இதுவரை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், நிறுவனர்கள் என பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கல்லூரிப் பேராசிரியர்கள் மீதும் பாலியல் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
திருச்சியில் தரம் வாய்ந்த கல்லூரி என்ற பெருமையைப் பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் நடந்த பாலியல் சீண்டல்கள், பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகளிடமிருந்து பாலியல் சீண்டல் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே புகார்கள் வந்துள்ளன. விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்குள் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் கல்லூரியே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, பேராசிரியரை அழைத்துக் கண்டித்து அப்போ தைக்கு பிரச்சனையை வெளியே கசிய விடாமல் பார்த் துக் கொண்டது.
பல மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனை தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. கல்லூரி வளாகத்திற
இதுவரை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், நிறுவனர்கள் என பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கல்லூரிப் பேராசிரியர்கள் மீதும் பாலியல் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
திருச்சியில் தரம் வாய்ந்த கல்லூரி என்ற பெருமையைப் பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் நடந்த பாலியல் சீண்டல்கள், பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகளிடமிருந்து பாலியல் சீண்டல் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே புகார்கள் வந்துள்ளன. விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதற்குள் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் கல்லூரியே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, பேராசிரியரை அழைத்துக் கண்டித்து அப்போ தைக்கு பிரச்சனையை வெளியே கசிய விடாமல் பார்த் துக் கொண்டது.
பல மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனை தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட பிரச்சனை தற்போது வெளியே வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க களத்தில் இறங்கினோம்.
தமிழ்த்துறை முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் 5 மாணவிகள், தமிழ்த் துறையின் தலைவராக பணியாற்றி வந்த பால் சந்திரமோகன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவருக்கு உடந்தையாக பேராசிரியை நளினி செயல் பட்டதாகவும், தாங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பால் சந்திரமோகன் அருகில் அமர்ந்து சீண்டுவது, இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது என பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவார் எனவும், பேராசிரியரைச் சந்திக்கச் செல்லும் போது முகம்கழுவி புத்துணர்ச்சியுடன்தான் செல்லவேண்டுமென உதவிப் பேரா சிரியை கட்டாயப்படுத்துவார் எனவும் புகார் அளித்தவர்கள் தங்கள் கடிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த புகார்கள் எழுந்த வுடன் கல்லூரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங் கிய குழுவை அமைத்து பாதிக்கப் பட்ட பெண்களிடம், விசாரணை செய்தும், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி யும் அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தற் போது பால் சந்திரமோகன் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
பாலியல் சீண்டல் பிரச்சனை ஒருபுறமிருக்க, குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் மீது சாதிய ரீதியான வன்மம் காரணமாக மூன்று பேராசிரியர்கள், புகார் கொடுத்த மாணவிகள், நிர்வாகத்துக்கு எழுதிய கடிதங்களை வெளியே பரப்பிவிட்டுள்ளதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இப்பிரச்சனை சமூக நலத்துறை அதிகாரியான தமிம் முனிஷாவிற்கு கொண்டுசெல்லபட்டது. அவருடன் சேர்ந்த ஒரு குழு கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அனைத்து பேராசிரியர்களையும், நேரில் வரவழைத்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த விசாரணையில், மாணவிகள் இப்பிரச்சினை குறித்து துறைசார்ந்த மற்ற பேராசிரியர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பேராசிரியர்களோ இதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தவிரவும் நிர்வாகத்தில் புகாரளிக் கப்பட்ட கடிதங்களை பொதுவெளியில் வெளிப்படுத்திய 3 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப் படுகிறது.
ஜூன் 3-ஆம் தேதி மாணவிகளிடம் சமூக நலத்துறையும், காவல்துறையும் இணைந்து நேரடி விசாரணையைத் துவங்கியுள்ளன. ஒவ்வொரு மாணவிகளிடமும் பேசுகையில், அவர்கள் கூறும் அனைத்துத் தகவல்களிலும், தமிழ்த்துறை பேராசிரியர் மட்டுமல்ல, தாங்கள் இப் பிரச்சினையைக் கொண்டு சென்ற பேராசிரியர்கள் குறித்தும், கல்லுரி நிர்வாகம் எத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்றும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மாணவிகளிடம் நடத்தப்படும் விசாரணை முழுமையடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில்.... இதுவரை பேராசிரியர் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில், பாலியல்ரீதியான சீண்டல்கள் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்கான முகாந்தரங்கள் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாணவிகளின் கடிதத்திற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறைவானதுதான், எனவே மாணவிகளின் பெற்றோர்கள் பேராசிரியர் உள்பட இந்த பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை தற்போது முன்வைத்துள்ளனர்.
இதுவரை பேராசிரியர் மீது வழக்குகள் எதுவும் பதிவு பண்ணப்படாமல் உள்ளது. எனவே மாணவிகளிடம் நடத்தப்படும் விசாரணைகள் முழுமையடைந்த பின்னர் அவர் மீது வழக்குகள் பதிவுபண்ண முடியும் என்று தெரியவந்துள்ளது.
பாடம் படிக்க வருபவர்களிடம், மன்மத பாடம் நடத்த முயல்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். அதற்கு தமிழக அரசும், கல்வி நிறுவனங்களும் ஆசிரியப் பணியில் பிள்ளைக் கறி சாப் பிடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களை உரிய முறையில் தண்டிப்பதன் மூலம் பெற்றோர்களின் அச்சத் தைக் களைய முன்வர வேண்டும்.