போலி சான்றிதழுக்கு பேராசிரியர் போஸ்ட்! -அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை!

annauniversity

"தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ்கள்’ குறித்து விசாரணை செய்யப்போகும் அண்ணா பல்கலைக்கழக பேரா சிரியர்களே போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணிஉயர்வு பெற்றவர்கள்தான். இவர்கள், எப்படி நியாயமாக விசாரிப்பார்கள்?' என்ற திடுக்கிடும் தகவல் கிடைக்க, மேலும் விசாரிக்க ஆரம்பித்தோம்.…

anna

சி.ஏ.எஸ். (Career Advancement Scheme) திட்டத்தின்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு மையங்கள் மற்றும் 16 உறுப்புக்கல்லூரிகளில் துறைரீதியான பணி உயர்வு 9 ஆண்டு களுக்குப்பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டுதான் நடந்தது. உதவிப் பேராசிரியர்கள், சீனியர் உதவிப் பேராசிரியர்கள், செலக்ஷன் கிரேடு 1 உதவிப்பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேரா சிரியர்கள், மூத்த பேராசிரியர்கள் என ஆறு விதமானவர்கள் விண் ணப்பிப்பார்கள். ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதி முறைப்படிதான் பணி உயர்வு வழங்கப்படும். இதில்தான் முறை கேடுகள் நடந்துள்ளன. "இதற்கு முக்கியக்காரணமே அப்போதைய ரெக் ரூட்மெண்ட் (தங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் உண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்) இயக்குனரும் தற்போதைய அண்ணா பல்கலைக்கழக

"தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிச் சான்றிதழ்கள்’ குறித்து விசாரணை செய்யப்போகும் அண்ணா பல்கலைக்கழக பேரா சிரியர்களே போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணிஉயர்வு பெற்றவர்கள்தான். இவர்கள், எப்படி நியாயமாக விசாரிப்பார்கள்?' என்ற திடுக்கிடும் தகவல் கிடைக்க, மேலும் விசாரிக்க ஆரம்பித்தோம்.…

anna

சி.ஏ.எஸ். (Career Advancement Scheme) திட்டத்தின்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு மையங்கள் மற்றும் 16 உறுப்புக்கல்லூரிகளில் துறைரீதியான பணி உயர்வு 9 ஆண்டு களுக்குப்பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டுதான் நடந்தது. உதவிப் பேராசிரியர்கள், சீனியர் உதவிப் பேராசிரியர்கள், செலக்ஷன் கிரேடு 1 உதவிப்பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேரா சிரியர்கள், மூத்த பேராசிரியர்கள் என ஆறு விதமானவர்கள் விண் ணப்பிப்பார்கள். ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் விதி முறைப்படிதான் பணி உயர்வு வழங்கப்படும். இதில்தான் முறை கேடுகள் நடந்துள்ளன. "இதற்கு முக்கியக்காரணமே அப்போதைய ரெக் ரூட்மெண்ட் (தங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் உண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்) இயக்குனரும் தற்போதைய அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு இயக்கு னருமான பேராசிரியர் வெங்க டேசன்தான்' என்று குற்றஞ் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களோ, ""கவிதா என்பவர் சி.இ.ஜி. வளாகத்தில் இ.இ.இ. துறையில் உதவிப் பேராசிரியராக 2003-ஆம் ஆண்டு சேர்கிறார். இதற்குமுன் எங் கேயுமே வேலை செய்ததாக விண்ணப்பத்தில் குறிப்பிட வில்லை. ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதால் 2008-ஆம் ஆண்டு சீனியர் உதவிப் பேராசிரியராக பணி உயர்வு பெறுகிறார். ஆனால், 2017-ஆம் ஆண்டு கேரியர் அட்வான்ஸ் மெண்ட் ஸ்கீமில் நேரடியாக பேராசிரியர் பணி உயர்வுக்காக விண்ணப்பித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் களையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத் தில் சேரும்போதும், 2017-ஆம் ஆண்டு பணி உயர்வுக்கு விண் ணப்பிக்கும் கடைசி தேதியான 2017 ஜூலை 27 மாலை 5 மணிவரை கூட எந்த முன் அனுபவத்தையும் குறிப்பிட வில்லை சீனியர் உதவிப்பேராசிரியர் கவிதா. விண்ணப்பித்த ஆன்லைன் போர்ட்டலை குளோஸ் பண்ணிவிட்டார் ரெக்ரூட்மெண்ட் இயக்குனர் வெங்கடேசன். ஆனால், 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்ததாக போலி சர்டிஃபிகேட்டை வாங்கி வந்த கவிதாவுக்காக, 2018 செப்டம்பர் 7-ந் தேதி annaநேர்முகத் தேர்வு நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் அப்ளிகேஷன் வெப்-போர்ட்டலை தன்னிடம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த பாஸ்வேர்டை வைத்து சட்டத்துக்குப்புறம்பாக ஓப்பன் செய்திருக்கிறார் ரெக்ரூட்மெண்ட் இயக்குனர் வெங்கடேசன். சட்டத் துக்குப் புறம்பாக, தாமதமாக இணைக்கப்பட்ட அந்த போலி அனுபவச் சான்றிதழை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பங்களோடு இணைத்துவிட்டார் ரெக்ரூட்மெண்ட் சேர்மன் உமாமகேஸ்வரி. இதன்மூலம் அனுபவம் இல்லாத கவிதாவை பேராசிரியர் ஆக்கிவிட்டார்கள். இதைப் பயன்படுத்தி அவர் அடிஷனல் போஸ்டிங்குகளையும் வாங்கிவிட்டார்.

இது, சர்ச்சையானதால் முன்னாள் பதிவாளர் ஜெயராமனை வைத்து ஒருநபர் கமிட்டி விசாரணை நடத்தப்பட்டது. இதன்மூலம் கவிதா மோசடி செய்ததை அவர் 7 பக்கத்துக்கு ரிப்போர்ட்டாக கொடுத்ததால் பணி உயர்வை மட்டும் திரும்பப்பெற்றார்களே தவிர போலிச்சான்றிதழ் கொடுத்ததற்காக துறைரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடந்தையாக இருந்த வர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான அரியலூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் கோகுல் என்பவர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணிஉயர்வு பெற்றதை கண்டுபிடித்து புகார் கொடுத்தோம். அவர், மோசடியாக பெற்ற பணி உயர்வைத் திரும்பப் பெற்றார்களே தவிர துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பண்ருட்டியிலுள்ள அரசு அண்ணா பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் சீனிவாசன், சுகன்யா ஆகி யோரின் மோசடி யைக் கண்டு பிடித்து புகார் கொடுத்தோம். மோசடி பணி உயர்வைக்கூட திரும்பப்பெறாமல் அவர்களை ரிசைன் பண்ணச் சொல்லி அனுப்பிட்டாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ரிசைன் பண்ணிட்டு அந்த மோசடி பணி உயர்வை பயன் படுத்தி என்.ஐ.டி.யில் இதைவிட அதிக சம்பளத்துக்கு பெரிய வேலையில் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் 15 பேர் பட்டியலை வெளியிட்டோம். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால், உண்மை யான பேராசிரியர் களுக்கான பணி உயர்வும் சம்பளமும் பாதிக்கப்படுகிறது'' என்றனர்.

இதுகுறித்து, குற்றஞ்சாட்டப் பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் வெங்கடேசனிடம் நாம் கேட்டபோது, ""எனக்கும் இச் சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடை யாது. வெப் போர்ட்டலை நான் ஓப்பன் செய்யவில்லை. கடைசிநேரத்தில் கவிதா தனது எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்டை யார் மூலமாக கொடுக்கவேண்டுமோ அவர் மூலம் ரெக்ரூட்மெண்ட் சேர் மன் உமாமகேஸ்வரியிடம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

நாம், சேர்மன் உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, “""அப்போதைய பதிவாளர் மூலம் கவிதா எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்டை கொண்டு வந்து கொடுத்ததால் பேரா சிரியர் ஆக்கினோம்'' என்றார்.

அப்போதைய பதிவாளர் குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, ""ஒரு கடிதம் வருகிறது என்றால் அதை ஃபார்வேர்டு செய்வதுதான் பதிவாளரின் வேலை. அந்தக் கடிதத்தை பரிசீலிப்பதா? வேண்டாமா? என்பதை ரெக் ரூட்மெண்ட் இயக்குனர் வெங்கடேசனும் கமிட்டி சேர்மன் உமா மகேஸ்வரியும்தான் முடிவு செய்திருக்கவேண்டும்'' என்றார்.

குற்றஞ்சாட் டப்பட்ட உதவிப் பேராசிரியர் கவிதா வை தொடர்பு கொண்ட போது, ""மீண்டும் லைனில் வருகிறேன்'' என்றவர் லைனில் வர வில்லை.

இப்படிப்பட்ட பேராசிரியர்கள்தான் முறைகேடான மாணவர்கள் உருவாகவும் காரணமாக இருக்கிறார்கள்.

-மனோசௌந்தர்

nkn260220
இதையும் படியுங்கள்
Subscribe