Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (94)

kaithi

(94)  சி.ராஜேஷ்வரவ்

குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவி உறவில், அமைந்த நுட்பங்களை, யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீண்ட பயணத்தில் சில நேரங்களில், தவிர்க்க முடியாத சலிப்பு ஒன்றும், எப்படியோ வந்துவிடுகிறது. இதற்கு, அளவிட முடியாத அன்பின் எதிர்பார்ப்பும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம். சில நேரங் களில் இது எரிச்சல், கோபம், வெறுப்பு என்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை யிலும், இது ஒரு பிரச்சனை யாக வந்திருக்கிறது. தோழர் நல்லகண்ணுவின் நீண்ட வாழ்க்கையில், இது எவ்வாறு அமைந்திருந்தது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது அவரது வாழ்வின் மறுபக்கம். 

Advertisment

எளிமையான அவரது குடும்ப வாழ்க்கை நான் அறிந்தவரை, மகிழ்ச்சி குறையாது, அனைத்துப் பிரச்சினைகளைக் கடந்து சென்றதாகவே நான் உணர்ந்துகொள்கிறேன். தோழர் மிகுந்த சுய கட்டுபாடுள்ளவர். வரவு, செலவைப் பற்றி மிகவும் அக்கறைகொண்டவர். தேவையற்ற எதையுமே அவர் விரும்புவது மில்லை, வாங்குவதும் இல்லை. தனது குடும் பத்தினரையும், தன்னை சுற்றியிருப்பவர்களை யும், சுய கட்டுப்பாடு கொண்ட வாழ்க்கைக்கு சிபாரிசு செய்துகொண்டேயிருப்பார். 

Advertisment

தோழரைப் பற்றிய எனது இந்த உணர்வை, அம்மா அவர்கள் அவரது வாழ்வின் எளிமை பற்றியதாக, ஒன்றைக் கூறுகிறார். ‘துணியை பெரும்பாலும் அவர் சல

(94)  சி.ராஜேஷ்வரவ்

குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவி உறவில், அமைந்த நுட்பங்களை, யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீண்ட பயணத்தில் சில நேரங்களில், தவிர்க்க முடியாத சலிப்பு ஒன்றும், எப்படியோ வந்துவிடுகிறது. இதற்கு, அளவிட முடியாத அன்பின் எதிர்பார்ப்பும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம். சில நேரங் களில் இது எரிச்சல், கோபம், வெறுப்பு என்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை யிலும், இது ஒரு பிரச்சனை யாக வந்திருக்கிறது. தோழர் நல்லகண்ணுவின் நீண்ட வாழ்க்கையில், இது எவ்வாறு அமைந்திருந்தது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது அவரது வாழ்வின் மறுபக்கம். 

Advertisment

எளிமையான அவரது குடும்ப வாழ்க்கை நான் அறிந்தவரை, மகிழ்ச்சி குறையாது, அனைத்துப் பிரச்சினைகளைக் கடந்து சென்றதாகவே நான் உணர்ந்துகொள்கிறேன். தோழர் மிகுந்த சுய கட்டுபாடுள்ளவர். வரவு, செலவைப் பற்றி மிகவும் அக்கறைகொண்டவர். தேவையற்ற எதையுமே அவர் விரும்புவது மில்லை, வாங்குவதும் இல்லை. தனது குடும் பத்தினரையும், தன்னை சுற்றியிருப்பவர்களை யும், சுய கட்டுப்பாடு கொண்ட வாழ்க்கைக்கு சிபாரிசு செய்துகொண்டேயிருப்பார். 

Advertisment

தோழரைப் பற்றிய எனது இந்த உணர்வை, அம்மா அவர்கள் அவரது வாழ்வின் எளிமை பற்றியதாக, ஒன்றைக் கூறுகிறார். ‘துணியை பெரும்பாலும் அவர் சலவைக்கு போடுவ தில்லை. அதற்கு அவர் மழுப்பல் காரணங் களைச் சொன்னாலும், வீண் செலவு என்ற சிக்கன உணர்வுதான் காரணம்’ என்று பேட்டியில் கூறியுள்ளார். எனக்கு வேறொன்று ஞாபகத்திற்கு வருகிறது. அது சி.பி.ஐ. பொதுச்செயலாளராக செயலாற்றிய தோழர் சி.ராஜேஷ்வரராவ் பற்றிய ஞாபகம்.

அது இந்திராகாந்தியின், அவசரகால சட்டம் அமலி-ருந்த 1975ஆம் ஆண்டு. கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் மார்க்சீயம் பயிலும் மாணவன் நான். 45 நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். எனக்கு அப்பொ ழுது வயது 19. தஞ்சை மாவட்டத்தின் விவசாய கிராம வாழ்க்கையை மட்டும் அறிந்திருந்த எனக்கு, டெல்லியும் அஜய் பவனமும் ஓர் அதிசயமாக தெரிந்தது. அதில் ஓர் அனுபவம். பல அறைகளை கொண்ட அஜய் பவனில் ஒரு அறையில் மட்டும், காலை நேரங்களில் துணி துவைக்கும் சத்தம் வந்துகொண்டேயிருக்கும். அது தோழர் ராஜேஷ்வரராவ் தன் துணியை தானே, துவைத்துக் கொள்ளும் சத்தம். அன்று எனக்கு அதன் மகத்துவம் புரியவில்லை. ஆடம்பர அரசியல் உலகத்தையும், ஆடம்பர அரசியல் தலைவர்களையும் பிற்காலத்தில் அருகி-ருந்து பார்த்தபோதுதான், அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்டேன். 

தோழர் ராஜேஷ்வரராவ், வாழ்க்கை முறையே, தோழர் நல்லகண்ணு அவர்களிடமும் அமைந்திருந்தது.. இவர், தொடர் பயணங்களில் தன்னிடம் சேர்ந்து விட்ட அழுக்குத் துணி களைத் துவைப்பதற்கென்று சில இடங்களை தேர்வுசெய்து வைத்திருப்பார். தஞ்சை கட்சி அலுவலகத்தில் அன்றிருந்த சிறப்பான நீர்த்தொட்டி. அதன் அருகில் அமைந்த துணி துவைக்கும் கல். இதே போன்று திருநெல்வேலி கட்சி அலுவலகத்தில் அமைந்த கிணறு, அதில் தொங்கிக் கொண்டிருக்கும் டயரால் இணைக் கப்பட்ட வாளி, இவை எல்லாம் அவரது நட்பு வட்டங்கள். இங்கு வேறொன்றை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு  வந்துவிட்டது. ஒருகாலத்திற்குப் பின்னர், துணி துவைப்பதி லுள்ள சங்கடங்கள் ஓரளவிற்கு குறைந்து விட்டதாக அடிக்கடி சொல்லிக் கொள்வார். பவுடரை நீர் கலந்து,  ஊற வைத்து துணியை வெளுக்க எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பார். அதை என்னால் இப்பொழுது ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொள்ள    முடிகிறது. அது ள்ன்ழ்ச் துணிப்பவுடர் அறிமுகப் படுத்தப்பட்ட காலம். 

kaithi1

இவரிடம் அமைந்த எளிமை, தேவையற்ற எளிமை என்றுகூட, சிலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு பேசப்படுவதை அவரும் அறிவார். ஆனால் அதை அவர் பொருட்படுத்திக்கொள்வில்லை. அது தனக்கான வாழ்க்கை நெறி என்பதில் உறுதி கொண்டிருந் தார். இது கட்சிக்குள் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் வழிகாட்டுதலாகவும் அமைந்திருந்தது. கட்சித் தலைவர்களை யொட்டியே அதற்கு அடுத்த தலைமுறையின் உருவாக்கமும் நடைபெறுகிறது. 

கட்சித் தலைவர்களின் எளிய வாழ்க்கை, முழுநேர வாழ்க்கையின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது. முழுநேர ஊழியர் வாழ்க்கையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். முழுநேர ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படுதலில் உயர்மட்டத் தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள், மூன்றாம்கட்டத் தலைவர்கள் என்று தரம் பிரித்து ஊதியம் வழங்கப்படுவ தில்லை. கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள், குறுகிய காலம் பணி யாற்றிவர்கள் என்றும் ஊதியம் வழங்கப்படுவ தில்லை. முழுநேர ஊழியர்கள் அனைவருக்கும் கிட்டத் தட்ட சமமாகவே ஊதியம் வழங்கப்படும். தோழர் நல்ல கண்ணு செயலாளராக பணியிலிருந்து விடுபட்ட கடைசிக் காலத்தில் அதாவது 2004ஆம் ஆண்டில், அவர் மாத ஊதியமாக, 1500 ரூபாய் பெற்றுக்கொண்டார். எனக்கும் அதே ஊதியம்தான். இதை வைத்துக்கொண்டு அந்த நகர வாழ்க்கையில், வீட்டு வாடகை முதல் அனைத்தையும் செய்யவேண்டும். அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதே வாழ்க்கைதான். ஆனால் எந்தக் காலத்திலும் தன் கையில் பணம் இல்லை என்று கூறும் ஒரு வார்த்தையைக் கூட அவரிடம், கேட்டதில்லை. இதற்கான காரணம் அம்மா ரஞ்சிதம் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டேன். 

இதற்கு இவர்களின் மூத்த மகள் காசிபாரதியின் ஊடகப் பதிவு ஒன்று, ஆதாரமாக அமைந்துள்ளது. அப்பாவின் தந்தை, தனது தாத்தா, தன்னுடன் நடத்திய உரையாடலை இவர் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தன் மகனுக்கு இப்பொழுதாவது குடும்பப் பொறுப்பு வந்திருக்கிறதா? என்பதை பேத்தியின் மூலம் தெரிந்துகொள்ள விரும்பியதாகத் தெரிகிறது. ஒருமுறை தாத்தாவை பார்க்கச் சென்றிருந்தோம். தாத்தா என்னிடம் கேட்டார். "உங்கள் அப்பன் உங்களைப் பார்த்தானா?' என்று. அடுத்த கேள்வி "ஏதாவது உங்களுக்கு வாங்கி வந்தானா?',  மூன்றாவது கேள்வி "அம்மாவிடம் ஏதாவது பணம் கொடுத்தானா?' என்பது. இதில் மூன்றாவது கேள்விக்கு காசிபாரதி அளித்த பதில், தாத்தாவின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டது. 

மூன்றாவது கேள்விக்கு காசிபாரதி அளித்த பதில், "அப்பா, அம்மாவுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. அம்மாதான் அப்பாவுக்கு பத்து ரூபாய் கொடுத்தாள்' என்பது. இதைச் சொன்னபோது தாத்தாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை அப்படியே பதிவு செய்துள்ளார் காசிபாரதி. 

அந்த வார்த்தை "அடி பைத்தியக்காரி' என்பது. அடி பைத்தியக்காரி என்ற தாத்தாவின் வார்த்தைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். காலமெல்லாம் பணம் சேர்க்கத் தெரியாத பைத்தியக்காரனாக அவன் வாழ்ந்துவருகிறான். அதற்கு நிர்பந்தம் தந்து திருத்தாமல், நீ சம்பளத்திலிருந்து பணம் கொடுக்கிறாயே என்பதுதான் அந்த பைத்தியக்காரி என்னும் சொல்லின் பொருள். 

உறவுகள், பணம், பொருளாதாரம் என்ற எல்லைகளில் சில நேரங்களில் அமைந்து விடுகிறது. இவையெல்லாவற்றையும் துச்சமெனக் கடந்து நின்ற அம்மாதான், அய்யா நல்லகண்ணு வாழ்க்கையின் வெற்றி ரகசியம். 

(தொடரும்)

nkn251025
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe