறையில் ஆஜராகவும் மட்டும் விதிவிலக்கு அளிக் கப்பட்டிருக்கிறதாம். மோடி அரசு 2023-ல் பாரதிய நியாய சன்ஹிதா உள்ளிட்ட மூன்று புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. எனினும், சென்னை ஆணையர் பிறப்பித்த அந்த சட்டத்துக்கு மாற்றாக எந்த சட்டமும் புதிதாக வரவில்லை. இந்த சட்டம் பிரிட்டிஷ் காலத்தில், சென்னை... அவர்களின் தலைநகராக இருந்தபோது, அந்த நகருக்கு என்றே பிரத் யேகமாக உருவாக்கப்பட்ட சட்டமாகும். இப்போது, இதே போன்ற உத்தரவு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலுக்கும் பிறப்பிக்கப்பட இருக்கிறது என்கிறது காவல்துறைத் தரப்பு.''”
"த.வெ.க.வில் ஜான்ஆரோக்கிய சாமியை விட ஆதவ்அர்ஜூன் கை ஓங்குதாமே?''
"ஆமாங்க தலைவரே, வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. -த.வெ.க. கூட்டணியை உறுதிசெய்வது, தேர்தல் செலவுக்கு 500 கோடி நிதி திரட்டித் தருவது என்ற அடிப்படையில் தான் ஜான்ஆரோக்கியசாமியை தேர்தல் வியூக அமைப்பாளராக விஜய் நியமித்தாராம். ஆனால் இரண்டுமே நிறைவேறாத சூழலில், இடையே புகுந்த ஆதவ்அர்ஜூன், தனது மாமனாரான லாட்டரி மாட்டினிடம் 500 கோடிக்கு ஏற்பாடு செய்து தருவதாக விஜய்யிடம் கூறி யிருக்கிறார். தனது குடும்பத்தாருடன் சுமூகமான போக்கு இல்லாததால், விஜய்யே நேரடியாக லாட்டரி மார்ட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கிற்காக கோவைக்கு வரும் விஜய் தங்கும் ஹோட்டலில், தனது மாமனாரை வந்திருக்கச் செய்து, பேச்சு வார்த்தையை நடத்தலாமென்றும் ஆதவ்அர்ஜூன் திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டம் முன்கூட்டியே வெளியே கசிந்ததால் கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு தள்ளிப் போடப் பட்டுள்ளதாகக் தெரியவருகிறது. இந்நிலையில், த.வெ.க.வை இழுக்க பா.ஜ.க. தீவிர முயற்சி யெடுப்பதாகவும், கூட்டணியில் உடனே சேர விஜய் தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது. பா.ஜ.க.வின் நிதியும், மதியுமே இதை சாதிக்குமென்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுது!
"2020-ல் நடந்த அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில், முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்திருக்கிறதே?''”
"முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு 2020 மார்ச்சில் நடந்தது. அதன் முடிவுகள் அதே வருடம் டிசம்பரில் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 18 இடங்களுக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் அத்தனை பேரின் சான்றிதழ்களை சரிபார்க்காமல், தங்கள் விருப்பப்படி 18 பேரை மட்டும் தேர்வு செய்துவிட்டு, மற்றவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனராம். இந்த போஸ்டிங் கிற்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை படிப்பில் தமிழை மொழிப்பாடமாக பயின்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பணி நியமன தேர்வில், இந்த விதி பின்பற்றப்படவில்லை என்கிறார்கள். குறிப்பாக, தொழில் நுட்பக் கல்வியில் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது இல்லை. அப்படி இருந்தும், அந்த பாடத்தை படித்ததாகக் காட்டி, 4 பேரை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பணியிடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் மொழிப்பாடம் பயின்றதாக ஒப்புகைக் கடிதமும் கொடுத்துள்ளனர். இதில் மோசடி அரங்கேற்றியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.''”
இது சம்பந்தமாக எனக்குக் கிடைத்த செய்தியை நானும் இங்கே பகிர்ந்துக்கறேன். மேற்கண்ட தேர்வின் மூலம் தொல்லியல் அலுவலர் பணி கிடைக்காத வடிவழகன் என்பவர், இது தொடர்பாக 2021-ல் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு, சமரச மையத்திற்கு கடந்த 2024 டிசம்பரில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு நீதி கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த 17ஆம் தேதி வந்தபோது, வடிவழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்த இந்தப் பணி நியமனக் குளறுபடிகளை, தி.மு.க. அரசு சரி செய்யுமா? என்கிற கேள்வி தொல்லியல் துறையில் எழுந் துள்ளது. வழக்கு தொடுத்த வடிவழகன், திருக்குவளையில் உள்ள கலைஞர் நினைவில்லத்தின் காப் பாளராக இருந்த மறைந்த சந்தானத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.”
___________
இறுதிச் சுற்று!
ஆணவக் கொலை! உறுதி செய்யப்பட்ட தண்டனை!
நக்கீரனின் புலனாய்வால் வெளிக்கொண்டுவரப்பட்ட கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, ஏப்ரல் 28 திங்களன்று, உறுதி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2003ஆம் ஆண்டில், கண்ணகி - முருகேசன் இருவரும் சாதி எதிர்ப்புத் திருமணம் செய்த காரணத்தால், கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விஷம் கொடுத்தும், எரித்தும் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை நக்கீரன் வெளி உலகுக்கு கொண்டுவந்ததோடு, தொடர்ச்சியாக புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டு வந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்காக பிரபல வழக்கறிஞர் ப.பா.மோகனும், வழக்கறிஞர் ரத்தினமும் தீவிரமாக வாதிட்டனர். இவ்வழக்கில் முதலில் கடலூர் சிறப்பு நீதிமன்றம், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. மேல்முறையீட்டில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 9 பேருக்கான ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தங்களது தண்டனையை ரத்து செய்யக்கோரி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏப்ரல் 28, திங்களன்று வழங்கிய தீர்ப்பில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதோடு, மேல்முறையீட்டு மனுக்களை ரத்து செய்தது.
-கீரன்