(89) அமைதிப் பேரணி!
ஒவ்வொரு கால மாறுதலோடு தோழர் நல்லகண்ணு அவர்களை என்னால் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. சமூகப் பொறுப்பு கொண்ட தலைவர்களை, கால மாறுதலோடு இணைத்துப் பார்ப்பதும் ஒரு சிறந்த அனுபவமாகத்தான் தோன்று கிறது. சில காலங்களில் சமூகத்திற்கு பெருந்தீங்கு விளைவிக்கும் செயல்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், தென் மாவட்டங்களில் நடந்தன. அப்பொழுது தோழர் நல்லகண்ணுவின் உணர்வுகள் என்னவாக இருந்தது என்பதையும், அதற்கான அவரது செயல்பாட்டு முறையையும் நன்கு உணர்ந்துகொண்டிருக் கிறேன்.
தென்மாவட்டங்களில், மிகவும் மோசமான நிகழ்வுகளைக் கொண்ட காலம் 1992ஆம் ஆண்டுக்கும் 1997ஆம் ஆண்டுக்கும் இடையில் அமைந்திருந்தது. சாதிவெறி தலைவிரித்தாடிய காலம் அது. உறுதியான போராட்டங்களை நடத்திவந்த கம்யூனிஸ்டு கட்சியை, அந்தக்காலம் புதிய நெருக்கடிகளை சந்திக்க வைத்துவிட்டது. கம்யூனிஸ்டுகளின் கொள்கை உறுதிக்கு சோதனை வந்த அந்தக் காலத்தை வென்று, தியாக சிகரங்களைத் தொட்ட பல கம்யூனிஸ்டுகள் அந்தக் காலத்தில் உண்டு. அந்தப் போராட்டங்களில் உயிர்நீத்த பலர், இன்றும் சமுதாயத்தின் கண்களிலிருந்து மறைந்துபோனார்கள். அவர்களை நினைவில் வைத்துக்கொள்வதும், அந்தப் போராட்ட அனுபவங்களை மறந்துவிடாமல் இருப்பதும் எதிர்கால தேவைகளில் ஒன்றாகும். இதற்கு ஒரு பின்னணியும் இ
(89) அமைதிப் பேரணி!
ஒவ்வொரு கால மாறுதலோடு தோழர் நல்லகண்ணு அவர்களை என்னால் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. சமூகப் பொறுப்பு கொண்ட தலைவர்களை, கால மாறுதலோடு இணைத்துப் பார்ப்பதும் ஒரு சிறந்த அனுபவமாகத்தான் தோன்று கிறது. சில காலங்களில் சமூகத்திற்கு பெருந்தீங்கு விளைவிக்கும் செயல்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அவ்வாறான நிகழ்வுகள் சென்ற நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், தென் மாவட்டங்களில் நடந்தன. அப்பொழுது தோழர் நல்லகண்ணுவின் உணர்வுகள் என்னவாக இருந்தது என்பதையும், அதற்கான அவரது செயல்பாட்டு முறையையும் நன்கு உணர்ந்துகொண்டிருக் கிறேன்.
தென்மாவட்டங்களில், மிகவும் மோசமான நிகழ்வுகளைக் கொண்ட காலம் 1992ஆம் ஆண்டுக்கும் 1997ஆம் ஆண்டுக்கும் இடையில் அமைந்திருந்தது. சாதிவெறி தலைவிரித்தாடிய காலம் அது. உறுதியான போராட்டங்களை நடத்திவந்த கம்யூனிஸ்டு கட்சியை, அந்தக்காலம் புதிய நெருக்கடிகளை சந்திக்க வைத்துவிட்டது. கம்யூனிஸ்டுகளின் கொள்கை உறுதிக்கு சோதனை வந்த அந்தக் காலத்தை வென்று, தியாக சிகரங்களைத் தொட்ட பல கம்யூனிஸ்டுகள் அந்தக் காலத்தில் உண்டு. அந்தப் போராட்டங்களில் உயிர்நீத்த பலர், இன்றும் சமுதாயத்தின் கண்களிலிருந்து மறைந்துபோனார்கள். அவர்களை நினைவில் வைத்துக்கொள்வதும், அந்தப் போராட்ட அனுபவங்களை மறந்துவிடாமல் இருப்பதும் எதிர்கால தேவைகளில் ஒன்றாகும். இதற்கு ஒரு பின்னணியும் இருந்தது.
கொடியங்குளம் கலவரம் 1995ஆம் ஆண்டில் தொடங்கியது. தனி டீ கிளாஸ், பஸ் பயணத்தில் தனியாக அமரவைக்கும் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் பிரச்சினைகள் எழுந்தன. விழிப்படைந்த புதிய தலைமுறை ஒன்று, இதை எதிர்க்கத் தொடங்கியிருந்தது. தனக்கு சமம் இல்லை என்ற ஆதிக்க உணர்வு, மனிதரை என்ன பாடுபடுத்திவிடுகிறது என்பதற்கு அந்தக் காலத்தை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். இதைப் போன்ற மற்றொரு நிகழ்வு, மேலவளவு கொடுமையாகும். இந்தக் கொடுமை 1997ஆம் ஆண்டில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தோழர் தொல்.திருமாவளவன், குற்றவாளிகளைக் கைதுசெய்ய பெரும் போராட்டங்களை நடத்திவந்தார். கம்யூனிஸ்டு கட்சிகளும் இதில் தீவிரமாக பங்கெடுத்து வந்தன. அதைப்போன்ற ஒரு கலவரம் ஒன்று காட்டுமன்னார்குடி பகுதியிலும் நடைபெற்றது.
இந்த நிலையில், வேறு ஒரு சூழல் தோன்றியிருந்தது. தென்மாவட்டங்களில் எந்த சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அவர்கள் ஆதிக்கத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு அராஜகச் செயல்களை செய்யத் தொடங்கினர். இது உரிமைப் போராட்டம் என்பதிலிருந்து வேறு பாதையில் செல்லத் தொடங்கியது. இதில் உயிருக்குப் பயந்து ஊர், ஊராக ஓடிய குடும்பங்கள் எத்தனையோ உண்டு. அதில் அன்றைய இளைஞர் மன்றத் தோழர்களில் பலர் பெரும் பாதிப்படைந்ததை நானறிவேன். இதில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் லிங்கமும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடிவரும் கம்யூனிஸ்டு கட்சியின் கொடி எல்லா ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குடியிருப்பிலும் ஏற்றப்பட்டிருப்பதை நாம் அறிவோம். சில குழுக்கள், அவர்களும் தலித் அமைப்புகள்தான். எல்லா அரசியல் கட்சிகளின் கொடியை அகற்றவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கி யிருந்தார்கள். அச்சம் தரும் சூழல்... சாதியின் பெயரால் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லா கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டுவிட்டன, ஒரு கொடி மட்டும் அகற்றப்படாமல் தலைநிமிர்ந்து நின்றது. அது கம்யூனிஸ்டு கட்சிக் கொடி. இதற்கு தோழர் லிங்கமும், முத்தையாபுரம் கிளை தோழர்களும் காரணமாக இருந்தார்கள்.
இதில் லிங்கம் சந்தித்த நெருக்கடிகள் மிகவும் கூடுதலாகும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்தப் பகுதி முழுவதும் மரண பயம் கவ்வியிருந்தது. லிங்கத்தால் அங்கு வாழ முடியவில்லை. வத்திராயிருப்பு கட்சி அலுவலகத்தில் சில காலம் தங்கியிருந்தார். ஓராண்டுக்கு மேலாக இவரால் ஊருக்குச் செல்ல முடியவில்லை... சூழல் மாறியது. ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, கட்சிக் கொடிகளை அகற்றியது தவறு என்பதை சுட்டிக் காட்டிய தோடு, கம்யூனிஸ்டுகள் தைரியமாக இதை எதிர்த்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரும் இதே பாராட்டுதலை கம்யூனிஸ்டு தோழர்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆளுமை மிகுந்த கம்யூனிச தலைவர் ப. மாணிக்கம், மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுபட்டு, 1992ஆம் ஆண்டு ஆர்.நல்ல கண்ணு பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த காலத்தி லிருந்து, நான் அவருடன் இணைந்து துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளேன். அப்பொழுது நடந்தவை அனைத்தும் எனக்குத் தெரியும். 1996ஆம் ஆண்டு தேர்தலில் வெற்று பெற்று, கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் கணிசமாக சட்டமன்றத்தில் இருந்தனர். இந்த சட்டமன்றத்தின் குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் அதில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களின் கருத்து, எத்தகைய ஆழம்கொண்டது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். கூடுதல் நேரம் எடுத்து அதற்கான குறிப்புகளை எடுத்துக் கொடுத்து, அதை சபையில் பேசவைக்க தோழர் நல்லகண்ணு எடுத்த முயற்சிகள் அளவிட முடியாதவை.
இந்த செயல் திட்டம், கம்யூனிஸ்டுகளுக்கு அடிப்படையானது என்றாலும், பல்வேறு காரணங்களால் இந்த செயல் திட்டங்கள் கம்யூனிஸ்டு இயக்கங்களால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதில் தோழர் நல்லகண்ணு அவர்கள் எப்பொழுதுமே கவனத்துடன் இருப்பார். எல்லாவற்றையும் மக்கள் அரசியல் மூலமாகவே செயல்படுத்த முயற்சி செய்வார். உறுதிப்பாடு கொண்ட மக்களின் முன்ன ணிப் படை இல்லாமல் எந்த முன்னேற்றத்தையும் செய்ய இயலாது என்ற கொள்கையில் உறுதியோடு இருப்பார். தோழர் நல்லகண்ணு முன்முயற்சியில் தொடங்கப்பட்டதுதான் அமைதிப் பேரணி. சாதி வெறி அகற்றி சமத்துவ மாண்பை நிலைநிறுத்த, இந்தப் பேரணிக்கு திட்டம் வகுக்கப்பட்டது. தோழர் நல்லகண்ணு தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இந்தப் பேரணிக்கு பல அனுபவங்கள் உண்டு. பல இடங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. சில இடங்களில் எதிர்ப்பிருந்தது. இந்த அனுபவங்கள் சமூகப் போராட்டக்காரர்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கவை.
‘ஒரு கிராமம் ஒடுக்கப்பட்ட மக்களை, பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்தது. சாதிய ஒடுக்குமுறையால் பல நெருக்கடிகளை சந்தித்த கிராமம். அங்கு அமைதிப் பேரணி செல்கிறது. ஊருக்குள் வரக்கூடாது என்று ஒரு கூட்டம் தடுக்கிறது. அதன் கண்களில் தெரியும் கோபம் அங்கு எதுவுமே நடக்கலாம் என்ற உணர்வை உருவாக்கிவிடுகிறது. திரும்பிச் சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் நல்லகண்ணு.
அப்பொழுது அந்த பெரியவர் உரக்கச் சொல்கிறார். "இந்த ஊரில் காலில் செருப்பு போடச் சொல்லி, தோளில் துண்டு போட சொல்லி அழைத்துச்சென்றவர் நல்லகண்ணு, அவரை வரவேண்டாம் என்கிறீர்களா?' என்று அவர் கையைப் பிடித்து ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அமைதிப் பேரணி தடையின்றி ஊருக்குள் நுழைகிறது. இதில்தான் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை தெரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)