Advertisment

5 ஆண்டுகளாக தள்ளிப்போகும் புரமோசன்! -விரக்தியில் எஸ்.பி.க்கள்!

s

குரூப்-1 தேர்வெழுதி தங்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருமே ஐ.ஏ.எஸ். அந்தஸ்துடன் உயரதிகாரிகளாக பணியாற்ற, ஆண்டுகள் பல கடந்தும் தங்களுக்கான ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைக்காததால் கடும் மனஉளைச்சலில் உள்ளனர் 2002 ஆம் ஆண்டு குரூப்-1 மூலம் தேர்வான தமிழக காவல்துறை அதிகாரிகள்.

Advertisment

குரூப்-1 தேர்வுகள் மூலம் நியமனம் செய் யப்படும் அதிகாரிகளுக்கு மாநில அளவில் அவ்வப்போது எழும் காலிப் பணியிடங்களுக் கேற்ப, குறிப்பிட்ட ஆண்டுகளுக

குரூப்-1 தேர்வெழுதி தங்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருமே ஐ.ஏ.எஸ். அந்தஸ்துடன் உயரதிகாரிகளாக பணியாற்ற, ஆண்டுகள் பல கடந்தும் தங்களுக்கான ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைக்காததால் கடும் மனஉளைச்சலில் உள்ளனர் 2002 ஆம் ஆண்டு குரூப்-1 மூலம் தேர்வான தமிழக காவல்துறை அதிகாரிகள்.

Advertisment

குரூப்-1 தேர்வுகள் மூலம் நியமனம் செய் யப்படும் அதிகாரிகளுக்கு மாநில அளவில் அவ்வப்போது எழும் காலிப் பணியிடங்களுக் கேற்ப, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வு வழங்கப்பட்டாலும், பத்தாண்டு கள் கழித்து அவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அந்தஸ்துகள் வழங்கப்படுவது வழக்கம்.

Advertisment

ஆனால், தங்களோடு பணியில் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருமே 5 ஆண்டுகளுக்கு முன்பே ஐ.ஏ.எஸ். அந்தஸ் தோடு பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், 5 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட தங்களுக் கான ஐ.பி.எஸ். அந்தஸ்து கிடைக்காததால், பெரும் மனஉளைச்சலில் உள்ளனர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சில உயரதிகாரிகள்.

முறைப்படி பார்த்தால் குறிப்பிட்ட 2002 பேட்ச் குரூப் - 1 காவல்துறை அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்கு மத்திய உள் துறை மூலம் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் 23 பெண் அதிகாரிகள் வரதட்சணை தடுப்பு டி.எஸ்.பி.க்களாக நேரடி நியமனம் மூலம் தேர்வுசெய்யப்பட்டிருந்த நிலையில், காலிப் பணியிடங்கள் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

"கடந்த 2019ஆம் ஆண்டு குரூப்- 1 அதிகாரிகளுக்கான 3 காலி பணியிடங்கள் இருக்கும்போதே அதை நிரப்பியிருந்தால் இந்த சூழ்நிலையே வந்திருக்காது. 2002 பேட்சிலும், அவர்களுக்கு பின்னாலும் வருவாய்த் துறையில் தேர்வான பலரும் எப்போதோ ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டனர். அப்போது, உள்துறையிலிருந்த சில அதிகாரிகளின் மெத்தனத்தால் 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த 2002 பேட்சை சேர்ந்த 10 காவல்துறை அதிகாரி களின் ஐ.பி.எஸ். கனவு நிறைவேறாமல் அப்படியே உள்ளது''’என்கின்றனர் மத்திய உள்துறை அதிகாரிகள்.

தற்போது, குரூப்-1 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான 13 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, மதிப்பெண் அடிப் படையிலோ அல்லது எப்போதும்போல சாதி அடிப்படையிலோ தமிழக அரசு மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்கும் பட்சத்தில், 2002 பேட்சை சேர்ந்த 10 பேருமே ஐ.பி.எஸ். அந்தஸ்து பெறத் தகுதியுடையவர்கள் என்பதால், காலம் கடந்த பின்பும் முதல்வரின் கடைக்கண் பார்வைக்காகக் காத் திருக்கிறார்கள் அந்த காவல்துறை அதிகாரிகள்.

nkn080223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe