Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (110)

kaithi

(110) நிறைவின் தொடக்கம்! 


நிறைவின் தொடக்கம் என்பது நான் கண்டுபிடித்த சொல்லாடல் இல்லை. நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். நக்கீரன் இதழில் தொடர் நிறைவுறப் போகிறது என்றவுடன் அவர் கூறியவை. "நீங்கள் ஓராண்டுக்கு மேல் முயன்று எழுதியவை நிறைவு பெற்றுவிடக் கூடாது. அதற்கு ஒரு புதிய தொடக்கம் வேண்டும்'' என்றார். புதிய தொடக்கம் எது? 

Advertisment

நூறு ஆண்டுகளை நிறைவு செய்துவரும் தோழர் நல்லகண்ணு, எரிமலையின் விளிம்பிலிருந்து தனக்கான பொதுவாழ்வை பெற்றுக்கொண்டவர். கொடிய சித்ரவதை, சிறைச்சாலை, தூக்குமரம் என்று எத்தனையோ பயிற்சிக்கூடங்கள் அவருக்கு, பொது வாழ்வின் பயிற்சிக்கூடங் களாக இருந்தன. அந்த தலைமுறைக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. தங்கள் நேர்மைக்கு எந்தவிதமான களங்கமும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை அவர்களுக்கு தூக்கத்திலும் இருந்தது. பொதுவாழ்வின் நேர்மையை வாழ்நாள் கொள்கையாகக் கொண்டி ருந்தனர்.. 

Advertisment

பொதுவாழ்க்கை என்பது இன்று, அர்த்த மற்ற வெற்றிடம் ஆக் கப்பட்டுவிட்டது. தூய அரசியல்வாதிகளுக்கான இடம் இங்கு மறுக்கப்படு கிறது. பொறுப்புமிக்க அந்த இடத்தை துதிபாடிகளும், அரசியல் தரகர்களும் கைப் பற்றிக்கொள்கிறார்      கள். ஈக்கள் எதில் எதிலோ மொய்த்துவிட்டு வரு வதைப்போல, ஆசை இவர்களை எங்கெங்கோ அலையவைக்கிறது. இடுப்பிலிருந்த வேட்டி அவிழ்வதுகூட இவர் களுக்குத் தெரிவதில்

(110) நிறைவின் தொடக்கம்! 


நிறைவின் தொடக்கம் என்பது நான் கண்டுபிடித்த சொல்லாடல் இல்லை. நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். நக்கீரன் இதழில் தொடர் நிறைவுறப் போகிறது என்றவுடன் அவர் கூறியவை. "நீங்கள் ஓராண்டுக்கு மேல் முயன்று எழுதியவை நிறைவு பெற்றுவிடக் கூடாது. அதற்கு ஒரு புதிய தொடக்கம் வேண்டும்'' என்றார். புதிய தொடக்கம் எது? 

Advertisment

நூறு ஆண்டுகளை நிறைவு செய்துவரும் தோழர் நல்லகண்ணு, எரிமலையின் விளிம்பிலிருந்து தனக்கான பொதுவாழ்வை பெற்றுக்கொண்டவர். கொடிய சித்ரவதை, சிறைச்சாலை, தூக்குமரம் என்று எத்தனையோ பயிற்சிக்கூடங்கள் அவருக்கு, பொது வாழ்வின் பயிற்சிக்கூடங் களாக இருந்தன. அந்த தலைமுறைக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. தங்கள் நேர்மைக்கு எந்தவிதமான களங்கமும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை அவர்களுக்கு தூக்கத்திலும் இருந்தது. பொதுவாழ்வின் நேர்மையை வாழ்நாள் கொள்கையாகக் கொண்டி ருந்தனர்.. 

Advertisment

பொதுவாழ்க்கை என்பது இன்று, அர்த்த மற்ற வெற்றிடம் ஆக் கப்பட்டுவிட்டது. தூய அரசியல்வாதிகளுக்கான இடம் இங்கு மறுக்கப்படு கிறது. பொறுப்புமிக்க அந்த இடத்தை துதிபாடிகளும், அரசியல் தரகர்களும் கைப் பற்றிக்கொள்கிறார்      கள். ஈக்கள் எதில் எதிலோ மொய்த்துவிட்டு வரு வதைப்போல, ஆசை இவர்களை எங்கெங்கோ அலையவைக்கிறது. இடுப்பிலிருந்த வேட்டி அவிழ்வதுகூட இவர் களுக்குத் தெரிவதில்லை.

பொதுவாழ்க்கைக்கு சில அடிப்படையான தகுதிகள் வேண்டும். பல ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சி வேண்டும். அதற்கென சில இலக்கண வாய்ப்பாடுகள் இருக்கின்றன. இந்த இலக்கண விதியை கைப்பிடித்து நிலைமாறாமல் நடந்துசெல்லும் உறுதிப்பாடு வேண்டும். இது ஒரு சத்திய சோதனை. இதில் வெற்றி பெறுதல் எதிர்காலத்தின் வெற்றி என்பதைப் பற்றி யாருமே பொருட்படுத்துவ தில்லை. பணம் மட்டும் இருந்தால் போதுமென்பதில் மட்டும் இன்று நம்பிக்கை வைக்கிறார்கள். 

இந்தப் பின்னணியில் தோழர் நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமாக இருந்தது. இதில் நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, அவரது வாழ்நாள் சிந்தனைக்கான தத்துவ அடிப்படைகளை. இது மார்க்சியம் அவருக்கு கற்றுத்தந்த அடிப்படை. இதை இவர் எந்திரத்தனத்தோடு புரிந்துகொள்ள வில்லை. அவரது எளிமையைப் புரிந்துகொள் பவர்கள் அவரது இந்த தத்துவ புரிதலை புரிந்துகொள்வதில்லை. 

உழைப்பு புறக்கணிப்பு என்பது ஒரு சமுதாயத்திற்கு அடிப்படையில் அநீதியானது. உழைப்பவர்கள் அடிமைகளாகக் கருதப்படு கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு எந்த கௌரவமும் இல்லை. அவர்கள் உழைப்பில்தான் அனைத்தும் உருவாக்கப்படுகிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்? கடந்த காலத்தில் இது ஒருவிதமாக இருந்தது என்றால் இப்பொழுது வேறுவிதமாக இருக்கிறது. உழைப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் இவர்கள் எதையும் கேள்வி கேட்கும் உரிமைகூட இல்லாதவர்கள். என்ன ஜனநாயகம் இது? வெட்கமாக இருக்கிறது. இதைத்தான் தோழர் நல்லகண்ணு தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு உழைப்புச் சுரண்டலை எதிர்த்து உயிரைப் பணயம் வைத்துப் போராட் டங்களை நடத்திவந்தவர். 

அறம் என்ற சொல்லுக்கும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதை அவர் அதற்குரிய பொருளில் புரிந்திருந்தார். அறம் சார்ந்த வாழ்க்கை என்பது மனித வாழ்வுக்கு அடிப்படையானது என்பது அவரது கொள்கை. தமிழரின் தனித்தன்மை கொண்ட அறம் பற்றி மிகுந்த தெளிவு அவருக்கு இருந்தது. சங்க இலக்கியம் முதல் நீதி இலக் கியங்கள் வரை அனைத்தையும் அவர் கற்றறிந்தவர். தமிழ் இலக்கியங்கள், நீதிசார் அறம் பற்றி கூறியதைப் போல வேறு எந்த உலக இலக்கியங்களிலும் கூறப்படவில்லை என்பதை அடிக்கடி சொல்லிக்கொள்வார். கம்யூனிச வாழ்க்கை அறம் சார்ந்ததா? என்ற கேள்விக்கு எப்பொழுதுமே அவரிடம் சரியான விடை யிருந்தது. 

எல்லோருக்கும் எல்லாமும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைவிட பெரிய அறம் வேறு எதுவுமே இல்லை. தோழர் நல்ல கண்ணு அவர்களின் கம்யூனிஸ வாழ்வு என்பது தமிழர் அறத்திற்கும் கம்யூனிச அறத்திற்கும் இணைப்புப்பாலமாக அமைந்துள்ளது. இந்த        அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு தோழர் நல்லகண்ணு அன்றாடம் பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து வந்ததை நான் அறிவேன். இதில் இவருக்கு இருந்த தெளிவு வேறு யாருக்குமே இல்லை என்பதுதான் எனது மதிப்பீடு. 

வேறு எந்த காலத் தையும்விட இந்த காலத்தில் குழப்பங்கள் கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. குழப்பங்களால் மனித ஒற்றுமையைப் பிளவுபடுத்தி சுரண்டலுக்கான ஆழ மான வலிமை பொருந்திய சுரண்டல் தளங் களை அமைத்துக்கொள்கிறார்கள். லாபம், லாப வெறி என்பதைத் தவிர வேறு எதுவுமே இங்கு இல்லை. இது மட்டுமல்லாது அனைத்து நம்பிக்கைகளும் படுகொலை செய்யப்படுகிறது. அவநம்பிக்கைகள் திட்டமிட்டு உருவாக் கப்படுகின்றன. எங்காவது ஒரு நம்பிக்கைத் துளிர் கண்ணில்பட்டாலே, அதை அழிக்க வெந்நீர் கையிலேந்தி புறப்பட்டுவிடுகிறார்கள். 

இந்தச் சூழலில் நம்பிக்கை யார் என்று திரும்பிப் பார்க்கும்போது தோழர் நல்லகண்ணுவும் அவர்களின் தோழர்களும் நமக்கு மிச்சமாய் இருக்கிறார்கள். இவர்களின் பொதுவாழ்க்கை  வசீகரம்மிக்கது. நாற்பது, ஐம்பது ஆண்டு களாக சிலரை நான் கவனித்துவருகிறேன். அவர்களிடம் குணம் மாறியதில்லை, நிறம் மாறுதில்லை, கொள்கை மாறுவதில்லை. எத்தனை நெருக்கடி வந்தாலும் கட்சி மாறுவதில்லை. ஆதாயத்திற்காக யாருக்கும் தலையாட்டிக் கொண்டிருப்ப தில்லை. இரட்டை வாழ்க்கையும் இல்லை. சுயநலத்தை தனது அருகில் வர அனுமதித்ததும் இல்லை. 

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு சிறிய புள்ளியிலிருந்து மாபெரும் எழுச்சியை அர்ப்பணிப்பால் உருவாக்கிக் காட்டி, அசைக்க முடியாததை அன்று அசைத்துக் காட்ட முடிந்தது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்தியாவில் அஸ்தமித்துவிட்டது. இதை தூய்மை அரசியல் சாதித்துக் காட்டியது. இன்று இது சாத்தியம் என்பதற்கு தோழர் நல்லகண்ணு நம் கண் முன்னால் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அரசியலில் தூய்மை சாத்தியம் என்பதை இவரை சாட்சியாக வைத்து நாம் ஒவ்வொருவரும் அதைப் பின்பற்ற வேண்டும். 

ஊழலற்ற ஜனநாயக மீட்டெடுப்பு, இன்றைய தருணத்தில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. தேவதூதர் களுக்கு பாலைவனங்களில் துருவ நட்சத்திரங்கள் வழிகாட்டியதைப் போல, நமக்கும் சில துருவ நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த ஒளி பொருந்திய நடசத்திரங்களில் ஒன்றாக தோழர் நல்லகண்ணு அவர்களைக் கருதமுடியும்.

இது புதிய சூழல் என்றால், இதில் புதுப் புது மக்கள் இயக்கங்கள் பிறப்பெடுத்து, குடிமக்களுக்கு அதிகாரம் வேண்டும் என்கின்றன. இதற்கு அரசியல் கட்சிகளின் கடிவாளம் மக்கள் கையில் இருக்க வேண்டும். மக்களுக்கு, கடிவாளம் போடுபவர்களாக அரசியல் கட்சிகள் இருக்கக்கூடாது என்கிறார்கள். கட்சி அரசியலையும், மக்கள் அரசியலையும் ஒருங்கிணைத்து அதில் வெற்றிபெற்றவர் தோழர் நல்லகண்ணு அவர்கள். இவரது நூறாண்டு வாழ்க்கை இதற்குரிய நம்பிக்கையைத் தரும் நம்பிக்கை. அவரது நூறாண்டு வாழ்க்கை முடிவல்ல... அது ஒரு புதிய தொடக்கம்!

(முற்றும்)

nkn201225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe