(81) மாடு ஜப்தி
ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள். அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் பின்பற்றும் நெறிமுறைகளும் ஒன்றுபோலவே இருந்தன. தோழர் நல்லகண்ணு காலத்தைச் சார்ந்தவர்களில் சிலர் என் மனதில் ஆழமாகப் பதிந்து நிற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் மீட்டெடுத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் ஒன்றுபோல என் ஆழ்மனக் கண்களுக்குத் தெரிகிறார்கள். அவர்களின் சிந்தனை, செயலில் அப்படி ஓர் ஒற்றுமை. அதில் மிகவும் முக்கியமானவர், எழுத்தாளர் கி.ரா. என்னும் ராஜநாராயணன்.
இவர்கள் இருவருக்குமிடையே அமைந்த நட்பில் மண்சார்ந்த மணம் வீசிக் கொண்டே யிருக்கும். இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள், மற்றவர்களை பொறாமைப்பட வைத்துவிடும். பார்த்தவுடன் இருவரிடமும் அப்படி ஒருவித பரவசத்தைப் பார்க்க முடியும். நெல்லை சீமையின் கதைகளை இவர்கள் பேசத் தொடங்கினால், என்னைப் போன்றவர்களுக்கு, இதுவரை அறிந்துகொள்ளாத விபரங்களை யெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துவிடும்.
விவசாயிகளின் வாழ்க்கை, கடன் சுமையைத் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் சென்றுவிட்டார்கள். பெரும்பண்ணை சார்ந்த சுரண்டல் பேர்வழிகளும், வர்த்தக சூதாடிகளும் ஆட்சி ஆதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்டனர். சுமை அனைத்தையும் எளிய மக்கள் சுமக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதில் நிலவர
(81) மாடு ஜப்தி
ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள். அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் பின்பற்றும் நெறிமுறைகளும் ஒன்றுபோலவே இருந்தன. தோழர் நல்லகண்ணு காலத்தைச் சார்ந்தவர்களில் சிலர் என் மனதில் ஆழமாகப் பதிந்து நிற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் மீட்டெடுத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் ஒன்றுபோல என் ஆழ்மனக் கண்களுக்குத் தெரிகிறார்கள். அவர்களின் சிந்தனை, செயலில் அப்படி ஓர் ஒற்றுமை. அதில் மிகவும் முக்கியமானவர், எழுத்தாளர் கி.ரா. என்னும் ராஜநாராயணன்.
இவர்கள் இருவருக்குமிடையே அமைந்த நட்பில் மண்சார்ந்த மணம் வீசிக் கொண்டே யிருக்கும். இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள், மற்றவர்களை பொறாமைப்பட வைத்துவிடும். பார்த்தவுடன் இருவரிடமும் அப்படி ஒருவித பரவசத்தைப் பார்க்க முடியும். நெல்லை சீமையின் கதைகளை இவர்கள் பேசத் தொடங்கினால், என்னைப் போன்றவர்களுக்கு, இதுவரை அறிந்துகொள்ளாத விபரங்களை யெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துவிடும்.
விவசாயிகளின் வாழ்க்கை, கடன் சுமையைத் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் சென்றுவிட்டார்கள். பெரும்பண்ணை சார்ந்த சுரண்டல் பேர்வழிகளும், வர்த்தக சூதாடிகளும் ஆட்சி ஆதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்டனர். சுமை அனைத்தையும் எளிய மக்கள் சுமக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதில் நிலவரி கட்ட முடியாத பெருங்கொடுமை. நிலவரி கட்ட முடியவில்லையென்றால் அதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை, அந்த மக்களுக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்துவிடும். இதை எதிர்த்த போராட்டங்களில் களத்தில் முன்னணியில் நின்றவர் நல்லகண்ணு. அதை கதையாக எழுதி மக்களிடம் போராட்ட உணர்வாகப் பகிர்ந்துகொண்டவர் எழுத்தாளர் ராஜநாராயணன்.
ராஜநாராயணன் எழுதிய கதை ஒன்றின் பெயர் "கதவு.' அன்றைய காலத்தின் சமூக எதார்த்தங்களை விவரித்த கதைசொல்லிகளில் இவரைப் போன்ற கதைசொல்லி வேறு யாருமே இல்லை.
"வாழ்ந்து நொடித்த குடும்பத்தின் பொறுப்பை ஏற்றிருந்தாள் ரெங்கம்மாள். கணவன் மணிமுத்தாறு அணைக்கட்டில் கூலி வேலைக்குச் சென்று ஐந்து மாதங்களாகிறது. இன்னமும் வீடு வந்து சேரவில்லை. இவளுக்கு மூன்று குழந்தைகள். எட்டு வயதில் லட்சுமி என்னும் பெண்பிள்ளை, அதற்கு அடுத்து சீனிவாசன், மூன்றாவதாக கைக்குழந்தை. இவர்கள் மூவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ரெங்கம்மாவின் கையில் வந்த சேர்ந்துவிடுகிறது. காட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறாள். அதைத் தவிர, அந்தக் குடும்பத்திற்கு மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இந்தப் பிரச்சினை அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல. மற்ற எல்லா குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறது. சிலர் சமாளித்துக் கொள்கிறார்கள். ரெங்கம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பிரச்சினை நிலத் தீர்வையைக் கட்டுவதுதான்.
அன்றைய கிராமங்களில் நிலத்தீர்வை என்பது மக்களை கொடுமைப்படுத்தியதில் பிரதானமானது. இதில் அவமானகரமானது ‘ஜப்தி’. நிலவரி கட்ட முடியாதவர்களின், ஜப்தி நடவடிக்கைகளில் கதவை, மணியம், கணக்கப்பிள்ளை உத்தரவில், வலுக் கட்டாயமாக எடுத்துச் செல்வதும் உண்டு. அன்றைய நிலையில், ‘கதவு ஜப்தியில் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. அரசாங்கத்திடம் கடன்பெற்று தந்திரமாக ஏமாற்றிவிட்டு, உலகப் பணக்காரர்கள் வரிசையில் உட்கார்ந்திருப் பவர்களும் இருக்கிறார்கள் இன்று. இது இன்றைய நிலை. ரெங்கம்மாவின் வீட்டின் கதவை, தலையாரி தன் கூட்டத்தோடு வந்து எடுத்துச் செல்வதுதான் கதை. கதவு இல்லாத வீட்டில், காய்ச்சி வைத்திருந்த கம்பங் கஞ்சியை நாய் குடித்துவிட்டு ஓடி விடுகிறது. கதவில்லாத வீட்டின் குளிரில் குழந்தைகள் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் எழுத்தாளர் ராஜநாராயணனின் விவரிப்புகள்.
இந்த கதையையொட்டி மற்றொரு ஜப்தி கதை ஞாபகத்திற்கு வருகிறது. இது உழவு மாடுகளை ஜப்தி செய்யும் கதை. இதில் தோழர் நல்லகண்ணு, கோவில்பட்டியின் தனித்துவம்மிக்க மக்கள் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அழகர்சாமி ஆகிய இருவரும் இதற்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருந்தனர்.
அந்த காலத்தில் நிலவரி, கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனைக் கட்டவில்லை யென்றால், கதவுகளைப் போல உழவுமாடுகளை ஜப்தி செய்யும் கொடிய முறை இருந்தது. உழவு மாடுகளை கடனுக்காக அதிகாரிகள் ஜப்தி செய்து இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால் அதற்குள்ளிருக்கும் விவசாயியின் துயரத்தை அவர்கள் அறியமாட்டார்கள். கன்றுக் குட்டியிலிருந்து வளர்த்து, உழவு செய்வதற்கு அந்த ஒரு ஜோடி மாடுகளையும் பழக்கி யிருப்பார்கள். அந்த விவசாயிகள், தன் மனைவி மக்களைக்கூட பிரிந்திருப்பார்கள். அந்த உழவுக் காளைகளை கட்டாயம் பிரிந்திருக்கமாட் டார்கள். அதற்கு பசியெடுக்கிறதா? தாகம் எடுக்கிறதா? என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த அளவில் கால்நடைகளின் உறவு இவர்களுக்கு அமைந்திருந்தது.
இதனால், மாடுகளை ஜப்தி செய்வதைப் போன்ற கொடுமை, விவசாயிகளுக்கு வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு முறைக்கும், இந்த ஜப்திக்கும் ஒரு தொடர்பு இருந்தது. நான்கு அல்லது ஐந்து ஊர்களுக்கு ஒன்று என்று தொண்டி அல்லது பவுண்டு என்ற ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஜப்தி செய்யப்பட்ட மாடுகள் அங்கு கொண்டு வரப்படும். பெரும்பாடு பட்டு கடனைக் கட்டி, மீண்டும் அந்த மாடுகளை மீட்க வேண்டும் விவசாயி. அதற்கு அவர்கள் படும்பாட்டை அவர்கள் மட்டும் அறிந்திருக்க முடியும். அதற்கு மேலும் ஒரு சிரமம் அவர்களுக்கு இருந்தது. எத்தனை நாட்கள் மாடு அங்கிருந்ததோ, அதற்கான அபராதத் தொகையையும் அவர்கள் கட்டவேண்டும்.
இந்தக் கொடுமை தமிழகம் முழுவதும் இருந்தது. விவசாய சங்கமும் கம்யூனிஸ்டு கட்சியும் இந்தப் பிரச்சினையை கையிலெடுத்தது. வானம் மழை பெய்யவில்லை. விளைச்சல் இல்லை. இதனால் வரியோ அல்லது வட்டியோ கட்ட முடியவில்லை என்றால் அதற்கு விவசாயியால் என்ன செய்யமுடியும்? என்ற கேள்வியை அரசாங்கத்தைப் பார்த்து எழுப்பினார்கள். அது மக்கள் இயக்கமாக மாறியது. அதற்கு தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு.
ஒரு நிகழ்ச்சி. ஒரு கிராமத்திலிருந்த ஒரு ஜோடி மாடுகள் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்படுகின்றன. வாட்டசாட்டமான காளைமாடுகள். தொண்டிக்கு இழுத்துச் சென்று அடைத்துவிடுகிறார்கள். இதை தோழர்கள் விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்து பெரும் போராட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அப்பொழுது தோழர் நல்லகண்ணு சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்திருந்த நேரம். பெரும் போராட்டம். சட்டமன்றத்திலும், ஊடகங்களிலும் இது முக்கியப் பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. பாதிப்பு காலங்களில் விவசாயிகளின் வரி, கடன் தள்ளுபடி செய்யும் அரசாங்கத்தின் கொள்கை அப்பொழுதுதான் உருவாக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க... இதில் ஒரு வேடிக்கையும் நடந்தது. அதிகாரிகள் பிடித்துச் சென்று விடுதலை செய்யப்பட்ட காளைகளை, சம்பந்தப்பட்ட விவசாயி, மாடு அடைத்து வைத்திருந்த இடத்தில் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதிகாரிகள் மாட்டை எங்கே ஜப்தி செய்தார்களோ அங்கேயே அவர்களே ஓட்டி வந்து சேர்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக அதிகாரிகள் கருதிக்கொண்டார்கள்.
(தொடரும்)