Advertisment

கைதி எண் 9658 -சி.மகேந்திரன் (85)

kaithi

(85) திருமணத்திற்கு தலைமை 


டுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு சில அடிப்படையான பண்புகள் தேவைப்படுகின்றது. அந்த பண்புகள் திடீரென்று ஒரேநாளில் தோன்றிவிடுவதில்லை. இந்த பண்பை இவர்கள் சொந்த வாழ்க்கையில் பல காலம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். சாதிகளின் மோதல்கள் நிறைந்த, இன்றைய சமூகத்தில் மிகவும் தவறான எண்ணங்கள் தோற்றுவிக்கப்பட்டுவிடுகின்றன. சாதிகளின் வழியாக மட்டும் மனிதர்களைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் வந்து விட்டது. இதில் வெற்றி பெறுதல் லட்சிய மனிதர்களுக்கு அத்தனை சுலபமானதாக இல்லை. இதற்கான நடைமுறைகளை, தோழர் நல்லகண்ணு வாழ்க்கை யிலிருந்து நாம் கற்றுக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்று கிறது. இதற்கான அடிப்படைகளை கம்யூனிஸ்டு கட்சி இவருக்கு .அமைத்துக் கொடுத்திருந்தது என்பதும் உண்மைதான். 

Advertisment

ஆனாலும் கம்யூனிஸ்டுகளிலும், இவர் எப்படி வித்தியாசமானவராக இருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. பொதுவாக கம்யூனிஸ்டு கட்சிகளில், ஒருவர் என்ன சாதியில் பிறந்தார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லாவற்றை யும் சாதியாகப் பார்க்கும் இன்றைய சமூகத்தில், கம்யூனிஸ்டு கட்சிகளில் அமைந்த இந்த வேறு பாட்டை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சாதிமறுப்புத் திருமணங்கள் மிகவும் இயல்பாக கம்யூனிஸ்டு கட்சியில், பல ஆண்டு களுக்கு முன்னரே தொடங்

(85) திருமணத்திற்கு தலைமை 


டுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு சில அடிப்படையான பண்புகள் தேவைப்படுகின்றது. அந்த பண்புகள் திடீரென்று ஒரேநாளில் தோன்றிவிடுவதில்லை. இந்த பண்பை இவர்கள் சொந்த வாழ்க்கையில் பல காலம் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். சாதிகளின் மோதல்கள் நிறைந்த, இன்றைய சமூகத்தில் மிகவும் தவறான எண்ணங்கள் தோற்றுவிக்கப்பட்டுவிடுகின்றன. சாதிகளின் வழியாக மட்டும் மனிதர்களைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் வந்து விட்டது. இதில் வெற்றி பெறுதல் லட்சிய மனிதர்களுக்கு அத்தனை சுலபமானதாக இல்லை. இதற்கான நடைமுறைகளை, தோழர் நல்லகண்ணு வாழ்க்கை யிலிருந்து நாம் கற்றுக் கொள்வது அவசியம் என்று எனக்குத் தோன்று கிறது. இதற்கான அடிப்படைகளை கம்யூனிஸ்டு கட்சி இவருக்கு .அமைத்துக் கொடுத்திருந்தது என்பதும் உண்மைதான். 

Advertisment

ஆனாலும் கம்யூனிஸ்டுகளிலும், இவர் எப்படி வித்தியாசமானவராக இருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. பொதுவாக கம்யூனிஸ்டு கட்சிகளில், ஒருவர் என்ன சாதியில் பிறந்தார் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லாவற்றை யும் சாதியாகப் பார்க்கும் இன்றைய சமூகத்தில், கம்யூனிஸ்டு கட்சிகளில் அமைந்த இந்த வேறு பாட்டை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சாதிமறுப்புத் திருமணங்கள் மிகவும் இயல்பாக கம்யூனிஸ்டு கட்சியில், பல ஆண்டு களுக்கு முன்னரே தொடங்கி விட்டது என்பதற்கு பல்வேறு ஆதாரங்களைக் கூற முடியும். 

அடுத்தவருக்கு உபதேசம் என்பதைப்போல் இல்லாமல், ஒவ்வொன்றிலும் தங்களை முன்னுதாரணமாகக் காட்டவே தொடக்க காலத்தில் கம்யூனிஸ்டுகள் விரும்பினார்கள். இதை உறுதி செய்ய, தோழர் ஆதிமூலம் குறிப்பிட்டு சொல்லும் நிகழ்ச்சி ஒன்று முக்கியமானதாகும். இவர்கள் இருவரும் விவசாய சங்கத்திலும், விவசாய தொழிலாளர் சங்கத்திலும் அடித்தள மக்களோடு இணைந்து பணியாற்றியதில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருந்தார்கள். 

தோழர் நல்லகண்ணு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். சேற்றிலும் வயல் வெளிகளிலும் மட்டுமே வாழ தெரிந்த இந்த மக்க ளின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. இந்த உழைப்பாளி மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஆதிக்கசமூகம் ஒதுக்கி வைத்திருந் தது. அவர்கள் எதையுமே கேட்கும் உரிமையற்ற வர்களாகவே இருந்தனர். தோழர் நல்லகண்ணு இந்த எளிய மக்களுக்குத்தான் பணியாற்றுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். இதற்காக ஆதிக்க சக்திகளால் அடிமைப்படுத்தபட்ட பகுதி கள்தோறும் காலடி எடுத்துவைக்கத் தொடங்கி யிருந்தார். அவருடைய இந்த  அனுபவங்கள் மூலம் கிடைத்த அனைத்தையும் தொகுத்து  தோழர் ஆதிமுலம், நல்லகண்ணுவின் 80ஆவது ஆண்டு மலரில் கட்டுரையாக எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் நல்லகண்ணு பற்றிய அறியப்படாத பல தகவல்கள் அடங்கியுள்ளன.

Advertisment

kaithi1

‘அந்தக் காலங்களில் அவரை விவசாய சங்க செயலாளராக மட்டும் பார்க்காமல், அவரை விவசாயத் தொழிலாளராகவே தோற்றத்தில் நாங்கள் பார்த்தோம் என்கிறார். நடையுடை, பழக்க வழக்கங்கள், என்று மிகவும் எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்துவந்தார். தஞ்சை மாவட்டத்தின் விரிந்த நிலப் பரப்பு காவிரி டெல்டா. இதன் வளமை உலகப் புகழ்பெற்றது. இதன் உற்பத்தி வளத்திற்கு காரணமாக இருந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நாகரிக உலகத்தால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத படி பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தது. 

அந்த மக்களுக்காக, தங்கள் வாழ்நாள் அர்ப்பணிப்பைத் தந்த கம்யூனிஸ்டுகள் பலர் இந்தப் பகுதியில் உண்டு. அவர்களின் பெயர்களைக்கூட இன்றைய சமூகம் மறந்துவிட்டது. கடல் நோக்கி பயணம் செய்யும் கொள் ளிடம் என்றால், அதே போன்ற தொரு பேரழகில் உருவாகிய நகரம்தான் சீர்காழி. வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து, அந்த எளிய மக்களுக்காக தன் னை அர்ப்பணித்துக்கொண்டவர் தோழர் அண்ணங்கார். இன்றும் அந்தக் குடும்பத்தின் வழித்தோன் றல்கள், கம்யூனிசக் கொள்கைகளி லிருந்து மாறாத குணம் கொண்ட வர்களாக இருக்கின்றனர். அந்த பாரம்பரியத் தொடர்ச்சியைப் பார்க்கும்போதெல் லாம் என் மனது மகிழ்ச்சியடையும். அந்த மண்ணில் தோன்றிய மற்றொரு தலைவர்... தோழர் சிவநேசன். 

இவர் நிலவுடமை சமூகத்தைச் சார்ந்தவர். ஆனால் நிலமற்று தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த விவசாயத் தொழிலாளர் களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவத்தைப் பற்றிதான் ஆதிமூலம் அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். தோழர் சிவநேசன் தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார். மாவட்ட குழு மூலம் மாநிலக் குழுவிற்கு தோழர் நல்லகண்ணு தலைமை ஏற்று திருமணத்தை நடத்தித் தரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளார். 

தோழர் நல்லகண்ணு சீர்காழிக்கு வந்து, திருமணமும் நடைபெற்றுவிட்டது. இதில் தோழர் நல்லகண்ணுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பல மாதங்கள் கழித்து, சிவநேசனிடம் இதைக் கேட்டிருக்கிறார். அதற்கான சிவநேசனின் பதில், தோழர் நல்லகண்ணுவை மட்டுமல்லாது... இன்று நம்மையும் ஆச்சரியப்படுத்திவிடுகிறது. அன்றைய காலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். தோழர் கல்யாணசுந்ததரம், ப. மாணிக்கம், கே.டி.கே தங்கமணி போன்றவர்கள். அவர்களில் ஒருவரைத்தான் திருமணத்திற்கு தலைமை ஏற்க  அழைப்பார்கள். அவர்களை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தீர்கள் என்று நல்லகண்ணு கேட்டிருக்கிறார். இதற்கு சிவநேசன் அளித்த பதில், கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கைக்குள் அடங்கியிருக்கும் உயர் கொள்கையை உணர்த்துவதாக இருக்கிறது. 

நீண்ட அனுபவத்தைக் கொண்ட தோழர் ஆதிமூலத்திற்கும் இது ஆச்சரியத்தைத் தந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுரையில் இதை எழுதியிருக்கிறார். தோழர் சிவநேசன் கூறிய செய்தி இதுதான். "எனது மகள் திருமணத்திற்கு ஒரு அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்டாகவும், அதே நேரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தலைவர் ஒருவரின் தலைமையில் திருமணத்தை நடத்த விருப்பினேன்' என்று கூறியிருக்கிறார். இதில் இரண்டு செய்திகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று தோழர் சிவநேசன் நீண்டகாலம் நல்லகண்ணுவிடம் தோழமையாகப்  பழகியிருந்தும், அவர் என்ன சாதி என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமற்றவராக வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய காலத்தில் சாதியை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் பல்வேறு தந்திர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். சாதி குறித்து நேரடியாகக் கேட்பதற்கு இவர்களுக்கு எந்த தைரியமும் இல்லை. மடக்கி, மடக்கி  எதை எதையோ கேட்கிறார்கள். சில நேரங்களில் இது போன்ற கேள்விகளை சுற்றிச் சுற்றி கேட்கிறவர்களைப் பார்த்து, நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. இதைத்தவிர மற்றொரு செய்தியும் இதில் இருக்கிறது. தன் மகள் திருமணத்தை ஒரு தாழ்த்தப்பட்ட ஒருவரின் தலைமையில்தான் நிகழ்த்துவேன் என்ற அவரின் உறுதிப்பாட்டை சாதாரணமான ஒன்றாகக் கருதமுடியாது. 

தோழர் நல்லகண்ணு வாழ்க்கையின் வழியாக சாதியை அகற்றி, சமத்துவத்தை உருவாக்கும் கம்யூனிஸ்டுகளின் அன்றைய நடைமுறைகளை நான் புரிந்துகொள்கிறேன். இவையனைத்தும் பொதுவுலகத்திற்கு இன்னமும் சரிவர போய்ச்சேரவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது. தலைவர் நல்லகண்ணு வாழ்க்கையிலிருந்த இந்த நடைமுறையை நாம் அனைவரும் அறிந்து கடைப்பிடிப்பது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது.  

(தொடரும்)

nkn240925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe