Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (95)

kaithi

(95) மார்க்சியம் கற்றுத்தராத உண்மை!


ம்யூனிஸ்டு தலைவர் கள் உலக விபரங்கள் அனைத்தையும் துல்லியமாகத் தெரிந்தவர்கள் என்றாலும், குடும்பத்தின் சிறிய விஷயங் களைக்கூட தெரிந்திருக்க வில்லை என்பதை அவர்களின் குடும்பத் தலைவிகளிடம் கேட்டுப் பார்த்தாலே உண்மை எளிதில் பிடிபட்டுவிடும். தோழர் நல்லகண்ணு வாழ்க்கை யில், இதுபோன்று அமைந்த நிகழ்வு ஒன்றும் எனக்கு கிடைத்தது. அந்த நிகழ்வு பற்றிய பல விபரங்களை பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.

Advertisment

தோழர் சி.கே.கொடியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி யவர். தோழர் நல்லகண்ணு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றியபோது, இவர் அகில இந்திய செயலாளர். தோழர்கள் இருவருக்கும் இடையில் அமைந்த நெருங்கிய உறவை நான் நன்கறிவேன். கொடியன், தோழர் நல்லகண்ணு பற்றி தனக்கு கிடைத்த இந்த தகவலை, இந்திய தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த அனுபவம் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவருக் கும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க வேண்டும். இதனாலேயே இந்தச் செய்தி, அந்தக்காலத்தில் தலைவர்கள் மத்தியில் நடமாடிய முக்கிய செய்தியாக மாறிவிட்டது. 

Advertisment

அம்மா, திருமணமாவதற்கு முன்பே ஆசிரியர் பணிக்குச் சென்றவர். அன்றைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு

(95) மார்க்சியம் கற்றுத்தராத உண்மை!


ம்யூனிஸ்டு தலைவர் கள் உலக விபரங்கள் அனைத்தையும் துல்லியமாகத் தெரிந்தவர்கள் என்றாலும், குடும்பத்தின் சிறிய விஷயங் களைக்கூட தெரிந்திருக்க வில்லை என்பதை அவர்களின் குடும்பத் தலைவிகளிடம் கேட்டுப் பார்த்தாலே உண்மை எளிதில் பிடிபட்டுவிடும். தோழர் நல்லகண்ணு வாழ்க்கை யில், இதுபோன்று அமைந்த நிகழ்வு ஒன்றும் எனக்கு கிடைத்தது. அந்த நிகழ்வு பற்றிய பல விபரங்களை பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.

Advertisment

தோழர் சி.கே.கொடியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி யவர். தோழர் நல்லகண்ணு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றியபோது, இவர் அகில இந்திய செயலாளர். தோழர்கள் இருவருக்கும் இடையில் அமைந்த நெருங்கிய உறவை நான் நன்கறிவேன். கொடியன், தோழர் நல்லகண்ணு பற்றி தனக்கு கிடைத்த இந்த தகவலை, இந்திய தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த அனுபவம் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவருக் கும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க வேண்டும். இதனாலேயே இந்தச் செய்தி, அந்தக்காலத்தில் தலைவர்கள் மத்தியில் நடமாடிய முக்கிய செய்தியாக மாறிவிட்டது. 

Advertisment

அம்மா, திருமணமாவதற்கு முன்பே ஆசிரியர் பணிக்குச் சென்றவர். அன்றைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மிகவும் சொற்பமானது. வாடகை வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுடன் எளிய வாழ்க்கையை சிக்கனமாக வாழ்ந்துகொண்டிருந்தவர். திருநெல்வேலி மாவட் டம் கலியாவூர், ராமானுஜநல்லூர், அனவரதநல்லூர் ஆகிய மூன்று ஊர்களில் இவர் பணி புரிந்துள்ளார். அந்தக்காலத்தில் கட்சித் தோழர்கள் குடும்பத்தில் நடந்த வேடிக்கைகள் ஒவ்வொன்றாக என் நினைவுக்கு வருகிறது. தோழர் மாசிலாமணி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர். அவரது மகன் சுரேந்திரன் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். அவர் இப்பொழுது உயிருடன் இல்லை. 

சுரேந்திரன், பூண்டி புஷ்பம் கல்லூரி யின் மாணவர். அடிக்கடி ஏதாவது பிரச் சினைகளில் மாட்டிக்கொண்டுவிடுவார். பேராசிரியர்கள் அப்பாவை அழைத்துவரச் சொல்லுவார்கள். அதற்கு எப்படியும் நிரந்தர பதிலொன்று சுரேந்திரனிடம் இருக்கும். அப்பா மாநாட்டிற்கு சென்றுவிட்டார்,  வெளியூர் பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட் டார் என்பதுதான் அந்த நிரந்தர பதில். பேராசிரியர்கள் சும்மாவிடமாட்டார்கள். மாமா, சித்தப்பா யாராவது இருக்கிறார்களா என்று மீண்டும் கேட்பார்கள். அதற்கு அவ ரிடம் ஒரு சித்தப்பா ரெடியாக இருந்தார். அவர் பெயர் அரங்க சின்னப்பா. இவர் தமிழ்நாடு முழுமையாக அறிந்த தலைவர். 

முழு கிராமமும் கம்யூனிஸ்டு கட்சி என்று அறியப்பட்ட கரம்பயத்தில் பிறந்தவர். பின்னர் தஞ்சை மாவட்டத்தின் கட்சி செய லாளராகப் பணியாற்றினார். வேடிக்கையும் நகைச்சுவையும் நிறைந்தவர். வயது வித்தி யாசம் பார்க்கமாட்டார். இளைஞர்களோடு மிகவும் இயல்பாக நட்பு கொண்டுவிடுவார். நான் மாணவர் இயக்கத்தில் சேர்ந்தபோது அவர் எனக்கு மாவட்டச் செயலாளர். அவரை சுரேந்திரன், தன் சித்தப்பாவாக அழைத்து சென்று, பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கொள்வார். இதை நான் எழுதுவதற் குக் காரணம் கட்சி தலைவர்களுக்கு, தன் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வாய்ப்பு இருப்பதில்லை. கட்சி தலைவர்களுக்கும் குடும்பத்திற்குமான தூரம் இப்படியிருக்க, தோழர் நல்லகண்ணு அவர்கள் வாழ்க்கையில், அம்மா கேட்ட கேள்வி வேறொரு வகையில் அமைந்திருந் தது. அது அன்றைய பெண்களின் பிரச்சினை. 

உலகம் தெரிந்த கம்யூனிஸ்டு தலைவர்கள், இதைக்கூட தெரியா மல், தெரிந்துகொள்ளாமல் இருந் திருக்கிறார்களே என்ற எண்ணத்தை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. தோழர் நல்லகண்ணு, களப்பணியில் சுற்றிச் சுற்றிவரும் காலம். அவரால் வீட்டுக்கு அடிக்கடி வரவும் முடி யாது. பொருளாதார உதவி எதுவும் செய்யவும் முடியாது. அன்றைய கம்யூனிஸ்டு களப்பணியாளர்களை குறைசொல்லிப் பயனில்லை. பகல் முழுவதும் எங்காவது ஒரு ஊரில், எங்காவது ஒரு இடத்தில் அவர் களுக்கு நிகழ்ச்சிகள் இருந்துகொண் டேயிருக்கும். தோழர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவருபவர். இன்றைய காலத்தைப்போல அன்றைய காலத் தில் போக்குவரத்து வசதி கிடையாது. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரவேண்டும் என்றால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தேவைப்படும். கிடைத்த பஸ்ஸில் ஏறவேண்டும், கிடைத்த ரயிலில் ஏறவேண் டும். இது கிடைக்காவிட்டால் லாரியில் ஏறி வரவேண்டும். அன்றைய போக்குவரத்து அத்தகைய நெருக்கடியைக் கொண்டிருந்தது. அகில இந்திய தலைவர்கள்வரை இப் படித்தான் அந்தக் காலத்தில் நடந்துள்ளது.

kaithi1

அம்மா ஆசிரியர் பணியை செய்துகொண்டு குடியிருந்த வீடு. ஒரு தனி வீடு. ஆசிரியர் என்ற முறையாலும் அவரிடம் இயல்பாக அமைந்த உயர் பண்புகளாலும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அய்யா நல்லகண்ணு அவர்களை பார்த்திருக்கிறார்கள். பலர் பார்த்ததில்லை. இவரது கணவர் கட்சித் தலைவர் என்ற விபரத்தை சிலர் மட்டும் அறிந்திருக்கிறார்கள். 

காலம் இவ்வாறு சென்றுகொண்டிருக்க... அய்யா நல்லகண்ணு, ஒரு நாள் பின்னிரவில் வீடு வந்து சேர்ந்துள்ளார். அடுத்த நாள் அவர் வெகுதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும். இரவு முழுவதும் இந்தப் பயணத்தைப் பற்றியே இவர் நினைத்திருக்க வேண்டும். எப்படி போய்சேருவது என்பது இவரது கவலையாக இருந்திருக்க வேண்டும். அதிகாலையே எழுந்து குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு, பையை தோளில் மாட்டிக் கொண்டு வழக்கம்போல் தன் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இதில் எல்லாப் பெண்களுக்கும் கட்டாயம் வருத்தம் வந்துவிடும். வந்தவர் குடும்பத்தைப் பற்றி கேட்கவில்லையே? பிள்ளைகளைப் பற்றி கேட்கவில்லையே? தூங்கினார் எழுந்து சென்று விட்டாரே என்ற வருத்தம் கட்டாயம் வந்துவிடும். அம்மாவின் பிரச்சனை அது அல்ல. அது வேறொன்று.

வீட்டுக்கு இரண்டு வழிகள். ஒன்று வாசல் வழி. மற்றொன்று பின்புறமாகச் செல்லும் கொல்லைப்புற வழி. இரண்டு வழியாகவும் சாலைக்குப் போய்ச்சேரலாம். அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் அய்யா அவர்கள் பின்புற வழியை தேர்வு செய்து, நடக்கத் தொடங்கி விட்டார். "உங்களுக்கு ‘என்ன கோட்டியா புடிச்சிருக்கு?' ’  பின்புறம் இருந்து ஒரு குரல். அது அம்மாவின் குரல். அடுத்த உத்தரவு, "திரும்பி வாங்க. முன்புறம் வந்த பெஞ் சிலே உட்காருங்க' என்று. ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்று தோழரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அம்மாவின் கோபத்திற்கு காரணம், பின்னர்தான் தோழருக்குப் புரிந்திருக்கிறது. பெண் மட்டுமே இருக்கும் வீட்டில், விடிந்தும் விடியாத மங்கல் பொழுதில் பின்புற வாசல் வழியாக, ஒரு ஆண் அவசரம் அவசரமாக சென் றால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார் கள் என்பதை அவரே அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மார்க்சீயம், மார்க்சீயர்களுக்கு இதை எல்லாம் கற்றுத்தராமல் இருந்திருக்கிறதே என்று கம்யூனிஸ்டு தலைவர்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆதங்கம் வருவதை இதன் மூலம் நான் புரிந்துகொண்டேன். 

(தொடரும்)

nkn291025
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe