Advertisment

மாணவிகளிடம் அத்துமீறும் பேராசிரியர்கள்! -புதுவை பல்கலைக்கழக சர்ச்சை!

pondy


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலரால் பாலியல் சுரண்டல் நடக்க, கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பல்லைக்கழக துணைவேந்தர் அறையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத் தை போலீஸ் துணையுடன் ஒடுக்கமுயன்றதாக, புதுவையிலுள்ள என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் பிரவீன், "புதுச்சேரி பல்கலைக் கழகத் தின்கீழ் காரைக்கால் வளாகம் செயல்படுகிறது. இங்கு 500 பேர் படிக் கின்றனர். இந்த வளாகத்தின் தலைவராக இருப் பவர் பேராசிரியர் மாதவய்யா. இவர் குறித்து 20 நாட் களுக்கு முன்பு ஒரு ஆடியோ சோசி யல் மீடியாவில் வெளியானது. அந்த ஆடியோ வில் முதுகலை மாணவி ஒருவரிடம் இளங்கலை படித்த ஒரு மாணவி அழுதுகொண்டே பேசுகிறார். அதில், "எனக்கு அந்தப் பேராசிரியர் பாலியல் தொந்தரவு தருகிறார், இரவில் வீடியோ காலில் வந்து என் நிர்வாண படங்களைக் கேட்கிறார், தப்புத் தப்பாக மெசேஜ் செய்துள்ள


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலரால் பாலியல் சுரண்டல் நடக்க, கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பல்லைக்கழக துணைவேந்தர் அறையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத் தை போலீஸ் துணையுடன் ஒடுக்கமுயன்றதாக, புதுவையிலுள்ள என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் பிரவீன், "புதுச்சேரி பல்கலைக் கழகத் தின்கீழ் காரைக்கால் வளாகம் செயல்படுகிறது. இங்கு 500 பேர் படிக் கின்றனர். இந்த வளாகத்தின் தலைவராக இருப் பவர் பேராசிரியர் மாதவய்யா. இவர் குறித்து 20 நாட் களுக்கு முன்பு ஒரு ஆடியோ சோசி யல் மீடியாவில் வெளியானது. அந்த ஆடியோ வில் முதுகலை மாணவி ஒருவரிடம் இளங்கலை படித்த ஒரு மாணவி அழுதுகொண்டே பேசுகிறார். அதில், "எனக்கு அந்தப் பேராசிரியர் பாலியல் தொந்தரவு தருகிறார், இரவில் வீடியோ காலில் வந்து என் நிர்வாண படங்களைக் கேட்கிறார், தப்புத் தப்பாக மெசேஜ் செய்துள்ளார். நான் அனுப்பவில்லை யென்றால் இன்டர்னல் மார்க் போடமாட்டேன் என மிரட்டுகிறார். என்னைப் போல் பல மாணவிகளையும் மிரட்டுகிறார். இவரால் 30 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை நான் வீட்டில் சொன்னால் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள். நான் படிக்கணும், இதுக்கு நீங்க ஒரு வழிசொல்லுங்க அக்கா'’என அழுதுகொண்டே பேசும் ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Advertisment

அதேபோல் புதுச்சேரி மெயின் கேம்பஸில் புவிஅறிவியல் துறை பேராசிரியர் சைலேந்திரா சிங், அரைகுறை ஆடையுடன் நடந்து அருவருப்பாக நடந்துகொள்கிறார் என ஒரு மாணவி புகார்தந்தார். புகார் தந்தவரையே குற்ற வாளியாக சித்தரிக்கும் வேலைகள் நடந்தன. உமன் ஸ்டடிஸ் துறை யைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி யொருவர், பேராசிரியர் ஜிங்சூ மீது பல்கலைக்கழக இன்டர்னல் கம்ப்ளெய்ண்ட் கமிட்டி (ஐ.சி.சி.)யில் புகார் தந்தாங்க. விசாரணை நடக்குது, புகார் உறுதியாகுது. அவரை இட மாற்றம் மட்டும் செய்யறாங்க, அவ்வளவுதான் நடவடிக் கைன்னு சொல்றாங்க. 

pondy1

காரைக்கால் வளாகத் தலைவர் மாதவய்யா மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வெளியான ஆடியோ குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு விசாரணை கமிட்டியமைத்து விசாரித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இளங்கலை மாணவி முதுகலை மாணவியிடம் பேசிய ஆடியோவை சீனியர் மாணவி, பெண் பேராசிரியர் ஒருவரிடம் தந்துள்ளார், அது அப்படியே இருந்துள்ளது. இளங்கலை மாணவியின் படிப்பை நிறுத்திவிட்டனர் அவரது பெற்றோர். அதன்பின் அந்த முதுகலை மாணவி, மாதவய்யாவின்கீழ் ஆராய்ச்சிப் படிப்பு மாணவியாகச் சேர்ந்துள்ளார், அங்கேயே பணியும் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது அந்த ஆடியோ வெளியாகியுள்ளது என தெரியவந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு உண்மையா என விசாரணை நடத்தாமல், ஆடியோ ஏன் வெளியாச்சு என மிரட்டியிருக்கிறதாகத் தெரியவருது. பல பாலியல் புகார்கள் வந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளுக்கு பாதுகாப்பு தரவில்லை. அதனால்தான் போராட்டம் நடந்தது. பேச்சுவார்த்தை எனச்சொல்லி மாணவப் பிரதிநிதிகளை உள்ளே அழைத்துச்சென்றனர், அங்கே துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்களை 4 மணி நேரம் அடைத்துவைத்துவிட்டு, துணைவேந்தர் உட்பட உயரதிகாரிகளை பின்பக்கமாக பாதுகாப்பாக அனுப்பிவிட்டனர். விடியற்காலை 2.30 மணிக்கு இது எதுவும் தெரியாமல் போராடிக்கொண்டிருந்த மாணவ- மாணவிகளில், போராட்டத்தில் முன்நின்ற 6 மாணவிகள் உட்பட 24 பேரை காவல்துறை அடித்து உதைத்து இரண்டு வேன்களில் ஏற்றிக்கொண்டு புதுவையைச் சுற்றிவந்து டார்ச்சர் செய்தவர்கள் காலையில்தான் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து வழக்குபோட்டு இரவு ஜாமீனில் அனுப்பினர்''’ என்றார் தி.மு.க. மகளிரணி மாநில அமைப்பாளர் காயத்ரிஸ்ரீகாந்த்.

 பல்கலைக்கழக ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரியான புதுவை எஸ்.பி. வம்சிதா ரெட்டி, ரவுடிகள் தடுப்புப் பிரிவின் பொறுப்பையும் கவனிக்கிறார். இவர் எஸ்.டி.எஃப். மற்றும் குற்றப் பிரிவு போலீஸாருடன் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை அடித்து உதைத்துள்ளார். இவர் ஏன் இப்படி செய்யவேண்டும் என்பதை விசா ரித்து சம்பந்தப்பட்ட அதிகாரி, காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

புதுச்சேரி மட்டுமல்லாமல் வெளிமாநில, வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ- மாணவிகளே இங்கு அதிகளவு படிக்கின்றனர். இன்டர்னல் மதிப்பெண்ணைக் காட்டி பேராசிரியர்கள் சிலர் மாணவிகளை தங்களது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திவருகின்றனர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்கவேண்டிய துணைவேந்தர் பிரகாஷ்பாபு கண்டுகொள்வதில்லை என்கிறார் கள். துணைவேந்தர் மற்றும் எஸ்.பி. இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், இதனால் இருவரும் திட்டமிட்டு மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தி விவகாரத்தை திசைதிருப்பியுள்ளனர் என சந்தேகிக்கின்றனர். 

போலீஸார் தற்போது பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடிதந்து மாதவய்யாவை சஸ்பெண்ட் செய்யச் சொல்லி வருகிறார்கள். முதல்கட்டமாக காரைக்கால் பிரிவு ஹெட்டாக இருந்தவரை மாற்றியுள்ளனர். அடுத்து?

புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என். ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட் டணிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியதால்,  டெல்லியில் இருந்து பா.ஜ.க.வைச் சார்ந்த புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் மாணவர் களிடம் சமாதானம் பேச சொன்னது. 

இந்நிலையில், மாணவ அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும், ஐ.சி.சி. பிரதிநிதிகள் தேர்தல் நடத்தப்படும்' என வாக்குறுதிகள் தந்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe