(97) காந்தி நினைவிடத்தில் அப்பா சொன்ன வார்த்தைகள்!

வ்வொரு வாழ்க்கைக் குள்ளும் ஒரு நெருக்கடி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. பொதுவெளியில் இவை எல்லாவற்றையும் நம்மால் எளிதாக அறிந்துகொள்ள முடி கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளில் ஆண்களும் பெண்களும் முழுநேர ஊழியர்கள் என்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் தங்கள் குடும்ப வாழ்க்கையை, எளிய வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த கணக்கீட்டில் எங்காவது ஒரு இடத்தில் பிழை ஏற்பட்டால் கூட, மிகவும் கூடுதல் நெருக்கடியை சந்திக்கும் சூழல் வந்துவிடுகிறது. எந்தவொரு முழுநேர ஊழியரின் ஆழ்மனதை தொட்டுப் பார்த்தாலும், குழந்தைப் பருவத்தில் தன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடவில்லையே என்ற ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் இந்த ஏக்கம் கூடுதலாக இருக்கும். தோழர் நல்லகண்ணு வாழ்க்கையில் இதில் என்ன நடந்தது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். 

Advertisment

அவருக்கு இரண்டு பெண்மக்கள். ஒருவர் ஆசிரியர், மற்றவர் மருத்துவர், இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். மூத்த மகள் காசிபாரதிக்கு கண்ணம்மாவும், இளைய மகள் ஆண்டாளுக்கு சதீஷ், பிரியா என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். ஒருவரை கல்வி சேவையிலும், மற்றவரை மருத்துவ சேவையிலும் ஈடுபடச் செய்யவேண்டும் என்ற தோழரின் இலட்சியம் வெற்றி பெற்றுவிட்டது. இவர்கள் மூலம் தோழர் நல்லகண்ணு பற்றிய அரிய தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. ஒரு எளிய வாழ்க்கைக்குள் எத்தனை அரிய தகவல்கள் இருக்கின்றன. 

Advertisment

காசிபாரதி, தனது அனுபவமாக தந்தை வீட்டுக்கு வரவில்லை என் பதைவிட, அவரை தேடிச்சென்று பார்ப்பதே அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்திருக்கிறது என விவரிக்கிறார். "எங்கள் அப்பாவை பார்க்க திருநெல்வேலி கன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள கட்சி அலுவலகத்திற்குச் செல்வோம். அங்கு பெரும்பாலும் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும். அம்மாவும், தங்கையும்; வரமாட்டார்கள். என்னை அனுப்பி அப்பாவைப் பார்க்கச் சொல்லுவார்கள். சில நேரங்களில் அப்பா அங்கே இருக்கமாட்டார். அவர் அம்பா சமுத்திரம், ஆம்பூர் என்று ஏதாவது ஒரு ஊருக்குச் சென்றிருப்பார். அவர் வரும்வரை காத்திருந்து, அவரைப் பார்த்துவிட்டுதான் வீடு திருப்புவோம்'' என்கிறார். 

இதைத்தவிர, தோழரைப் பற்றிக் கூறும் இரண்டு நிகழ்வுகள் நம்மை யோசிக்கவைத்து விடுகிறது. ஒன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம். பள்ளி மாணவியாக இருந்து, இந்தக் காட்சியின் அன்றைய உணர்வுகளை விவரிக்கிறார். அப்பொ ழுது காசிபாரதிக்கு 8 வயது இருக்கலாம். அவரது விவரிப்புகள், அவரது ஆழ்மன பதிவுகள்தான். அப்பாவும், தோழர் எஸ்.ஏ. முருகானந்தமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். 22 நாட்கள்வரை தொடர்ந்த ஒன்று அது. ஆற்றிலே அணை ஒன்று கட்டுவதற்கான உண்ணாவிரதம் என்கிறார்கள். அப்பா வின் அம்மா, அம்மாவின் அம்மா, தங்கை ஆகியோர் உடனிருந்தார்கள். உண்ணாவிரத்தின் வித்தியாச சூழல். மரணத்தின் விளிம்பில் இருப்பதைப் போல அந்த இருவரையும் மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்பா என்னையும், தங்கையையும் தன் அருகில் அழைத்து அமரச் சொன்னார் என்கிறார். சிறு வயதில் இந்த அனுபவம் யாருக்கும் வாய்திருக்க முடியாது. அவை கம்யூனிஸ்டு குடும்பங்களுக்கு மட்டும்தான் வாய்த்திருக்க முடியும் 

Advertisment

இதைப்போன்ற மற்றொன்று, சிறைச்சாலை அனுபவம். அதுவும் மிக வித்தியாசமான ஒன்று. அப்பொழுது காசிபாரதிக்கு கொஞ்சம் கூடுதலாக விபரம் தெரிந்திருக்க வேண் டும். வயது 11 இருக்கலாம். முரட்டுக் கம்பிகள் நிறைந்த பாளையங் கோட்டை சிறைச்சாலை. அந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் நடந்திய தேசம் தழுவிய நில மீட்சிப் போராட்டம். சட்டத்திற்கு புறம்பாகவும், நேர்மையற்ற முறையிலும் ஆயிரக்கணகான ஏக்கர் நிலங்களை, குவித்து வைத்திருப்பதை எதிர்த்து, இந்தியா முழுமைக்குமான போராட்டம் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள், தமிழக சிறைச்சாலைகள் முழுவதிலும் இருந்தார்கள். நெல்லையில் போராட்டத்திற்கு தலைமை ஏற்கவிருந்த தோழர் நல்லகண்ணு, முந்தைய நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். "பாளையங்கோட்டை சிறையி-ருந்த அப்பாவைப் பார்க்க குடும்பத்துடன் வந்தேன்'' என்கிறார் காசி பாரதி. 

காசிபாரதியின் தாய்வழித் தாத்தாவும் நீல மீட்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அதே பாளை யங்கோட்டை சிறையிலிருந் தார். சிறைச்சாலையின் கதவுவரை வந்த அம்மா, தாத்தாவையும் அப்பா வையும் பார்க்க வர வில்லை. அரசுப் பணியில் ஆசிரியராக இருப்பதால் வரவில் லையா? என்பது தனக்கு தெரியவில்லை என் றார் காசிபாரதி. கைதிகளை விண்ணப்பம் அளித்துதான் பார்க்க வேண்டும். நான் அப்பா பெயரிலும், தங்கை, தாத்தா பெயரிலும் விண்ணப்பம் போட்டிருந்தோம். சிறையிலிருந்து இரண்டு இரண்டு பேராக அழைத்துவந்தார்கள். கம்பிக்குள் அப்பா. அவரை சுற்றிப்பார்க்க வெளியில் ஒரே கூட்டம். தோழர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். என்னைப் பார்த்து, "அம்மா வந்திருக்களா?' என்றார். நான் தலையை ஆட்டினேன். ‘"பத்திரமாய் இருங்க'’என்ற வார்த்தையைதான் அவரால் சொல்ல முடிந்தது. இந்த அனுபவம் இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் வியப்பைத் தரும். ஆனால் அன்றைய கட்சிக் குடும்பங்களின் வாழ்க்கை அவ்வாறுதான் இருந்தது.

இளைய மகள் மருத்துவர் ஆண்டாள். இவர் மாஸ்கோ சென்று மருத்துவம் பயின்றவர். இவருக்கு மருத்துவ மாணவருக்கான சேர்க்கையை, தோழர் முயற்சி எடுத்திருந்தால் தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் பெற்றிருக்க முடியும். கட்சியின் மூலம் இவருக்கு மாஸ்கோவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து இவர் கூறும் தகவல்கள் முக்கியமானவை. "மாஸ்கோவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மருத்துவக் கல்லூரி. அப்பா என்னை வழியனுப்ப டெல்லி வரை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாளை என்னால் மறக்க முடியாது. புது டெல்லியிலுள்ள காந்தி நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவிருக்கிறது. மருத்துவராவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது... இதை பயன்படுத்தி சிறப்பாக மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்'' என்றார்.

மேலும் அப்பாவைக் குறித்த ஞாபகங்களில் அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை என்கிறார். "இந்தியாவிலிருந்து அப்பா எனக்கு நிறைய கடிதங்களை எழுதுவார். ரஷிய தூரகத்தில் ஸ்கேனிங் செய்யப்பட்டு என் கைக்கு வந்துசேர மூன்று மாதங்களாகி விடும் என்கிறார். மருத்துவர் என்பதில் பிரேமையோ பெருமையோ வேண்டாம் என்பது அந்த கடிதங்களில் முக்கியமானவை என்கிறார். அவருக்குள்ளும் ஒரு வருத்தம் உண்டு. அது மாஸ்கோவிற்கு அப்பா எழுதிய கடிதங்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அவை அனைத்தும் 2015ஆம் ஆண்டு பெருமழையில் அழிந்துபோயின என்கிறார்.   

கட்சி வாழ்க்கையில் இன்றைய காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பவாதங்கள் வந்து விடுகின்றன. பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த இந்த குடும்பதினர், மூன்றாம் தலைமுறையாக, கட்சியின் மீதும் அதன் கொள்ளையின் மீதும் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவரின் மகள்கள் இருவரும், பேரப்பிள்ளைகள் மூவரும் அதற்கான சாட்சியாக வாழ்ந்துவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 

(தொடரும்)