Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (88)

kaithi

(88) தோழரின் கண்ணீர்!


புகைப்படங்கள் எத்தனையோ கதைகளை எளிதாகச் சொல்லிவிடுகின்றன. இங்கு காணப்படும் புகைப்படமும் காலங்களைக் கடந்து வந்து ஒரு கதையைச் சொல்லுகிறது. புகைப்படத்தில் காணப்படும் இருவரும் பொதுவாக முழு காற்சட்டையும், கோட்டும் அணிபவர்கள் அல்ல. வேட்டியும் -சட்டையும் மட்டும் அணியக்கூடியவர்கள். இந்த வித்தியாசமான படத்தை ஏதாவது ஒரு குளிர்மிகுந்த அயல்நாட்டில்தான் எடுத்திருக்க வேண்டும். இந்த இருவரில் ஒருவர் தோழர் நல்லகண்ணு. மற்றவர் தோழர் எஸ்.ஜி. முருகையன். இருவரும் இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்ட இடம் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ.

Advertisment

அன்றைய நாட்களில் ரஷியா, சோவியத்து நாடு என்று அழைக்கப்பட்டது. பல மொழி பேசும் மக்களின் ஒன்றியம். அது மட்டுமல்லாது, உலகப் பொதுவுடமை இயக்கத்தின் கூடுதுறை. உலகில் வாழும் கம்யூனிஸ்டுகள் அனைவ ருக்குமான பயிற்சிப் பாசறை. மார்க்சீயத்தை கற்றுக் கொடுப்பதற்கென்று தனியாக அங்கு பல்கலைக்கழகம் இருந்தது. பூமி பரப்பெங்கும் செயல்பாட்டிலிருந்த, பொதுவுமை இயக்கங் கள், தங்கள் செயல்பாட்டாளர்களை தேர்வு செய்து, இங்கு அனுப்பிவைத்துக்கொண்டி ருந்தனர். கடல் கடந்து, பல அழகிய சஞ்சிகைகளையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் சுமந்த கப்பல்கள் மூன்றாவது உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்தன. அவை வியாபாரம் செய்ய வரவில்லை. மார்க்ச

(88) தோழரின் கண்ணீர்!


புகைப்படங்கள் எத்தனையோ கதைகளை எளிதாகச் சொல்லிவிடுகின்றன. இங்கு காணப்படும் புகைப்படமும் காலங்களைக் கடந்து வந்து ஒரு கதையைச் சொல்லுகிறது. புகைப்படத்தில் காணப்படும் இருவரும் பொதுவாக முழு காற்சட்டையும், கோட்டும் அணிபவர்கள் அல்ல. வேட்டியும் -சட்டையும் மட்டும் அணியக்கூடியவர்கள். இந்த வித்தியாசமான படத்தை ஏதாவது ஒரு குளிர்மிகுந்த அயல்நாட்டில்தான் எடுத்திருக்க வேண்டும். இந்த இருவரில் ஒருவர் தோழர் நல்லகண்ணு. மற்றவர் தோழர் எஸ்.ஜி. முருகையன். இருவரும் இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்ட இடம் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ.

Advertisment

அன்றைய நாட்களில் ரஷியா, சோவியத்து நாடு என்று அழைக்கப்பட்டது. பல மொழி பேசும் மக்களின் ஒன்றியம். அது மட்டுமல்லாது, உலகப் பொதுவுடமை இயக்கத்தின் கூடுதுறை. உலகில் வாழும் கம்யூனிஸ்டுகள் அனைவ ருக்குமான பயிற்சிப் பாசறை. மார்க்சீயத்தை கற்றுக் கொடுப்பதற்கென்று தனியாக அங்கு பல்கலைக்கழகம் இருந்தது. பூமி பரப்பெங்கும் செயல்பாட்டிலிருந்த, பொதுவுமை இயக்கங் கள், தங்கள் செயல்பாட்டாளர்களை தேர்வு செய்து, இங்கு அனுப்பிவைத்துக்கொண்டி ருந்தனர். கடல் கடந்து, பல அழகிய சஞ்சிகைகளையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் சுமந்த கப்பல்கள் மூன்றாவது உலக நாடுகளின் துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்தன. அவை வியாபாரம் செய்ய வரவில்லை. மார்க்சீய நூல்களை வாசிக்க வைக்க வந்தன. அது மார்க்சீயக் கல்விக்கான உலகின் பொற்காலம் இது. இந்த சூழலில் தமிழ் நாட்டிலிருந்து, உயர் மார்க்சீயக் கல்வி கற்றுக் கொள்வதற்கென்று குழு ஒன்று, ரஷியாவிற்கு அனுப்பப்பட்டது. அதில் தோழர்கள் நல்லகண்ணு, எஸ்.ஜி.முருகையன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தார்கள். இந்த இருவரும் ஒத்தஉருவம் கொண்டவர்கள். நாட்டுப்புறப் பண்பிலே ஊறி வளர்ந்தவர்கள். அவர்களிடம் அமைந்த தோழமையும் நாட்டுப்புறத் தன்மையிலேயே அமைந்திருந்தது. 

Advertisment

தோழர் நல்லகண்ணு பார்வையில், தோழர் எஸ்.ஜி.முருகையனின் வாழ்க்கையை பல சந்தர்ப்பங்களில் நான் அறிந்திருக்கிறேன். ஒரு காவிய வாழ்க்கையை வாழ்ந்தவர் முருகையன். இந்த காவியத் தன்மையைப் பெறுவதற்கு, அதற்குள் பல்வேறு காரணங்கள் இருந்தன. மூர்க்கத்தனம் கொண்ட பண்ணையார் உலகத்தில், ஒடுக்கப் பட்ட மக்களில் ஒருவராக பிறந்து, போராட்டங் களின் மூலம் தலைமைக்கு தன்னை தகுதிப்படுத் திக் கொள்வது அத்தனை எளியது அல்ல. தனித் துவம் கொண்ட போர்க்குணம், விடாமுயற்சி ஆகியவை இல்லாமல் அன்றைய காலத்தில் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது. ஒரு எளிய மனிதரின் சாதாரண வாழ்க்கையிலிருந்து தொடங்கிய இவரது பயணம், சிகரத்தை தொட்டுவிட்ட நிலையில் தான் அந்த துயரம் நிகழ்ந்தது. இவை அனைத்தையும் உள்ளும், புறமும் அறிந்தவர் நல்லகண்ணு. 

அந்த எளிய மனிதரின் வாழ்க்கை, அன்றைய தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட் டைக்கு அருகில் அமைந்த சித்தமல்லி என்னும் கிராமத்தில் பிறப்பெடுத்திருந்தது. அன்றைய, இவரது புறச்சூழல் இளம் வயதிலேயே இவரை ஒரு சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்யத் தூண்டியிருக்க வேண்டும். கால்நடையாக முத்துப்பேட்டைக்கு படிக்கச் சென்ற இவரால், உயர்நிலைக் கல்வியை முடிக்க முடியவில்லை. சமுதா யப் பிரச்சனைகள் இவரை அரசியலாய் கவ்விக் கொண்டன. பள்ளி இறுதித் தேர்வு வந்தது. சுற்றியிருந்த ஆதிக்க சக்திகள் தந்த நெருக்கடியில், இவர் தேர்வு எழுதுவதற்கு தடையும் வந்துசேர்ந்தது. ஆனால் முருகையன் அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. சமூக மாற்றத்திற்கான பணியில் தன்னை முழு மையாக தயாரித்துக் கொள்ளும் தீவிரத்தில் இறங்கிவிட்டார், 

kaithi1

அதன்பின்னர் நொச்சியூர் ஊராட்சி மன்றத் தலைவ ரானார். ஆரம்ப காலத்திலேயே இவர் ஒரு கலகக்காரர். முதல் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர். இதன் பின்னர் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர். அன்றைய ஒன்றிய தலைவர் தேர்வுமுறை வேறாக இருந்தது. 1961ஆம் ஆண்டு தேர்தல். அன்றைய தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக வரமுடியாது. அந்த அளவிற்கு சாதியின் ஆதிக்கம் இருந்தது.  இந்திய அளவில் முதலில் இந்த பதவிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டார். அப்பொழுதுதான் சிரமதான முருகையன் என்னும் பெயர் இவருக்கு வந்தது. முத்துப்பேட்டைக்கும் மன்னார்குடிக்கும் இடைப்பட்ட பகுதி சேறும் சகதியும் நிறைந்த பகுதி. இங்கு எந்த சாலை வசதியும் கிடையாது. இங்கு பாமினி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் கரையில் சாலை அமைக்க முடியும். இதற்கு திட்டம் போட்ட அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. பணம் இல்லை என்று கையை விரித்துவிட்டது. அது தொழில்நுட்ப வசதி சிறிதுகூட இல்லாத காலம். இவர் மக்களைத் திரட்டி பெரும் பள்ளத்தை மேடாக்கி சாலையை அமைத்துக் காட்டினார். இன்றைய கணக்குப்படி மொத்தம் 45 கிலோமீட்டர் தூரம். 

ஒரு கட்டத்தில் தோழர் நல்லகண்ணுவுக்கும் அவருக்குமான ஆழ்ந்த தோழமையை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அரசியலில் எத்தனையோ மாற்றங்கள். எத்தனையோ கூட்டணிகள். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணா தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய மூன்றும் ஓரணியில் நின்று போட்டியிட்டன. தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே கடும் போட்டி உள்ள தொகுதியாக நாகப்பட்டினம் கருதப்பட்டது. தோழர் நல்லகண்ணு, தேர்தல் பொறுப்பேற்று அங்கு வந்திருந்தார். நான் முதன்முதலில் பங்கேற்று பிரச்சாரம் செய்த தேர்தலும் அதுதான். அந்த இனிய நினைவுகள் ஒவ்வொன்றையும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அந்த தேர்தலில் தோழர் எஸ்.ஜி.முருகையன் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெறுகிறார். 

வெற்றுபெற்று இரண்டு ஆண்டுகள் அப்பொழுது தான் முடிந்திருந்தது. இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் பதறுகிறது. அவர் கொலை செய்யப் படுகிறார். அப்பொழுது 46 வயது முடிவடைந்திருந்தது. அவரது உடலில் மொத்தம் 32 கத்திக் குத்துகள். இதில் முதுகில் 8, நெஞ்சில் 25 குத்துகள். இது பற்றிய விபரங்களை பின்னர் மருத்துவ அறிக்கைகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. முதலில் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியிருக்கிறார்கள். மார்கழி பனிப்பொழிப்பு கொண்ட இரவு. எந்த இருளையும் கிழித்துக்கொண்டு ஒரு மின்னலைப் போல அச்சமற்று பயணம் செய்யும், அந்த மாவீரனுக்கு... அந்த இருள், உயிர் வாழ்க்கையையே இருளாக்கிவிட்டது. 

அந்த காட்சியை என் மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திப் பார்க்கிறேன். வெள்ளை நிறத்திலான வேட்டி சட்டை முழுவதும் ரத்தக் கறை. அந்த உடலுக்கு அருகில் ஒரு சோகம் நிறைந்த உருவம். பெரும் அழுகுரல் பெருக்கத்துக்கு இடையே அமைதியாக நின்று, தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து தன் கண்களில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறது. மாவீரன் முருகையனின் தோழமையும் நட்பும் அந்தக் கண்ணீரில் கரைந்து வழிந்துகொண்டிருந்தது. அந்தக் கண்ணீருக்குச் சொந்தக்காரர் தோழர் நல்லகண்ணு. 

(தொடரும்)

nkn041025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe