பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆராய்ச்சிக் கல்வி பயின்றுவரும் மாணவி அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமாரிடம் 27 வயதுடைய பெண் ஒருவர் சமீபத்தில் புகா ரளித்துள்ளார். அதில் 2018-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பின்னர் முதுகலையும் படித்ததாகவும், அப்போது அதே துறையில் உதவிப் பேரா சிரியராக பணியாற்றிய ராஜா பாலியல்ரீதியாக பழகி வந்ததாகவும் பின்னர் இதுகுறித்து வீடியோ உள்ளதென என மிரட்டிவருகிறார் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ராஜாவை கடந்த மே 30-ஆம் தேதி இரவு காவல்துறையினர் கைதுசெய்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத ராஜா தீவிர விசாரணைக்குப் பிறகு மாணவியுடன் தனிமையில் இருந்ததை ஒ
பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆராய்ச்சிக் கல்வி பயின்றுவரும் மாணவி அளித்த புகாரின்பேரில் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமாரிடம் 27 வயதுடைய பெண் ஒருவர் சமீபத்தில் புகா ரளித்துள்ளார். அதில் 2018-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பின்னர் முதுகலையும் படித்ததாகவும், அப்போது அதே துறையில் உதவிப் பேரா சிரியராக பணியாற்றிய ராஜா பாலியல்ரீதியாக பழகி வந்ததாகவும் பின்னர் இதுகுறித்து வீடியோ உள்ளதென என மிரட்டிவருகிறார் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ராஜாவை கடந்த மே 30-ஆம் தேதி இரவு காவல்துறையினர் கைதுசெய்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத ராஜா தீவிர விசாரணைக்குப் பிறகு மாணவியுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக்கொண்டார். வழக்குப் பதிவு செய்து அவரை மே 31-ஆம் தேதி இரவு சிறைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து மாணவியிடம் போலீசார் விசாரித் ததில், இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும்போது ராஜா மாணவிக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்துள் ளார். இதற்காக அந்த மாணவிக்காக அவர் தாராளமாகச் செலவுசெய்துள் ளார். யாருமில்லாத நேரத்தில் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலில் மயக்க மருந்து கொடுத்து பாலுறவில் ஈடுபட்டதாகவும், மயக்கம் தெளிந்து அழுத போது, இதுகுறித்த வீடியோவை வெளியிடுவ தாக மிரட்டி பலமுறை அத்துமீறியதாகவும் அம்மாணவி தெரிவித்தார்.
தற்போது வெளி மாநிலத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற் கொண்டு வரும் நிலையில் தற்போதும் ராஜா தொலைபேசியில் மிரட்டி வருவதாக மாணவி தெரிவித்தார்.
அத்துடன் ராஜாவிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்த மணிகண்டனும் சம்பந்தப்பட்ட மாணவியை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரைக் காப்பாற்றுவதற்காக ராஜாவின் மனைவி மாணவியை மிரட்டியதாக அவர்மீதும் வழக்கு உள்ளது.
பேராசிரியர் ராஜாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில்,’"ராஜா செய்த தவறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவி-ஆசிரியர் உறவின் புனிதத்தை கெடுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் ராஜாவின் தற்போதைய மனைவி குறித்தும் வதந்தி பரப்பிவருகிறார்கள். ராஜாவிடம் மாணவியாக இருந்தபோது இதேபோல் நெருக்கமாகி திருமணம் செய்துகொண்டார் என கிளப்பிவருகிறார்கள். ராஜாவின் மனைவி இளங்கலை பயிலும்போது, ராஜா சீனியர் மாணவர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ராஜாவின் மனைவி, பட்டிய லினத்தவர் என்பதால் மிகுந்த போராட்டத்துக் குப் பின்னே இவர்களது திருமணம் நடந்தது.
மாணவி- ராஜா உறவு குறித்து 2019- 20லேயே ராஜாவின் மனைவிக்கு தெரிய வரவே அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக் கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. பின்னர் அவர் படிப்பை முடித்துச்சென்று விட்டார். ஆனால் தற்போது 5 வருடம் கழித்து பழிவாங்கும் நோக்கில் புகாரளித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ராஜாவின் ஆராய்ச்சிப் படிப்பு மாணவ ராக இருந்த மணிகண்டனும் பாதிக்கப்பட்ட மாணவியும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தினர். ராஜாவின் அனைத்து விஷ யங்களையும் தெரிந்த மணிகண்டன், மாணவி யிடம் தனியாகப் பேசவேண்டும், தனிமையில் இருக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுக்கவே, “’நீ ராஜா சார்கூட இருந்ததை அவர் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்’என மிரட்டியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவி, நம்பிக் கையா பழகியவர், வீடியோ எடுத்து வைத்துள்ளாரே, இதனால் நம் வாழ்க்கையே போய்விடுமோ என்ற கோபத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர். மாணவியின் செல்போனை ஆய்வுசெய்தால் இந்த பிரச்சனையின் பின்னால் யார் உள்ளார் என்பது தெரியவரும்.
ராஜா, வகுப்பில் மாணவ -மாணவிகள் தவறு செய்தால் உடனே அனைவர் மத்தி யிலும் அசிங்கமாகத் திட்டிவிடுவார். பின்னர் ஸாரி கேட்பார். அப்படி ஒரு மாணவியைத் திட்டி, அதனால் எழுந்த பிரச்சனையால் 4 வருடம் பல்கலைக்கழகத்தை விட்டு படிப்பு மையங்களில் பணியாற்றவைத்தனர். இதனால் அவருக்கு பேராசிரியர் பதவி கிடைக்காமல் போனது''” என்கிறார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயகுமாரோ, "கைதுசெய்து பலமணி நேரம் விசாரணையின்போது, குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். அவர்களின் உரையாடலைப் போட்டுக் காட்டியபோது தான் வேறுவழியின்றி நடந்ததை ஒப்புக் கொண்டார். மணிகண்டன் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று யாராவது பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகாரளியுங்கள். மாணவி, ராஜா செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. அதன் முடிவுவந்தால் யாரெல்லாம் இதில் தொடர்பிலுள்ளார்கள் என்ற தெளிவான சித்திரம் கிடைக்கும்''’என்றார்.
-அ.காளிதாஸ்