(90) மூன்று கொலைகள்!

ம்யூனிஸ்டுகள் தங்கள் வாழ்க்கையில், எத்தனை எத்தனை முரண் பாடுகளைச் சந்திக்கிறார் கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். சில நேரங் களில் இவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர் களாகவே காட்சி தரு கிறார்ககள். எந்த மக்களுக்காக காலம் காலமாக, கொள்கை அர்ப் பணிப்புடன் பாடுபடுகிறார்களோ, அந்த மக்களே சில நேரங்களில் இவர்களை நிராகரித்துவிடும் கொடுமையும் நடந்துவிடுகிறது. இந்த காலம், கம்யூனிஸ்டுகளின் இலையுதிர் காலமாக மாறிவிடுகிறது. பூ, பிஞ்சு, காய் இவையெல்லாம் இழந்து மொட்டை மரமாக இவர்கள் நிற்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எளிதில் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. என்றோ ஒரு நாள் வரும் என்று வசந்தத்தின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். தோழர் நல்லகண்ணு வாழ்க்கை இப்படிப்பட்ட சோதனைகளை அடிக்கடி சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்தது. 

Advertisment

தோழர் அண்ணாமலையிடம் சில தகவல்களை நான் கேட்டி ருந்தேன். அவர் தோழர் நல்லகண்ணு அவர்களின் மிக நெருங்கிய உறவினர். அய்யாவின் துணைவியார் அம்மா ரஞ்சிதம் அவர்களின் தம்பி. அவர் கூறிய இரண்டு கொலைகளின் ஆழத்தை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. மேலெழுந்தவாரியாக மட்டுமே தெரிந்திருந் தேன். எத்தனை நெருக்கத்துடன் உடனிருந்து பிரச்சினைகளை அணுகியபோதிலும், சில தகவல்கள் முழுமையாக நம் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகின்றன. திடீரென்று ஒரு நாள் அது நம் கவனத்திற்கு வரும்போது நமக்குள் ஏற்படும் மனஅதிர்ச்சியின் ஆழத்தை நம்மாலேயே உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அதில் கிடைக்கும் ஆழம், வேறு உண்மைகளை காண நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுத்தார் தோழர் அண்ணாமலை. அவருடைய தகவல்கள் எனக்கு முக்கிய மானவையாகத் தோன்றுகின்றன. சாதிக்கலவரங்கள் ஒரு வெறி நாயைப் போன்றவை. வெறிநாய் யாரை எப்பொழுது கடிக்கும், ஏன் கடிக்கும் என்ற காரணங்களைக் கூற இயலாது. பல்வேறு காரணங்களுக்காக இந்த வெறியை உருவாக்கிவிடுகிறார்கள். ஆனால் இந்த வெறியில் கடித்துக் குதறிக் கொல்லப்பட்டவர்கள், இன்னமும் காயங்களோடு உயிர் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் பட்டியல் நீளமானது. இதனை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதுதான் இங்கு முக்கியமானது. 

Advertisment

கம்யூனிஸ்டு வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் பொய்யானவை. நாம் பெறும் அனுபவங்களும், இதை நிறைவேற்ற சமூகத்தில் நமக்கு கிடைக்கும் செயல் தளமுமே மெய்யானவை. எந்தக்காலத்திலும் வெற்றி, தோல்வி என்பது லட்சியம் சார்ந்தது அல்ல. நமக்கான மக்கள் செயல்தளத்தை, நாம் முயன்று தேடிக் கண்டுகொள்வதில்தான் இந்த வெற்றி அடங்கியுள்ளது. பெரிய அளவில் மார்க்சியத்தை கற்றுத் தேர்ச்சிபெறாத கம்யூனிஸ்டு தோழர்கள் இதை நடைமுறையில் செயல்படுத்தி அனுபவமாகப் பெற்றிருந்தார்கள். மார்க்சீய மேதை என்ற பட்டத்தோடு புறப்பட்ட சிலர், தங்கள் சொந்த  வாழ்க்கையில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள் என்ற சில உதாரணங்களையும் நானறிவேன். அதில் எல்லா காலங்களிலும் முன்மாதிரியான நடைமுறையைக் கொண்டிருந்தவர் தோழர் நல்லகண்ணு.   

தோழர் அண்ணாமலையின் தகவல்கள் இரண்டு கொலைகளைக் கூறுகிறது. 

அவர்களில் ஒருவரின் பெயர் ஐஸ் கணபதி, மற்றவர் ஈஸ்வரன். இவர்கள் இருவரின் கொலையும் சில செய்திகளைச் சொல்லுகின்றன. அன்றைய காலத்தில் ஒருவரோடு மற்றவர்கள் வன்மம் கொண்டு மோதிக்கொண்ட இரண்டு, எதிர் எதிர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள், அந்த சாதியில் பிறந்தவர்கள் என்பதை தவிர, அதன் எதிர்மறையான நடைமுறைகள் எதையுமே கற்றுக்கொள்ளாதவர்கள். மொத்தத்தில் சொல்லவேண்டுமென்றால் சாதிகளைக் கடந்த வாழ்க்கையை வாழ்ந்துவந்தவர்கள். இவர்களுக்கு, இந்த வன்முறையாளர்களின் குரூர முகத்தின் கொலைவெறி தெரிந்திருக்கவில்லை. 

Advertisment

சாதிவெறி இல்லாத சமூகத்திற்காக கம்யூ னிஸ்டுகள் பாடுபட்டதை யார்தான் மறுக்க முடி யும்? ஒரு பெரும் கூட் டத்தை, ஒரு சிலராக நின்று எதிர்ப்பதில் உள்ள பெரும் சமூக நெருக்கடி களை இவர்கள் காலந் தோறும் சந்தித்தே வந் திருக்கிறார்கள். சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் சாதியை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் கள். ஊரில் வாழக் கூடாது என்று உத்தர விடப்பட்டிருக்கிறார்கள். வேண்டாத வேலை என்று தாய், பிள்ளைகள், உறவினர் சொல்வது எதையுமே இவர்கள் காது கொடுத்துக் கேட்ப தில்லை. உறுதியோடு நின்றுவிடுகிறார்கள். 

kaithi1

காலப்போக்கில் பல்வேறு சாதிகளைச் சார்ந்த இவர்கள் ஒரு குடும்பமாகிவிடுகிறார் கள். இதில் அண்ணன், தங்கை, மாமா, அத்தை, உறவுகொண்ட வார்த் தைகள் இயல்பாகவே வந்து சேர்ந்துவிடுகிறது. சாதி தரும் உறவை விடவும், வர்க்கம் தந்த இந்த உறவு வலிமை பெற்றுவிடுகிறது. இவ்வா றான வாழ்க்கையை நான் நேரில் பார்த்திருக்கிறேன், நானும் வாழ்ந்திருக் கிறேன் என்றாலும், தோழர் நல்லகண்ணு மூலம் நான் அறிந்து கொண்டவை மிகவும் அதிகம். இந்த சமத்துவ தியாகிகளின் வாழ்க்கையும், அர்ப்பணிப்பும், இன்றும் வெளிவுலகுக்குத் தெரியாமலேயே இருக்கிறதே என்று தோழர் நல்லகண்ணு அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொள்ளும் தருணங்களில் என் மனம் புதிய வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்ளும். அந்த தருணங்கள் எனக்கு மெய்சிலிர்ப்பைக் கொண்ட தருணங்கள். 

ஐஸ் கணபதி. இவரது குடும்பம், எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. இவரது தொழில் ஐஸ் வியாபாரம். பெட்டியை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ஊர் ஊராக சென்று ஐஸ் வியாபாரம் செய்யும் வாழ்க்கை இவருக்கு. சாதிக்கலவரத்தில் ஒரு பகுதியினர், இவரை மேல்சாதிக்காரர் என்று புரிந்துகொண்டு இவரை       கொலை செய்துவிடுகிறார்கள். சாதிவெறி மிகுந்த கொலைகாரர்களுக்கு  எத்தனை பேரை கொன்றார்கள் என்ற பட்டியல் தேவைப்பட்டது. இதை வைத்து தங்கள் சாதியின் போலி வீரத்தைப் பேசியாக வேண்டும். 

வெறி பிடித்த அந்தக் கூட்டம், தங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கை மட்டும் பார்த்துக் கொண்டது. தங்கள் சாதியைவிட மற்றவர்களின் சாதியில் ஒருவரை கூடுதலாகக் கொன்றுவிட வேண்டும் என்பதற் காக அரிவாளை கையில் தூக்கிக்கொண்டு திரிந்து கொண்டிருந்தார்கள். இதில் சம்பந்தமே இல்லாத அப் பாவிகள் பலிகொள்ளப்பட்டார்கள். தங்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியோ, சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றியோ, எதையுமே அறியாத மூடர் களாக இவர்கள் இருந்தார்கள். இந்த மூடர் கூட்டத்தை ஒரு சில சுயநலக்கும்பல் இயக்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு ஒரு அரசியல் கணக்கு இருந்தது.  

ஐஸ் கணபதியின் கதை ஒருவிதம் என்றால், தோழர் ஈஸ்வரன் கதை மற்றொரு வகையைச் சார்ந்தது. என்னதான் தங்களுக்கு சாதியில்லை, மதம் இல்லை என்ற கம்யூனிச லட்சிய வாழ்க்கை வாழ்ந்து காட்டினாலும் சாதிவெறியர் கள், அவர்களிலும் சாதியைத் தேடினார்கள். ஆதிக்க சாதி என்று கூறிக்கொண்டவர்களால், ஈஸ்வரன் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டார். அவரையும் கொலை செய்துவிட்டார்கள். 

இந்த இரண்டு கொலைகளும் சாதியில்லை என்று வாழ்க்கை நடத்தியவர்களை, சாதி வெறியர்களால் சாதியின் பெயரால் செய்த கொலைகள். இதைப்போலவே, இதையொட்டி மூன்றாவது கொலையும் நடந்தது. அது தமிழ்நாட்டின் ஆன்மாவைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. 

(தொடரும்)