(87) நீதிமன்றத்தின் சாம்பல்!
வெண்மணிக்கு பிந்தைய காலம் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு முக்கியமான காலமாகும். தீயில் எரிந்து சாம்பலானதை விட, மிகவும் குரூரமான ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் அதில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, இந்த அமைப்பு முறையின் குற்றம். தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆட்சிமுறை தன் வர்க்கநலனை பாதுகாக்கவே அது செயல்பட்டு வந்திருக்கிறது. அதற்காக எந்தக் குற்றத்தையும் செய்ய அது தயாராக இருக்கிறது. நீதி, நியாயங்கள் பற்றி அது கவலைப்பட்டுக் கொள்வதில்லை. தன் வர்க்க நலனைப் பாதுகாப்பதில் மட்டுமே அது அக்கறை கொள்கிறது.
ஆரம்ப காலங்களில் எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது உண்டு. வர்க்க நலன் என்று சொல்லுகிறார்களே, அது உண்மை தானா? என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் சுயநலம் என்ற ஒன்று இருக்கத் தான் செய்கிறது. இதிலிருந்து விடுபட்டவர், ஆயிரத்தில் ஒருவராக இருப்பதையும் நான் அறிவேன். இதில் வர்க்க நலன் என்ற ஒன்று உண்டா? என்ற சந்தேகங்கள் எழுந்த காலங்கள் இருந்தன. வெண்மணி பெருங்கொலைக்குப் பின்னர், நீதிமன்ற தீர்ப்புகள், நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்த சாட்சிகள் ஆகியவை எனக்கு இந்த சந்தேகங்களைப் போக்கி விட்டன. சுரண்டல் வர்க்கம், கண்ணுக்குத் தெரியாமல் வர்க்கநல னைப் பாதுகாத்துக் கொள்ள, எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இது பற்றிய ப
(87) நீதிமன்றத்தின் சாம்பல்!
வெண்மணிக்கு பிந்தைய காலம் ஒரு ஆராய்ச்சியாளனுக்கு முக்கியமான காலமாகும். தீயில் எரிந்து சாம்பலானதை விட, மிகவும் குரூரமான ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் அதில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது, இந்த அமைப்பு முறையின் குற்றம். தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆட்சிமுறை தன் வர்க்கநலனை பாதுகாக்கவே அது செயல்பட்டு வந்திருக்கிறது. அதற்காக எந்தக் குற்றத்தையும் செய்ய அது தயாராக இருக்கிறது. நீதி, நியாயங்கள் பற்றி அது கவலைப்பட்டுக் கொள்வதில்லை. தன் வர்க்க நலனைப் பாதுகாப்பதில் மட்டுமே அது அக்கறை கொள்கிறது.
ஆரம்ப காலங்களில் எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது உண்டு. வர்க்க நலன் என்று சொல்லுகிறார்களே, அது உண்மை தானா? என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் சுயநலம் என்ற ஒன்று இருக்கத் தான் செய்கிறது. இதிலிருந்து விடுபட்டவர், ஆயிரத்தில் ஒருவராக இருப்பதையும் நான் அறிவேன். இதில் வர்க்க நலன் என்ற ஒன்று உண்டா? என்ற சந்தேகங்கள் எழுந்த காலங்கள் இருந்தன. வெண்மணி பெருங்கொலைக்குப் பின்னர், நீதிமன்ற தீர்ப்புகள், நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்த சாட்சிகள் ஆகியவை எனக்கு இந்த சந்தேகங்களைப் போக்கி விட்டன. சுரண்டல் வர்க்கம், கண்ணுக்குத் தெரியாமல் வர்க்கநல னைப் பாதுகாத்துக் கொள்ள, எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இது பற்றிய பல விளக்கங்களை தோழர் நல்லகண்ணு மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
நல்லகண்ணு தஞ்சை வந்துவிட்டால், அவரோடு இடையறாது உரையாடிக் கொண்டிருக்கும் காலம். ஒவ்வொன்றையும் புதிய கோணங்களில் அவரால் விளக்க முடிந்தது. கம்யூனிஸ்டுகள் ஒரு பிரச்சனையை எப்படிப் பார்க்கிறார்கள், எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் மிகவும் தெளிவாகத் தெரிந்துகொண்ட காலமும் இதுதான். இவையெல்லாவற்றையும் வர்க்கக்கண்ணோட்டத்தில் பார்க்கும் தெளிவைப் பெற்றுக் கொண்டேன். வெண்மணி கொலைக்குப் பின்னர் நடந்த அரசியல் சிக்கல் எத்தனையோ இருந்தது. அதில் நீதிமன்றம் உருவாக்கிய சிக்கல் மிகவும் முக்கியமானது.
இந்த பெருங்கொலைக்கு காரணமான கொலையாளி இரிஞ்சூர் கோபால கிருஷ்ணநாயுடு விடுதலை பெறுகிறார். 1975 ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. அப்பொழுது நான் திருவாரூர் கல்லூரி மாணவன். அந்த நாளை ஒரு துக்கநாளாக நாங்கள் நினைத்துக்கொண்டோம். ஒரு சாதாரண மனிதனைக் கேட்டால்கூட சொல்லிவிடுவார்கள், இத்தகைய படுகொலைக்கு காரணமான நபரை தூக்கிலிட வேண்டும் என்று. நீதித்துறையின் தீர்ப்பு, அதன் வர்க்கநலனை எனக்கு உணர்த்திவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் நீதியை சாம்பலாக்கிவிட்டது நீதிமன்றம்.
இதற்கு முன்னர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும், காவல்துறை தயாரித்து வைத்திருந்த சாட்சியங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். வழக்கு மொத்தம் நான்கு ஆண்டுகள், மூன்று மாதங்கள் நடைபெற்றன. நீதிபதி தனது 95 பக்கத் தீர்ப்பை எழுதியிருந்தார். இதில் ஒரு கடிதம் பற்றி மூன்று பக்கங்களில் குறிப்பிட் டிருந்தார். இந்த கடிதம் வெண்மணி நிகழ்வுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் அன் றைய தமிழக முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கு, நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் கோபாலகிருஷ்ண நாயுடுவால் எழுதப்பட்டிருந்தது. அதில் கீழத்தஞ்சை மாவோயிசத்தின் விளைநிலமாக மாறிக் கொண் டிருக்கிறது. என் உயிருக்கும், நெல் உற்பத்தியாளர் உயிருக் கும், அவர்கள் குடும்பத்தின ருக்கும் எந்த பாதுகாப்பு இல் லை என்ற வரிகள் இருந்தன.
இது நீதிபதியின் தீர்ப் பில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தன் உயிருக்கும் தன் குடும்பத் தினர் உயிருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்று அச்சம்கொண்டிருந்தார். இந்தக் கடிதம் ஒரு ஆழமான தனிப்பட்ட விரோதம் கம்யூனிஸ்டு விவசாய சங்கத் திற்கும், நெல் உற்பத்தியாளர் சங்க தலைவருக்கும் இருந்தது என்பதை ஆதாரமாகக் கொண்டிருந்தது. இதுவே அவர் மீது குற்றச்சாட்டை உருவாக்கிக்கொள்வதற்கு காரணமாக அமைந்திருக்க லாம் என்று அவர்களின் நீதி முடிவுக்கு வந்திருந்தது. கடிதத் தில் நீதிபதி சுட்டிக்காட்டிய மாவோயிஸ்டு என்பதை, ஒரு வர்க்க அரசியலின் வெளிப் பாடாகவே நான் புரிந்து கொள்கிறேன்.
இதைப்பற்றி நீதிமன்றத் தீர்ப்பில், குறிப்பிட்ட மற்றொரு வரி, நீதித்துறையை முற்றும் முழுவதுமாக அம்பலப்படுத்திவிட்டது. நீதிமன்றத்தின் வர்க்கச் சார்பை இதன்மூலம் வெட்கம் எதுவுமே இன்றி வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது. கண்டனத்துக்குரிய இந்த வரிகள் இவைதான்: "இந்த வழக்கில் குற்றவாளிகளாக்கப்பட்ட 23 பேர் பெரும் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இவர்களில் முதல் குற்றவாளி கார் வைத்துக்கொள்ளும் அளவிற்கு வசதி படைத் தவர். இவர்கள் இந்தச் செயலை செய்திருக்கமாட்டார்கள்' என்பதும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வசதி படைத்தவர்கள் குற்றம் செய்யமாட்டார்கள். எதுவுமற்றவர்கள்தான் குற்றம்புரிவார்கள் என்பது எவ்வாறு வர்க்கச் சார்புக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியும்? இந்தப் பின்னணியில் ஒரு புதிய அரசியல் உருவாகும் சூழல் எழுந்திருந்தது. இந்த சூழலில் தோழர் நல்லகண்ணு சுற்றிச்சுழன்று ஆற்றிய பணிகளை யாராலும் மறக்க முடியாது.
அப்பொழுது பிறந்ததுதான் கணபதியா கமிஷன். இதில் விவசாயத் தொழிலாளர்களின் பொருளாதார சமூகப் பின்னணிகளை கொண்டுபோய்ச் சேர்க்க பெரும் களப்பணியை மேற்கொண்டிருந்தார் நல்லகண்ணு. இது எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சியாக அமைந்திருந்தது. கிராமப்புற பாட்டாளிகள் என்று அழைக்கப்பட்ட மக்களுக்கு இது புதிய உத்வேகத்தை வழங்கி விழிப்படையச் செய்ய... இதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.
வெண்மணியை ஒட்டி நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். அது 1980 ஆம் ஆண்டில் நடந்தது. வெண்மணி பெருங்கொலைக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பெரும் சம்பவம் நிகழ்ந்தது. வெண்மணி தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு அருகில், கோபால கிருஷ்ண நாயுடு கொலை செய்யப்பட்டு ஒரு அனாதைப் பிணத்தைப் போலக் கிடந்தார். வரலாறு எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. அந்தக் கொலையை செய்தவர்கள் என்று 12 பேரை, காவல்துறை கைதுசெய்து அடையாளப்படுத்தியிருந்தது. இதை ஆராய்ந்து பார்க்கும் போது, வேறு ஒரு விவரம் நமக்குக் கிடைக்கிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருந்தனர். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர்.
நீதிமன்றத்தால் தரப்படாத தண்டனை, அந்தக் குற்ற வாளிக்கு கிடைத்தது. ஒரு மாலைப்பொழுதில் தோழர் நல்ல கண்ணு அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். இது போன்ற செய்திகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். இது போன்ற கேள்விகளுக்கு அவர் நிதானமாக பதிலளித்து விடுவார். அப்பொழுது பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார். முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்சிரிப்பும் வெளிப்பட்டது. ஆனாலும் அவர் மௌனம் காத்தார். அந்த மௌனத்தின் அர்த்தம், மிக நன்றாகவே எனக்கு புரிந்தது.
(தொடரும்)