00

(36) நாடகத் திரை

ஞ்சாலைகளிலும், பண்ணை நிலங்களிலும் அதன் கொடிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, அதிலிருந்து கம்யூ னிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். காலனிய கொடுமை ஏற்படுத் திய கோபம், பள்ளி மாணவர்களைக் கம்யூனிஸ்டுகளாக மாற்றி யிருந்தது. இதில் மற்றொரு பகுதியிலும் பெண் கம்யூனிஸ்டுகளின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதிதான் நாடகப் பெருவெளி. அந்த தருணத்தில் பல தோழர்களின் உயிரைப் பாதுகாத்துத் தந்ததில் நாடகத் திரைக்கு முக்கிய பங்கிருந்தது.

Advertisment

சினிமா முக்கியத்துவம்பெறாத அந்தக் காலத்தில், நாடக உலகம் கொடிகட்டிப் பறந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... தமிழர்கள் வாழ்ந்த பர்மா, மலேயா, இலங்கை என்று தமிழ் நாட்டின் நாடகக் குழுக்கள் கப்பல் ஏறிச் சென்றுகொண்டிருந் தன. அன்றைய புறச்சூழல் அவர்களை விடுதலைப் போராட்ட உணர்வுகொண்டவர்களாகவும், கம்யூனிஸ்டு ஆதரவுகொண்ட சிந்தனையாளர்களாகவும் மாற்றியிருந்தது.

ஐயா நல்லகண்ணுவோடு அமர்ந்து உரையாடினால்... தமிழக நாடக உலகை முழுவதுமாக தெரிந்துகொள்ள முடியும். தூத்துக்குடியில் நடந்தாக இவர் கூறிய நிகழ்ச்சி ஒன்று இப்பொ ழுது என் ஞாபகத்திற்கு வருகிறது. அது சங்கரதாஸ் சுவாமிகள் பற்றியது. ஒருநாள் விடிய, விடிய நாடகத்தை நடத்திவிட்டு சங்கரதாஸ்சுவாமிகள் வேஷம் கலைக்காமல் குளக்கரைக்கு குளிக்க வருகிறார். இவரைப் பார்த்தவுடனேயே அங்கு வந்த பெண் ஒருத்தி மயக்கம்போட்டு விழுகிறாள். அவரை உண்மையான எமதர்மன் என்று மயக்கமுற்றவள், மூன்று மாதம் கருவுற்ற பெண். அவள் வயிற்றில் வளர்ந்த கரு பயத்தில் சிதைவடைந்து இறந்துவிடுகிறது என்பதை சோகமாக சொல்லியவர், “"அவரது வேடப் பொருத்தம் அப்படி' என்றார். அந்தக்காலத்து நாடகத் திரையில் தலைமறைவு கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளும் இருந்திருக்கின்றன. இது குறித்து பல்வேறு தகவல்களை தோழர் நல்லகண்ணு என்னிடம் கூறியிருக்கிறார். அதில் மதிப்புமிக்கவராக அவரால் குறிப்பிடப்பட்டவர் கே.பி.ஜானகி அம்மாள். பிற்காலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆளுமை பொருந்திய பெண் தலைவர்.

தோழர் கே.பி.ஜானகியம்மாள் வரலாறு, கலையுலகத்தில் பெண் நாடகக் கலைஞர் எவ்வாறு, ஒரு தலைமறைவு பெண் கம்யூனிஸ்டு போராளியாக உருப்பெற்றார் என்ற கதையை நமக்குச் சொல்லுகிறது. புகழ்மிக்க நாடக கலைஞர் விஸ்வநாததாஸ், நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர். ஜானகி அம்மா துணைத்தலைவர், நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் போல் சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களை, தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணிவிடலாம். சுதந்திர வேட்கைகொண்டு இவர் பாடிய பாடலில் அச்சம்கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். பலமுறை இவரை கைதுசெய்து பார்த்தார்கள். நாடக ஒப்பந்தக்காரர்கள் மூலம் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, மன உளைச்சலைத் தந்தார்கள். அவரது வீட்டை ஏலத்திற்கு கொண்டுவர வைத்தார்கள்.

Advertisment

வீடு, ஏல அறிவிப்பு வந்த மூன்றாம்நாள் சென்னையில் ஐந்துநாள் நாடகம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்த ராயல் அரங்கத் தில் பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. சுதந்திரப் போராட்டப் பாடல் களைப் பாடினால் அவரை கைதுசெய்து அழைத்துச் செல்வதற்கு காவல்துறை வாகனத்துடன் காத்திருக்கிறது. "மாயமான வாழ்வே இந்த மண் மீதே'’ என்ற பாடலை மூன்றுமுறை மேடையில், மிகவும் உயரத்திற்கு சென்றும் கீழே இறங்கிவந்தும் பாடுகிறார். கூட்டத்தில் பெரும் ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் எழுகிறது. அந்த மேடையிலேயே சரிந்து வீழ்கிறார். அவர் உயிர் அங்கே பிரிந்துவிடுகிறது. அன்று கூடிய மக்கள் கூட்டத்தால் சென்னை செயலற்று நின்றுபோனது. அவருக்கு பெருந்துணையாக நின்றவர்களில் முக்கியமானவர் கே.பி.ஜானகி அம்மாவும் அவரது கணவர் குருசாமியும் ஆவர்.

oo

பெண் தலைமறைவு போராளி ஜானகி அம்மாவை, சுதந்திரப் போராட்டத்தின் தீவிரம்... காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சியின் வழியாக கம்யூனிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு முன்னர், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சிக்குள்ளிருந்து செயல்பட்டனர். பல்வேறு கருத்தோட்டம் கொண்டவர்களை இணைத்துச் செல்லும் பொதுஇயக்கமாக காந்தியடிகள், காங்கிரஸ் கட்சியை அப்பொ ழுது மாற்றியிருந்தார்..

தலைமறைவுக் காலத்தின் முதல் தலைமுறை கம்யூனிஸ்டாக நின்று சுதந்திரப் போராட்டத்தில் ஜானகியம்மா சந்தித்த நெருக்கடி களை வேறு யாருமே சந்தித்திருக்கமாட்டார்கள். தமிழகத்தின் மாஸ்கோ என்று புகழ்கொண்ட மதுரையில் முதல் கட்சிக் கிளையில் தன்னை இணைத்துக் கொள்கிறார் ஜானகி அம்மா. பிரிட்டிஷாருக்கு எதிராக யுத்த எதிர்ப்பு போராட்டம் ஒன்று தொடங்குகிறது. 1939ஆம் ஆண்டு இவரும், இவரது கணவர் குருசாமியும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.

ஜானகி அம்மாவின் வழியே முதல் தலைமுறை சுதந்திரப் போராட்டப் பெண் போராளிகளின் வரலாறு நமக்கு கிடைக்கிறது. சென்னையிலிருந்து ருக்மணி அம்மா, வேலூர் சிறைக்கு வந்துசேருகிறார். ராதாபாய் சுப்பராயன், இவர் மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் ஆகியோரின் தாயார் ஆவார். இதைப்போல பிற்காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் கொத்தடிமை முறையை எதிர்த்துப் போராடிய மணலூர் மணியம்மை போன்றவர்கள் இந்த சிறையில் இருந்தனர்.

1948ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப் பட்டபோது, ஜானகி அம்மாவும் கைது செய்யப்பட்டு இரண்டாம் முறையாக வேலூர் சிறையில் வைக்கப் படுகிறார். ஆண்கள் சிறையில் ஜீவா போன்றவர்கள் சிறைக்குள்ளிருந்து தீவிரப் போராட்டத்தை நடத்தியதைப் போலவே, ஜானகி அம்மா உள்ளிட்ட பெண்கள் அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பெண்கள் சிறைச்சாலை யில் கலகம் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். காலவரை யற்ற உண்ணாவிரதம். 15 நாட்கள் நிறைவுபெறுகிறது. ஜானகி அம்மாவை தனி சிறையில் அடைத்து வைத்துப் பார்க்கிறார்கள், அவரது மனஉறுதியை எதுவுமே செய்ய முடியவில்லை. கடலூர் சிறைக்கு கடன்காரர் ஜெயில் என்று ஏன் பெயர் வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. அங்கு இவர் கொண்டு செல்லப்படுகிறார். கடலூர் சிறையிலும் இவரது ஆளுமை நிறைந்த போராட்டங்கள் சிறையெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

சுதந்திரப் போராட்டத்தில் நாம் வ.உ.சிதம்பரம் பிள்ளையை இழந்ததை அறிந்திருக்கிறோம் அன்னை கே.பி. ஜானகி அம்மாளை இழந்ததை அறிந்தோம் இல்லை. அன்று சினிமாவைப் போல புகழ் பெற்றிருந்த நாடகக் கலையில் பொருள் சேர்த்து வைத்திருந்தவர். தீவிர அரசியலில் பெரும் எடை கொண்ட நகைகள் முதல் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் வரை விற்கப்பட்டன. கடைசியில் குடியிருந்த வீடும் கடனில் மூழ்கியது. ஆனால் அவர் எதற்கும், எந்தக் காலத்திலும் கலங்கவில்லை. ஏனெ னில் அவர் தலைமறைவுக் காலத்தில் உருக்கு போன்ற நெஞ்சுரத்தைப் பெற்ற பெண் கம்யூனிஸ்டுப் போராளி.

(தொடரும்)