Advertisment

பெருக்கெடுக்கும் கஞ்சா, லாட்டரி! காவல்துறையில் கருப்பு ஆடுகள்!

ss

மிழகத்தில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. கஞ்சா புழக்கத்திற்கு வருவதற்கு காவல்துறையும் முக்கிய காரணமென்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

Advertisment

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, 7 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் ஒருவரை தாக்கிய வீடியோ வைரலாகியது. காவல் துறையினர் ஒத்துழைப் புடன்தான் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் குற்றம்சாட்டப்படுவதால் பொதுமக்கள் புகாரளிக்

மிழகத்தில் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெருகிவிட்டது. கஞ்சா புழக்கத்திற்கு வருவதற்கு காவல்துறையும் முக்கிய காரணமென்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

Advertisment

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, 7 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் ஒருவரை தாக்கிய வீடியோ வைரலாகியது. காவல் துறையினர் ஒத்துழைப் புடன்தான் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் குற்றம்சாட்டப்படுவதால் பொதுமக்கள் புகாரளிக்க முன் வருவதில்லை' என்று கூறப் பட்டது.

Advertisment

d

இந்த வழக்கு விசாரணை யில் அரசு தரப்பில், "கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா கடத்தல் வழக்கில் வடமாநிலங்களைச் சேர்ந்த 2,486 பேரை கைது செய்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, காரில் கடத்தி வரப்பட்ட 423 கிலோ கஞ்சாவை, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல, சிவகங்கை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 144 கிலோ கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர். சமீபத்தில் திருவள்ளூரில் கடத்தப் பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பிடித்துள்ளோம்' என்று பதிலளிக்கப்பட்டது. கஞ்சா விவகாரத்தில் தமிழக அரசிற்கு நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியதால், தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத் துக்கு பின் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலும் ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர்களால்தான் கஞ்சா விற்பனைக்கு கொண்டுவரப் படுகிறது. ஆந்திரா, ஒடிசா எல்லையிலுள்ள பெர்ஹாம்பூர் பகுதியில்தான் ராம்ஜி நகரைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சொந்த மாக வீடு வாங்கி தங்கியிருந்து, கஞ்சாவை தமிழகத்திற்குள் பேருந்து, ரயில் மூலம் கொண்டு வருகிறார்கள். புதுக்கோட்டை யை சேர்ந்த ஒரு பெண் தலைமையிலான குழுவுடன் இணைந்து தென் தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் லாட்டரி விற் பனையும் தமிழகத்தில் கொடிகட் டிப் பறக்கிறது. சென்னையிலுள்ள முக்கியமான இரண்டு வியாபாரி கள், தமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த நெட்வொர்க்கையும் இணைத்து பெரிய சாம்ராஜ் யத்தை உருவாக்கியுள்ளனர். மேலிடத்திலிருந்து கடைசி ஆட் கள் வரை அனைவரையும் கவ னித்துவிட்டு இத்தொழிலை நடத்து கின்றனர். முதல்வரின் ஆலோச னைக் கூட்டத்திற்கு பிறகு லாட் டரி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். எனி னும் முக்கிய விற்பனையாளர்கள் கைது செய்யப்படவில்லை. கஞ்சா, லாட்டரியைக் கட்டுப்படுத்த காவல் துறை எடுக்கும் நடவடிக்கை முழுவெற்றி பெறாததற்கு காரண மும் காவல்துறையே என்கிறார்கள்.

கஞ்சாவைத் தொடர்ந்து போதை மாத்திரை, போதை ஊசி கள் வரை மாணவர்கள், இளை ஞர்களின் போதைப் பயன்பாடு கள் நீண்டுகொண்டு செல்கின்றன. காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளைக் களையெடுத்து, முழு வீச்சில் தமிழ்நாடு அரசு செயல் பட்டால்தான் கஞ்சா, லாட்டரி புழக்கத்தை தமிழ்நாட்டில் கட் டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

nkn150524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe