(74) தொழுநோயாளிகளுடன்...
அன்றைய சிறைச்சாலையில், அருவருப்புமிக்க ஒன்றைப் பற்றி நாம் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. காலம் காலமாக இருந்து வந்த இந்தப் பழக்கத்தை மாற்றுவதற்கு நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்த முயற்சிகள் அளப்பரியது. சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த கொடுமையைவிட இந்த கொடுமையை இன்றுகூட நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனிதரை மனிதர், ஆதிக்கப்படுத்தும் கொடுமையில் எத்தனையோ நிகழ்ந்து விடுகிறது.
சிறைச்சாலைகளில், சிறை அறைகள் எப்பொழுதுமே ஒன்றுபோல் இருப்பதில்லை; பெரிய அறைகள், சிறிய அறைகள் என்றிருக்கும். தனியாக, ஒருவர் மட்டும் இருக்கும் அறைகளும் இருக்கும். பத்து பேர் கொண்ட அறைகளும் இருக்கும். செய்த குற்றங்கள், கைதிகளின் மனநிலை, அவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளைப் பொறுத்து, இந்த அறைகள் ஒதுக்கப்படும். இந்த அறை வாழ்க்கையில் மிகவும் மோசமானது எது என்றால், எல்லோரும் அதைப் பற்றிக் கூறிவிடுவார்கள்.
ஒவ்வொருவரும் ஒருவிதமாக சிறை வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். அவர் களின் குண இயல்புகளைப் பொருத்து அது அமையும். ஆனால் அவர்களிடம் ஒன்றில் ஒற்றுமை இருந்தது. சிறையில் எல்லாவற் றையும் சகித்துக்கொள்ள முடியும் என்ற இவர்களால், ஒன்றை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியாது. அதுவும் இரவு நேரங்களில் அது பெரும் தொல்லையைத் தந்துவிடும்.
இயற்கை உபாதை என்னும் சொல

இயற்கை உபாதை என்னும் சொல்லை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஒருநாள் மனிதர் தங்கள் கழிவுகளை வெளியேற்ற முடியவில்லை என்றால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். அன்றைய சிறைகளில் கழிப்பிட வசதி இல்லை. சிறையின் கதவுகள் கனத்த பூட்டுகளால் பூட்டப் பட்டிருக்கும். இரவு நேர அவசரங்களுக்கு என்ன செய்யமுடியும்?.
ஒவ்வொரு அறையிலும் எண்ணிக் கைக்கு ஏற்றவாறு பானைகள் இருக்கும். சிறிய பானைகள் பெரிய பானைகள் என்று வைத்திருப்பார்கள். இந்த பானைகள்தான் மனிதக் கழிவுகளை வெளியேற்றப் பயன்படுத்தபட்டது. இரவு நேரங்களில் எத்தனை துயரங்கள் இதில் சூழ்ந்து நின்றன. திடீரென்று இந்த பானைகள் உடைந்து விடுவதும் உண்டு. அதன் விளைவு என்னவாக இருக்கும்? ஒவ்வொரு காலையிலும் கதவு திறந்தவுடன் முதல் வேலையாக அவர்கள் தலையில் சுமந்து சென்று அதை வெளியில் கொட்டவேண்டும்.
புரட்சிக்காரர்களின் தீவிர செயல்பாடு களும், புரட்சிகர சமூக சேவைக்கும் ஒரு இணக்கம் வேண்டும். சிறைச்சாலைகளின் சீர்திருத்தத்திற்கு கம்யூனிஸ்டுகள் நிறையவே பங்களிப்பை செய்திருக்கிறார்கள். விடிவு இல்லாமலிருந்த இந்தக் கொடுமைக்கும் விடிவை கொண்டு வந்தவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். மதுரை ஜெயிலிலும் இதற்கான போராட்டம் நடந்தது. இதில் தோழர் நல்லகண்ணு பங்கு பிரதானமானது. இதற்காக கையெழுத்துக் களை சேகரித்தல், அதிகாரிகளிடம் முறையிடுதல், போன்ற நடவடிக்கைகளை இவர் தோழர்களுடன் சேர்ந்து எடுத்துவந்தார். அப்பொழுது முதல் சட்டமன்றத் தேர்தலில் கம்யூ னிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றி ருந்தார்கள். அவர்கள் இந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில் முன்வைத்தனர். இவ்வாறான பணிகளில் ஈடுபட்ட தோழர், ஒரு கட்டத்தில் சிறைச்சாலையில் முழுநேர சமூக சேவகராகவே மாறிப்போனார்.
அன்றைய காலத்தில் காசநோயும் தொழுநோயும் மிகவும் அபாயமானதாக அறியப்பட்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள் கூட அவர்கள் அருகில் செல்ல அச்சப்படுவார்கள். மருத்துவர்களே அச்சம்கொள்ளும் நோயாக அது அன்று இருந்தது. முக்கிய உணவு விடுதிகளில் தொழுநோயாளிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருக்கும். சிறைச்சாலையின் சூழல், இந்த இரண்டு நோய்களும் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இவர்கள் ஒதுக்குப்புறத்தில் வைக்கப் பட்டிருந்தார்கள். இதில் சில கம்யூனிஸ்டு கைதிகளும் இருந்தனர்.
இந்த பகுதி ஒரு தடுக்கப்பட்ட பகுதியாக இருந்தது. இதர கைதிகள் காரணமின்றி அங்கு செல்ல, அனுமதி இல்லை. அங்கு செல்ல வேண்டுமென்று சிறை நிர்வாகத்திடம் உரிய அனுமதியைப் பெற்று அங்கு சென்றவர் தோழர் நல்லகண்ணு. இந்த நோய் தனக்கு வந்து விடுமோ என்ற அச்சம் சிறிதுகூட இல்லாமல் அவர்களைச் சந்திக்கும் வழக்கத்தை தோழர் நல்லகண்ணு கொண்டிருந்தார். மற்ற கைதிகளின் மீது அக்கறை கொண்ட இவர், தன் சக கம்யூனிஸ்டு கைதிகள் பல காலம் போலீஸ் சித்ரவதையில் சிக்கி, மீண்டும் இத்தகைய நோய்களில் சிக்கிய வேதனையை நானறிவேன்.
ஒரு நாள் அவர் கூறிய தகவல் ஒன்று, அந்தக் காலத்திற்கே என்னை அழைத்துச் சென்றுவிட்டது. கொடிய அடக்குமுறை, சித்ரவதைகளுக்குப் பின்னர், அவர் காலில் செருப்பு போடுவதில்லை என்ற முடிவில் இருந்திருக்கிறார். சிறைச்சாலையில் அதிகாரி கள் வற்புறுத்தியும் இவர் செருப்பு அணியாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தடித்த செருப்பு ஒன்றை தயார்செய்து அதை அணிந்துகொள்ளும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அவர், அதை மெதுவாக சொன்னார். தன் சம்பந்தப்பட்ட தகவல்களை மெதுவாக சொல்லும் வழக்கத்தை எப்பொழுதுமே தோழர் நல்லகண்ணு கொண்டிருப்பார். அன்றாடம் காச நோயாளிகளையும், தொழுநோயாளிகளையும் பார்க்கச் செல்லும்போது, தொற்று ஏற்படுவதை தவிர்க்க செருப்பு அணியும் பழக்கம் வந்தது என்றார்.
சிறைச்சாலையில் நூலகம், அவர் மிகமிக விரும்பிய ஒரு இடம். நூலகத்திற்காக இவர் செய்த பணிகளைப் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். யாருமே எதற்கும் பொருட்படுத்தாமல் இருந்த நூலகத்தை திருத்த இவர் பெரும் முயற்சிகளை எடுத்துள்ளார். சிறை நிர்வாகமும் இதற்கான அனுமதியை இவருக்கு வழங்கியிருக்கிறது. சில கைதிகளை துணைக்கு வைத்துக்கொண்டு, புத்தகங்களை முறையாக பராமரிக்கும் செயல், இவருக்கு அன்றாடச் செயலாகவே மாறியிருக்கிறது.
நூலகங்களில் கைதிகள் என்ன மாதிரியான நூல்களில் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்ற தகவல்கள் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கிறது. இதில் இவர் சில விதிமுறைகளை கடைப்பிடித்தாகவும் தெரிகிறது. இரவு நேர வாசிப்பு, சில கைதிகளுக்கு சில சங்கடங்களை தந்துவிடும் என்பது இவரது மதிப்பீடு. இதில் விளக்கு ஒரு பிரச்சனை என்றாலும், அதைவிடவும் மற்றொரு பிரச்சனையும் அங்கு இருந்தது. குடும்பத்தை பிரிந்து பல ஆண்டுகள், மாதங்கள் என்று சிறையில் வாழ்ந்துவரும் இவர்களுக்கும், இவர்கள் வாசிக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு நெருக்கம் உண்டு என்பதை இவர் நன்கறிவார்.
இதனால் மலிவான காதல் வர்ணனைகளைக் கொண்ட புத்தகங்களை இரவில் இவர் வாசிக்கத் தருவதில்லை என்ற முடிவிலிருந்தார். இவ்வாறு சக கைதிகளை, தோழர்களைப் பற்றி அனைத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ளும் மனம் எத்தகைய உயர் மனம். இவை, தோழர் நல்லகண்ணுவின் சிறை வாழ்க்கையில் முக்கியப் பகுதியாகும்.
கைதிகளின் ஒற்றுமை, அங்கு தனியாக பொறுப்புகள் பிரித்து சமையல் செய்வது, அதைப் பகிர்ந்தளிப்பது. சாதி வேறுபாடுகள் எதுவுமே இல்லாத பண்பை வளர்த்தெடுத்தல், சிறை அதிகாரிகளிடம் முறையிடுதல், பேச்சுவார்த்தைகள் நடத்தி, தண்டனையில்லாமல் மாற்றங்களைக் கொண்டு வருதல் என தோழர் நல்லகண்ணு வின் சிறை வாழ்க்கை, போராட்டங்கள் பலவற்றைக் கொண்டிருந்தபோதிலும்... அதன் சமூகப் பணிகள் மிகவும் முக்கியமானவை.
(தொடரும்)