Advertisment

ஓட்டுக்கும் நோட்டுக்கும் பதவி உயர்வு! - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அ.தி.மு.க. அரசு

cc

மிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஐந்துவகையான உள் இட ஒதுக்கீடு (Horizontal Reservations) பின்பற்றி, மதிப்பெண் அடிப்படையில்தான் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து அறநிலையத் துறை, பத்திரப்பதிவுத் துறை, வணிகவரித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளில் பணி நியமனம் நடை பெறுகிறது. ஆனால், அதே அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்காமல் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையில் சீனியாரிட்டியை வழங்கிவிட்டு பிறகு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் புரமோஷன் வழங்கப்படுகிறது. இதனால், அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப் பவர்கள்கூட சீனியாரிட்டியில் பின் னுக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

Advertisment

cc

உதாரணத்துக்கு, 2012 - ஆம் ஆண்டு 320 அரசு காலிப்பணியிடங்களுக்காக டி.என். பி.எஸ்.சி தேர்வு எழுதிய 7 லட்சத்துக்கு மேற் பட்டவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் ரேங்கில் பணியில் சேர்ந்த ஒருவர், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியில் மிக

மிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஐந்துவகையான உள் இட ஒதுக்கீடு (Horizontal Reservations) பின்பற்றி, மதிப்பெண் அடிப்படையில்தான் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து அறநிலையத் துறை, பத்திரப்பதிவுத் துறை, வணிகவரித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளில் பணி நியமனம் நடை பெறுகிறது. ஆனால், அதே அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்காமல் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையில் சீனியாரிட்டியை வழங்கிவிட்டு பிறகு, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் புரமோஷன் வழங்கப்படுகிறது. இதனால், அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப் பவர்கள்கூட சீனியாரிட்டியில் பின் னுக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

Advertisment

cc

உதாரணத்துக்கு, 2012 - ஆம் ஆண்டு 320 அரசு காலிப்பணியிடங்களுக்காக டி.என். பி.எஸ்.சி தேர்வு எழுதிய 7 லட்சத்துக்கு மேற் பட்டவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் ரேங்கில் பணியில் சேர்ந்த ஒருவர், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு பதவி உயர்வுபெற தகுதி பெறவில்லை.

ஆனால், 2 லட்சத்துக்கு மேற்பட்ட ரேங்கில் இருந்தவர் 320-வது ரேங்கிற்குள் வந்து பணியில் சேர்ந்து ரொட்டேஷன் ரோஸ்டரால் சீனியாரிட்டியிலும் முன்னுக்கு வந்து தற்போது பதவி உயர்வுக்கும் தகுதி பெற்றுவிட்டார்.

Advertisment

இப்படி பாதிக்கப்பட்ட பலர், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தார்கள். இதனை, விசாரித்த உயர்நீதிமன்றம் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி பட்டியலின்படி சீனியாரிட்டி வழங்கக்கூடாது என்று 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை, எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை 4 வாரத்திற்குள் அமல்படுத்துமாறு உத்தரவிட்ட னர். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாததால் தான் தலைமைச்செயலாளர், டி.என்.பி.எஸ்.சி செயலாளர், நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கண்டனமும் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இவ்வளவு வாங்கிக்கட்டியும், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்காமலேயே இனசுழற்சியை பின்பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. குறிப்பாக, சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்காமலேயே பத்திரப்பதிவுத்துறையில் புரமோஷனுக்கான தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டுவருவது மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், "புரமோஷனுக்கு தலா 10 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்வரை பேரம் பேசப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது'’’ என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

cc

இதுகுறித்து, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சங்கரை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, “""இன சுழற்சியை பின் பற்றி சீனியாரிட்டியை வழங்கக்கூடாது என்ற வழிமுறைகளை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. இது தற்காலிக புரமோஷன் பட்டியல்தான். ஒருவேளை, உச்சநீதிமன்ற உத்தரவுக்கான வழிகாட்டு நெறிமுறை களை அரசாங்கம் கொடுத்துவிட்டால் தற்காலிக புரமோஷனை திரும்பப் பெற்றுவிடுவோம் என்ற நிபந்தனை களோடுதான் புரமோஷன் வழங்கப்பட இருக்கிறது''’என்றார்.

அவரிடம், ‘""ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளன. முதல் தீர்ப்பின்படி சீனியாரிட்டியை பின்பற்றிய பிறகு, உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின்படி 20 சதவீத எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் நிரந்தரமாகவே புரமோஷன் கொடுத்துவிட்டால் மீண்டும் குழப்பங்கள் வராதே? தற்காலிக புரமோஷன் கொடுத்துவிட்டு பிறகு, அதை பிடுங்கிக்கொண்டால் மீண்டும் குழப்பங்கள் தொடருமே?'' என்று நாம் கேட்டபோது, ""நீங்கள் சொல்வதுபோல் செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால், வழிமுறைகள் வரும்வரை காலதாமதம் ஆகிவிடும். நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலும் வந்துவிடும்''’என்றார்.

""அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக எம்.பி.சி. மக்களை ஏமாற்றுவதுபோல் அல்லவா இருக்கிறது?''’என்றபோது, ""அப்படியெல்லாம் இல்லை. நாளையே, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானித்துவிட்டு பதவி உயர்வை வழங்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டால் அதன்படி செய்வோம். அதேபோல், 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி புரமோஷன் வழங்க எங்கள் பெயரை பயன்படுத்தி லஞ்சம் பேரம் நடத்தி வசூலிப்பது தவறு. எங்கள் துறைக்கும் வசூலுக்கு எந்த தொடர்புமில்லை''’என்றார் விளக்கமாக.

நியாயமான புரேமோஷன் முறை கேட்டு வழக்கு தொடுத்தவர்களோ, ""எம்.பி.சி.க்கான 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி. அமல் படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை. காரணம், அது அவர்கள் பல வருடங்களாக போராடி பெற்ற உரிமை. ஆனால், சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துவிட்டுதான் புரமோஷன் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்பது விதிமுறை. உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை கண்டுகொள்ளா மல் பணம் பேரம் நடத்தி மற்றொரு தீர்ப்பை மட்டும் அமல்படுத்தி எம்.பி.சி. மக்களை ஏமாற்றக்கூடாது''’என்கிறார்கள்.

ஓட்டுக்காகவும் நோட்டுக்காக வும் மக்களை குழப்பி ஏமாற்றாமல், உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்பு களையும் அமல்படுத்தி நேர்மையான சீனியாரிட்டிகளையும் புரமோஷன் களையும் வழங்கவேண்டும் அ.தி.மு.க. அரசு.

nkn270221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe