Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (96)

kaithi

(96)  மரணத்தின் துயரம்! 

ம்யூனிஸ்டு தலைவர்களின் எளிய வாழ்க் கைக்குள் எத்தனையோ எளிய நடைமுறைகள் உண்டு. எத்தனையோ நெருக்கடிகள் வந்தபோதிலும் இந்த நடைமுறைகளை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை. இலக்கிய பேராசான் ஜீவாவைப் பற்றி பெருந்தலைவர் காமராஜர் கூறிய சொற்கள், இன்னமும் தமிழ்நாட்டின் காதுகளில் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது. "ஜீவா உங்களை இத்தனை விமர் சனம் செய்கிறார். ஆனால் நீங்கள் எப் பொழுதுமே அவர் மீது,  ஒரு குறையும் சொல்வதில்லையே'' ஏன் என்று கேட்டபோது, "என்னிடமாவது ஒரு டஜன் வேட்டியும் சட்டையும் இருக்கிறது. அவரிடம் ஒரு வேட்டி சட்டைக்கு, மாற்று ஒன்றுதானே இருக்கிறது' என்று கூறியுள்ளார். 

Advertisment

மதுரை ரயில் நிலையத்தில் பட்டினியோடு ஜீவா ரயிலின் வருகைக்குக் காத்திருக்கிறார். எதிர்பாராது, அங்கு வந்த நெருங்கிய தோழர் உணவு வாங்கித் தருகிறார். "ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்தீர்கள், கையில் காசு இல்லையா?'' என்று கேட் கிறார். "இருக்கிறது. அது மக்கள் கட்சிக்கு தந்த நிதி, பட்டினி கிடந்தாலும் அதை எடுத்து சாப்பிடக்கூடாது அல்லவா?'' என்கிறார் ஜீவா. இதுபோன்ற ஒரு நூறு கதைகள் ஜீவா விடம் மட்டுமல்ல, அந்த காலத்தை சார்ந்த பல தோழர் களிடம் இருக்கிறது. இவை அனைத்தையும், கேட்டறிந்து கொண்ட எங்கள் தலைமுறையால் எளிமையின் உண்மை அர்த்தத்தை புரிந்துகொள்ள முடிந்தது. 

Advertisment

தோழர் நல்லகண்

தோழர் நல்லகண்ணுவின் எளிய வாழ்க்கை, ஜீவாவை ஒட்டிய வாழ்க்கை. நானறிந்த வரை தோழரின் முழுவாழ்க்கைக் கும் முன்மாதிரி வழிகாட்டி தோழர் ஜீவாதான். ஆனாலும் பல்வேறு நெருக்கடிகள் வரத்தானே செய்கிறது. அவர்களின் எளிய வாழ்க்கையில் அவர்களுக்கு சங்கடத்தைத் தருவது அவர்களின் பிள்ளைகளின் திருமணச் செலவுதான். இந்த நெருக்கடிகளில் சிக்கிக்கொண்ட பலரை நான் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு மட்டுமல்ல, எளிய குடும்பத்தைச் சார்ந்த பலருக்கும் பிரச்சனைதான். ஒரு தலைமுறை வாங்கிய கல்யாணக் கடன் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்துவிடுகிறது. இதனால் திருமணத்தை மிகவும் எளிமையாக செய்யும் பழக்கத்தை கம்யூனிஸ்டுகள் கொண்டிருந்தனர். இதை ஒரு லட்சிய முன்மாதிரியாக்குவதற்கு முயற்சி செய்திருந்தார்கள். இவ்வாறு சில ஊர்களில் நடைபெற்ற திருமணங்களைப் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தின் கம்யூனிஸ்டு கிராமம் என ஆம்பலாபட்டு என்னும் ஊரை அறிந்திருக்கிறோம். அங்கு எனது மாணவர் பருவத்தில், நான் பார்த்த திருமணங்களில், எந்த செலவும் இருக்காது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோருக்கு தரப்படும் விருந்து வெறும் காபி மட்டுமே. வசதி உடையவர்கள், வசதி இல்லாதவர்கள் என்ற பாகுபாடு கொஞ் சம்கூட அங்கு இல்லை.  எல்லா திருமணங் களும்  இதே மாதிரியில்தான் நடக்கும். இன்று எல்லாமும் மாறிவிட்டது. ஆடம்பர திருமணங்களில் மோகம்கொண்டுவிட்டார்கள். தோழர் நல்லகண்ணு அவர் களின் மூத்த மகளுக்கு நடந்த திருமணம் இதற்கான முன்னுதா ரணத்தைக் கொண்டிருக்கிறது. 

இதைப் பற்றி தோழர் நல்லகண்ணு அவர்களின் மூத்த மகள் காசிபாரதி அளித்த பேட்டி ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். "எனது திருமணத்தை கட்சியின் மூத்த தோழர் களே கூடி முடிவெடுத்து விட்டனர். எனது கணவர் பெயர் அழகுமுத்து பாண்டியன். பிற்காலத் தில் தூத்துக்குடி மாவட்டச் செயலாள ராக பொறுப்பேற்றுக் கொண்டவர். நான் திருமணத்திற்கு பின்னர் ஆசிரியர் பணிக்கான பி.எட். படிக்க வேண்டும் என்ற நிபந்தனை யோடு திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேன். இதில் ஒரு பிரச்சினை இருந்தது. மாப்பிள்ளை வீட்டில் உடன் திருமணம் செய்யவேண்டும் என்றார்கள். 

குடும்பத்தின் மூத்தவர், ஒருவர் உயிர் பிரியும் நிலையிலிருந்தார். அவர் உயிருடன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பம். ஆனாலும், இதில் எனக்கு ஒரு பெரும் வருத்தம் இருந்தது'' என்கிறார் காசிபாரதி. அப்பா வீட்டில் இல்லை. அவர், பாட்னா கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு, திரும்பி வரும் வழியில் இருந்தார். சென்னை கட்சி அலுவலகத்திற்கு வந்த பின் னர்தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட் டது தெரியும். இப்பொழுது, இப்படியெல்லாம் செய்ய முடியுமா? எனக்குத் தெரியவில்லை. அன்று கட்சித் தோழர்கள் ஒரே குடும்பமாக தங்களைக் கருதிக்கொண்டார்கள். திருமணம் மிகமிக எளிய முறையில் நடந்தேறியது. இதைப்போலவே இவரது இரண்டாவது மகள் மருத்துவர் ஆண்டாள் திருமணமும் மிகவும் எளிமையாகவே நடந்தது. எல்லாவற்றிலும் ஆடம்பரத்தை விரும்பாத தோழர், தன் பெண் மக்கள் திருமணத்தையும் எல்லோருக்குமான முன்மாதிரியாக எளிமையுடன் நடத்திக் காட்டினார். 

kaithi1

வாழ்க்கை எத்தகைய முரண்களைக் கொண்டிருக்கிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. அம்மா ஓய்வுபெற்ற சிறிது காலத்தில் சென்னைக்கு வந்துவிட்டார்கள். அவரது விருப்பம் எல்லாம் தோழருக்கு அரு கிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது. அதற்கும் ஒரு தடை வந்தது. அம்மா ஓய்வுபெறுகிறார். தோழர் அவர்கள் செயலாளர் பொறுப்பை ஏற்று தீவிரமாக செயல்பட தொடங்கிவிட்டார். எங்கு பிரச்சனை என்றா லும் செல்ல வேண்டும். ஒரு இடத்தில் இருக்க முடிய வில்லை. சில நேரங்களில் அவரை பார்ப்பதுகூட அம்மா வுக்கு அபூர்வமாக இருந்தது. இந்த பின்புலத்தில் தோழரால் அந்த துயரத்தை சந்திக்கவேண்டிய நிலை வந்தது.

அம்மா ரஞ்சிதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை பில்ரோத் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த காலத்தில் செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்திருந்தார். அந்த மருத்துவமனை கோவில்பட்டி மேனாள் சட்டமன்ற உறுப்பினர், அழகர்சாமி அவர்களின் மிக நெருங்கிய உற வினரின் மருத்துவமனை. மருத்துவச் செலவை மருத்துவ மனை நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. தோழரைப் பொருத்தவரை, அவர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்  மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்த தருணத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். அவரை அப்படி ஒரு தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. 

குடும்ப வாழ்க்கையில் தான் செய்யத் தவறிய அனைத்தும், அவருக்கு குற்ற உணர்வாக மாறியிருக்க வேண்டும். நானும் அவரோடு மிக நெருக்கமாக இருந் தாலும் மிகவும் சரளமாக உரையாடக்கூடியவர் கவிஞர் ஜீவபாரதி. தோழர் நல்லகண்ணு எல்லா பிரச்சனைகளை யும் அவரிடம் மனம்விட்டுப் பேசுவார். அவர் என்னிடம் சொன்ன தகவல் என்னையும் அதிர்ச்சியடைய வைத்தது. அம்மா இறந்த பின்னர், அவரது உடலை ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லவேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். "தோழர் இறுதி நிகழ்வை சென்னையிலே வைத்துவிடலாம் என்கிறார்' என்றார். காரணத்தைக் கேட்டேன். "தன்னிடம் பணம் இல்லை என்ற எண்ணம் அவரிடம் இருக்கலாம்' என்றார். "இது ஒரு பிரச்சனையா? கட்சியால் செய்ய முடியும், தகவல் கிடைத்தால் செய்வதற்கு எத்தனையோ நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். ஏன் இப்படி நினைக்கிறார்' என்றேன். "அவர்தான் தோழர் நல்லகண்ணு' என்றார் ஜீவபாரதி கொஞ்சம் கோபத்துடன். 

அடுத்தவரிடம் எதையும் பெற்றுக்கொள்ளாத தன்னல மறுப்பு தேவைதான், ஆனால் இந்த அளவிற்கு தேவையா என்று நான் நினைத்துக்கொண்டேன். பில்ரோத் மருத்துவமனையின் வாகனம் உயிரற்ற அம்மா உடலை சுமந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு கொண்டுபோய் சேர்த்து விட்டது.

(தொடரும்)

nkn011125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe