(70) துயரப் பாடல்!
அந்த நோட்டுப்புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன். அட்டை மிகத்தடிமனாக இருந்தது. அதன்மீது கூடுதலாக, மற்றொரு பழுப்பு நிறத்திலான கனத்த மேலட்டையும் போடப்பட்டிருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு நோட்டுப்புத்தகத்தை பார்த்ததில்லை. அதன் தாள்கள் மிகவும் தரமானவை. அதில் ஒரு தாளை எடுத்து எளிதாக கிழித்துவிட முடியாது. அதை யாரோ நீண்ட காலத்திற்கு, காப்பாற்றி வைக்கவேண்டும் என்ற உணர்வில் இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதற்குச் செய்திருக்கிறார்.
பெருமைக்குரிய அந்த நோட்டுப்புத்தகத்தைப் பற்றி, பல கதைகளை தோழர் நல்லகண்ணு என்னிடம் தெரிவித்திருக்கிறார். அந்த நோட்டுப்புத்தகம் வேறு யாருடையதும் அல்ல, அவருக்குச் சொந்தமானதுதான். சிறையில் அவர் வாழ்ந்த காலம் முதல், அவருடன் வாழ்ந்து, இதுவும் சிறை வாழ்வை நிறைவுசெய்து விடுதலை பெற்று வெளியே வந்திருக்கிறது.
அந்தக்காலம் காகித பற்றாக்குறை காலம். அதுவும் சிறைச்சாலையில் காகிதம் கிடைப்பது அரிதினும் அரிது. அப்பொழுது சிறைச்சாலையில் இருந்த கம்யூனிஸ்டுகள் நல்ல சிந்தனையாளர்களாகவும் இருந்தார் கள். எழுதுவதற்கு இவர்களுக்கு காகிதங்கள் கிடைப்பதில்லை. சிறைச்சாலைகளிலே தங்களை பார்க்கவரும் தங்கள் உறவினர்களிடம், இவர்கள் தயங்கித் தயங்கி முன்வைக்கும் கோரிக்கை, நோட்டுப் புத்தகங்கள் வேண்டும் என்பதுதான்.
தோ

தோழர் நல்லகண்ணு தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் சொல்லியனுப்பி, இவ்வாறான ஒரு நோட்டை வாங்கி வைத்தி ருந்தார். தன் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் அந்த நோட்டில் அவர் எழுதி வைக்கவில்லை. தனக்கு கிடைத்த அறிவுப் பூர்வமான தகவல்கள் அனைத்தையும் அதில் எழுதி வைத்திருந்தார். தண்டனைக் கைதிகளுக்கு சிறைச்சாலையில் நிரந்தரமான பணி ஒன்றை ஒதுக்கித் தருவார்கள். அவ்வாறு இவருக்கு சிறையில் ஒதுக்கித் தரபட்டப் பணி, நூலகர் பணி. இதைச் சிறைச்சாலையில் கிடைத்த சிறந்த வாய்ப்பு என்கிறார் நல்லகண்ணு.
அவரால் இங்கு பல புத்தகங்களைப் படிக்க முடிக்கிறது. எந்தப் புத்தகத்தையும் விரைவாகப் படித்து முடிக்கும் பழக்கம் அவருக்கு சிறைச்சாலையில் தொடர்ந்த இந்தப் பயிற்சியில்தான் கிடைத்திருக்கிறது. எனது வாசிப்புக்கும் இது மிகவும் உதவிசெய்து வருகிறது என்பதை இப்பொழுது நான் யோசித்துப் பார்க்கிறேன். யாரும் படிக்காத நூல்களையெல்லாம் அவர் படித்திருந்தார். அவ்வாறான அந்த நூல்களின் பெயரையும், அந்த நூலாசிரியரின் வரலாற்றையும் அவரால் சொல்ல முடியும். இந்த நூல்களின் முக்கியக் குறிப்புகள் அனைத்தும் இந்த நோட்டுப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன.
பழமொழிகளை தொகுத்து வைப்பதிலும், உலகப் புரட்சியாளர்களின் பொன்மொழிகளை தொகுத்து வைப்பதிலும் பேரார்வம் கொண்டவர் நல்லகண்ணு. இதில் முக்கியத்துவம் கொண்டவை இந்த நூலில் தொகுத்து வைக்கப்பட்டன.
தமிழ் இலக்கியத்தின் மீது இவர் கொண்டிருக்கும் ஈடுபாட்டைப் பார்த்து, மற்றவர்கள் வியந்துபோவார்கள். இவர் கல்லூரிப் படிப்பான இண்டர்மீடியட் படித்துவிட்டு, தமிழ் வித்வான் பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையில் இருந்தவர். ஆனால் அரசியல் ஈடுபாடு அவை அனைத்தையும் மாற்றிவிட்டது. தமிழின் தொன்மையான அத்தனை தகவல்களும், குறிப்புகளாக அந்த நோட்டுப் புத்தகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
வெளியுலக வாழ்க்கைக்கும் சிறை வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு. வித்தியாசமான மன உணர்வுகளை சிறைச்சாலை களில் பார்க்கமுடியும். சிறையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களையும் சுவைபடக் குறிப்பெடுத்து அதில் வைத்திருந்தார். நம்மால் கற்பனை செய்து பார்க்கமுடியாத பல்வேறு தகவல்கள் அந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்தன. அந்த நோட்டுப்புத்தகத்தை அவருடைய சிறை வாழ்க்கையின் பெட்டகம் என்று கூறமுடியும்.
அந்த நோட்டுப்புத்தகத்தின் மற்றொரு சிறப்பு, அது எழுதப்பட்டுள்ள விதம். அதில் சிறு இடம் கூட காலியில்லாமல் எழுதப்பட்டிருந்தது. எழுத்துக்கள் மிகவும் சிறிதாக நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருக்கும். ஆனால் வாசிப்பதற்கு எந்தச் சிரமமும் இருக்காது. யாராலும் எளிதாக வாசிக்க முடியும். தோழர் நல்லகண்ணு அந்த நோட்டுப் புத்தகத்தின் மீது எப்பொழுதுமே தனிக்கவனம் கொண்டிருப்பார். எந்த நேரத்திலும் அது எங்கு இருக்கிறது என்பதை தெளிவாக அவரால் சொல்லமுடிந்தது. .
ஏதாவது, யாருக்காவது சந்தேகம் ஏற்படு மானால், இந்த நோட்டைப் புரட்டி, அதில் இருந்த ஆதாரங்களை நமக்கு எடுத்துக் காட்டிவிடுவார். மிகவும் நெருங்கியவர் களுக்கு அந்த நோட்டுப் புத்தகத்தில் சில பகுதி களைப் படித்துக் காட்டு வதில் அவருக்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு அதிலிருந்த பல செய்திகள், மனப்பாடமாய் இருந்தது. இறுதியில் ஒருநாள் அந்த நோட்டுப் புத்தகத்திற்கும் ஒரு சோதனை வந்தது.
வாழ்நாளில் இவ்வளவு வருத்தத்தை தோழர் நல்லகண்ணு பார்த்ததே இல்லை. கிட்டத்தட்ட அவர் சோர்வடைந்து, உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்துவிட் டார். ‘அதை வேறு ஒரு நகலெடுத்து வைக்காமல் விட்டுவிட்டேனே’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டில் இந்த நோட்டுப் புத்தகத்திற்கு நெருக்கடி வந்து சேர்ந்தது.
சென்னை மாநகரம் நீரில் மூழ்கியது. தோழர் நல்லகண்ணு மழை நீரில் சிக்கிக்கொண்டார் என்றும், நீரில் மூழ்கிப்போனார் என்றும் ஊடகச் செய்திகள் வெளிவந்தன. பலர் மாடியில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. உணவு இல்லாத நிலைமையை போக்குவதற்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு கீழே போடப்பட்டது. மக்களில் பலர் படகுகளின் மூலம் காப்பாற்றப்பட்டார்கள். கடைசியில் ஒருவாறாக தோழர் நல்லகண்ணு காப்பாற்றப்பட்டார். குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர். ஆனால் சிறை வாழ்க்கையில் அவர் சிறிது சிறிதாக சேகரித்து வைத்திருந்த அந்த நோட்டு புத்தகத்தை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அது வெள்ளத்தில் மூழ்கி அழிந்துபோனது. ஒரு காலத்தின் வரலாறு அனைத்தையும் சொல்லுவதற்காக சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் அழிந்துபோயின.
அதில் ஒரு பாடல் இன்றும் என்னுடைய ஞாபகத்தில் இருக்கிறது. எத்தனையோ துயர இலக்கியங்களை நான் அறிந்திருக்கின்றேன். ஆனால் இதைப்போன்ற மானுட துயர வெளிப்பாட்டை, எந்தப் பாடலிலும் நான் அறிந்தது இல்லை. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கைதியின் பாடல் அது. பத்து ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் இருந்திருக்கிறார். அந்த பத்து ஆண்டு துயரமும் இந்த பாடல்களில் தெரிந்தது என்றார் தோழர். தன் மனத்தின் சோக உணர்வுகளைக் கொட்டி எத்தனைமுறை அந்த பாடலைப் பாடியிருப்பார் என்பதை அவரே அறிந்திருக்க மாட்டார். இதைப்போன்று குரலில் உச்சத்தைத் தொட்ட பாடலை நான் கேட்டதில்லை என்கிறார் தோழர்.
மனித துயரங்கள் இலக்கியமாக வெளிப்படும்போது அதன் முழுமை, காலத்தை வென்று நிற்கிறது. இந்த பாடலும், அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த பாடலில் மறைந்து நின்ற ஆழமான கிண்டல் தொனியை நான் உணர்ந்துகொண்டபோது எனது சிந்தனை வேறொரு இடத்திற்குப் பயணப்படத் தொடங்கியிருந்தது.