காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் பி.பி.ஜி. சங்கர். இவர் பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளர். ரியல் எஸ்டேட், தொழிற் சாலைகளில் ஸ்க்ராப் எடுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வதென அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம்வந்து கொண்டிருந்தார். இவர்மீது மூன்று கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி மாலை, சென்னை கொளத்தூரில் நடந்த திருமணத்திற்குச் சென்ற பி.பி.ஜி. சங்கர், தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது பின்தொடர்ந்த மர்ம கும்பல், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே அவரது காரை வழிமறித்தது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் மூன்று வெடிகுண்டுகளை வீசியது. இதில் தப்பிய பி.பி.ஜி. சங்கர், தன்னிட மிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி மர்ம கும்பலை வெட்டுவதற்காக சென்றார். மர்ம நபர்களோ அவரை காரால் மோதித்தள்ள முயன்றனர். தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கிய சங்கரை சுற்றிவளைத்த கும்பல், சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

ff

Advertisment

கடந்த 2016-ல் இதே பகுதியை சேர்ந்த பி.பி.ஜி. சங்கரின் நெருங்கிய நண்பரான பி.பி.ஜி. குமரன் என்பவரை, இதே பாணியில் கொலைசெய்தனர். பி.பி.ஜி. குமரன் கொலைக்கு காரணமான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் வெங்கடேசன் என்னும் மண்ணூர்குட்டி, அதே வருடம் ஏப்ரல் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தற்போதைய கொலையும் மண்ணூர்குட்டி கொலைசெய்யப்பட்ட அதே தேதி, மாதத் தில், ஏழு வருடம் கழித்து நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஆக இது தொழில்போட்டி மற்றும் பழிக்குப் பழியாக நடக்கும் தொடர்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

d

இந்த பகுதியிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து ஸ்க்ராப் எடுக்கும் தொழிலில் இருக்கும் போட்டி காரணமாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இப்பகுதியை சேர்ந்த ரவுடி படப்பை குணாவை போலவே பி.பி.ஜி. குமரன், பி.பி.ஜி. சங்கர் என பலரும் தங்கள் பாதுகாப்புக்காக பா.ஜ.க.வில் ஐக்கியமாகியுள்ளனர். சங்கர் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்ததில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலரான சாந்தகுமார் தென் பட, அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சாந்தகுமார், உதயகுமார் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, தினேஷ் ஆகிய 9 பேர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இப்பகுதி யில் கட்டப்பஞ்சாயத்து கொலைகளைத் தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சமீபத்தில் நியமிக்கப் பட்டபோதும் கொலைகள் தொடர்கதை யாகவே உள்ளன.

பி.பி.ஜி. சங்கர் கொலை வழக்கு ஒருபுறமிருக்க, அதே தேதியில் வேறொரு சம்பவமும் நடந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் வீரபத்திரன் என்கின்ற வீரா, மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குன்றத்தூர் பகுதியைச் சார்ந்த ரவுடி வைரத்துடன் மிகவும் நெருக்கமானவர். இவரை அப்பகுதியை சார்ந்த ரவுடி மிதுன் கொலை செய்ய முயற்சிசெய்தது ஸ்ரீபெரும்புதூர் பகுதியை மேலும் பரபரப் பாக்கியுள்ளது.

fdf

முன்னெச்சரிக்கையாக போலீசார் அப்பகுதியிலுள்ள ரவுடிகளை கைதுசெய்து வருகின்றனர். வளர்புரம், ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜ.க. பிரமுகருமான பி.பி.ஜி. சங்கரை கொலைசெய்ய உள்ளதாக, ஏற்கனவே உளவுத்துறை போலீசார் எச்சரித்தும் அதை அவர் அலட்சியப்படுத்தியதில் உயிரையே இழந்திருக்கிறார். இந்த நிலையில் பி.பி.ஜி. சங்கர் கொலை தொடர்பாக, பி.பி.ஜி. குமரனின் மனைவி பிரிஷிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பி.பி.ஜி. குமரனும், பி.பி.ஜி. சங்கரும் ரவுடிகள் இல்லை என்றும், மக்கள் பணி செய்பவர்கள் என்றும் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று செயல்பட்டுவந்ததாக அதில் தெரிவித்துள்ளார்.

பி.பி.ஜி. சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கட்சிப்பட்டு பகுதியை சார்ந்த சாந்தகுமார், இதில் கூலிப்படையாக செயல்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மண்ணூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், குட்டி என்கின்ற வெங்கடேசன் கொலை செய்யப் பட்டதற்கு அவர்களின் மகன் அன்புச் செல்வன், அறிவுச்செல்வன் ஆகியோர் கூலிப்படையை ஏவி பி.பி.ஜி. சங்கரை கொலை செய்துள்ளனர்.