(106) நல்லகண்ணுவை பதறவைத்த மூப்பனார்!
ஒவ்வொரு மனிதருக்குமான பிறப்பு, ஒரு சூழலில் நிகழ்கிறது. அந்த சூழல்தான் அவர்களுக்கு உலகப் புரிதலை கற்றுத்தருகிறது. இதில் வசதி படைத்த குடும்பங்களில் பிறந்தவர்களின் புரிதலுக்கும், வறிய குடும்பங் களில் உள்ளவர்களின் குடும்பத்தினரின் புரிதலுக்கும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. வசதியிருந்தும், சிலர் தங்களுக் குள்ளே நடத்திய சிந்தனைப் போராட்டத்தில் எளிய மக்களின் வாழ்க்கையில் அடிப்படைப் பிரச்சனைகளை, சுய தேடுதலில் கூடுதல் தெளிவுடன் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். இதற்காக இவர்கள் ஆடம்பர, அதிகார எல்லைகளை தங்களுக்குள் தகர்த்துக் கொள்கிறார்கள். அய்யா மூப்பனார் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், தனது தனித்துவமான அணுகுமுறை மூலம் தனித்துவமான வாழ்வின் ஞானத்தைப் பெற்றுக்கொண்டவர்.
மூப்பனார், நல்லகண்ணு ஆகியோரிடம் அமைந்த நட்பின் ஆழத்தை அளந்து பார்க்கும் தருணம் இது. இதை அளந்து பார்ப்பதில் எத்தனையோ திறன்கொண்ட உயர் பண்புகளை நான் உணர்ந்துகொள்கிறேன் ஒரு கட்டத்தில் எனக்கு காங்கிரஸ் தலைவர் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகியோர்களுடன் மிக நெஸ்ரீங்கிய நட்புக்கான வாய்ப்பு நேர்ந்தது. இதில் எல்லோருக்குமான பொதுவான நண்பர் ஜெகவீரபாண்டியன். எல்லோரிடமும் எளிதில் பழகிவிடும் இயல்பைக் கொண்டவர்.
(106) நல்லகண்ணுவை பதறவைத்த மூப்பனார்!
ஒவ்வொரு மனிதருக்குமான பிறப்பு, ஒரு சூழலில் நிகழ்கிறது. அந்த சூழல்தான் அவர்களுக்கு உலகப் புரிதலை கற்றுத்தருகிறது. இதில் வசதி படைத்த குடும்பங்களில் பிறந்தவர்களின் புரிதலுக்கும், வறிய குடும்பங் களில் உள்ளவர்களின் குடும்பத்தினரின் புரிதலுக்கும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. வசதியிருந்தும், சிலர் தங்களுக் குள்ளே நடத்திய சிந்தனைப் போராட்டத்தில் எளிய மக்களின் வாழ்க்கையில் அடிப்படைப் பிரச்சனைகளை, சுய தேடுதலில் கூடுதல் தெளிவுடன் புரிந்துகொண்டுவிடுகிறார்கள். இதற்காக இவர்கள் ஆடம்பர, அதிகார எல்லைகளை தங்களுக்குள் தகர்த்துக் கொள்கிறார்கள். அய்யா மூப்பனார் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், தனது தனித்துவமான அணுகுமுறை மூலம் தனித்துவமான வாழ்வின் ஞானத்தைப் பெற்றுக்கொண்டவர்.
மூப்பனார், நல்லகண்ணு ஆகியோரிடம் அமைந்த நட்பின் ஆழத்தை அளந்து பார்க்கும் தருணம் இது. இதை அளந்து பார்ப்பதில் எத்தனையோ திறன்கொண்ட உயர் பண்புகளை நான் உணர்ந்துகொள்கிறேன் ஒரு கட்டத்தில் எனக்கு காங்கிரஸ் தலைவர் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகியோர்களுடன் மிக நெஸ்ரீங்கிய நட்புக்கான வாய்ப்பு நேர்ந்தது. இதில் எல்லோருக்குமான பொதுவான நண்பர் ஜெகவீரபாண்டியன். எல்லோரிடமும் எளிதில் பழகிவிடும் இயல்பைக் கொண்டவர். அது மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் காலம். அந்த காலத்தில்தான் அந்த முயற்சியும் நடந்தது.
தோழர் நல்லகண்ணுவின் முழு வாழ்க்கை யும் அதுவரை முழுமையாக தொகுக்கப் படவில்லை. துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பலரிடம் தகவல்கள் இருந்தன. அதை ஒருங்கிணைக்கும் முயற்சி ஒன்று, அன்றைய காலத்தில் தேவைப்பட்டது. அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை, தோழர் நல்லகண்ணு அவர்களின் 80ஆவது பிறந்தநாளில், மலர் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் நிறைவு செய்ய விரும்பினோம். அதன் தயாரிப்பில் நண்பர் கோபண்ணா அளித்த பங்களிப்பை என்றுமே என்னால் மறக்க முடியாது. நீண்ட பத்திரிகை அனுபவம் கொண்டவர். நானும் கோபண்ணா வும்தான் அந்த மலரை தயாரித்தோம். அது ஒரு இனிய அனுபவம்.
தோழர் நல்லகண்ணுவை ஆராய்ந்து பார்க்கும் விருப்பம் கொண்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும், அந்த மலர் இன்றும் பெரிதும் உதவி செய்கிறது. பல அரசியல் தலைவர்களும் கட்சித் தோழர்களும் தோழர் நல்லகண்ணு பற்றிய அரிய பல தகவல்களை மலரில் எழுதியிருந்தனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் எழுதிய கட்டுரை ஒன்று, அய்யா மூப்பனாருக்கும் தோழர் நல்லகண்ணுக்கும் இடையில் அமைந்த ஆத்மார்த்த உறவை விவரித்துள்ளது. அவரது கட்டுரையில் இரண்டு முக்கிய செய்திகள்.
முதல் பகுதி நண்பர், பீட்டர் அல்போன்ஸின் சொந்த அனுபவம். இதை வாசித்தபோது, இன்றைய காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா? என்ற உணர்வை அது நமக்குள் உருவாக்கி விடுகிறது. பீட்டரின் இந்த அனுபவத்தை தர விரும்புகிறேன். தொடக்க விவரிப்பில் இவர், இன்றைய அரசியல் பொதுக் கூட்டங்களில் உள்ள ஆடம்பர விரயத்தை வேதனையோடு விவரிக்கிறார். அதில் தோழர் நல்லகண்ணுவின் மாறுபட்ட காட்சி ஒன்றும் விவரிக்கப்படுகிறது. ஆண்டு 1981 இருக்கலாம் என்கிறார். உடுமலைப் பேட்டையில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, இரவு 12 அளவில் பேக்ந்து நிலையம் வந்து சேர்ந்தேன். முதல் பஸ் அதிகாலை 3 மணிக்கு என்றார்கள். வழியனுப்ப வந்த தோழர்களுடன் ஒரு கல் பெஞ்சில் அமர்ந்துகொண்டு சத்தம் போட்டு அரசியல் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த பெஞ்சில் கொண்டு வந்த பையை, தலைக்கு வைத்துக் கொண்டு ஒருவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். தூக்கத்தில் இருந்த அவரை, எங்கள் உரத்த பேச்சால் எதுவுமே செய்ய முடிவில்லை. அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
மதுரைக்கு செல்லும் முதல் பஸ் வந்து விட்டது. அப்பொழுது எனக்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பக்கத்து கல்பெஞ்சில் படுத்திருந்தவர், எழுந்து உட்கார்ந்துவிட்டார். எங்கேயோ பார்த்ததாக என் ஞாபகம் சொன்னது. நான் உற்றுப் பார்த்தேன். அவர் பெரியவர் நல்லகண்ணு. அப்பொழுது அவர் மாநில தலைவர்களில் மதிக்கத்தக்க ஒருவர். "அண்ணே' என்றேன். "இங்கு எப்படி?' என்று கேட்டதற்கு, தாலுகா விவசாயிகள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியதாகச் சொன்னார். உண்மையில் அன்று, "பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்டவரை, இனிமேல் எங்கே காணப்போகிறோம்' என்று நினைத்துக்கொண்டேன் என்பதாக எழுதி யுள்ளார்.
நண்பர் பீட்டர் எழுதிய, மற்றொரு செய்தி கொஞ்சம் வேறுபாடு கொண்டது. அது எந்த அளவிற்கு தோழர் நல்லகண்ணு மீது அய்யா மூப்பனார் உயர்மதிப்பைக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக இன்றுவரை திகழ்கிறது. அய்யா மூப்பனார் வாழ்க் கையைப் பற்றியும், அறிந்துகொள்ளுதல் எனக்கு அவசியமாகத் தோன்றுகிறது. அவர் பிறந்தது 1931ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில். அவர் இறந்ததும், அதே ஆகஸ்டு மாதம் 2001ஆம் ஆண்டு. தோழர் நல்லகண்ணு, அய்யா மூப்பனாரைவிட ஐந்து வயது மூத்தவர்.
அய்யா மூப்பனாரின் பிறந்தநாள் நிகழ்வு காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதைப் பற்றி நண்பர் பீட்டர் எழுதியவை யாவும் நம்மை யோசித்துப் பார்க்கத் தூண்டுகிறது. இதற்கு முன்னர் அய்யா அவர்கள் தனது பிறந்தநாளை பொதுவெளியில் கொண்டாடியது இல்லை. எத்தனையோ பேர் முயற்சி எடுத்தும், அவர் மறுத்து விட்டார் என்கிறார். இந்த ஆண்டு அவரை எப்படியும் கொண்டாட வைத்துவிட முடிவு செய்தோம் என்கிறார். மொத்தம் 70 ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து விப்பது என்று முடிவெடுத்தோம். அய்யா மூப்பனாரால் மறுக்க முடியவில்லை. ஆனால் அதுதான் அவரது கடைசி பிறந்தநாள் என்பதை அவரும் அறியவில்லை, மற்றவர்களாலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் எழுத்து விவரிப்பு விரிந்துகொண்டே செல்கிறது. "காமராஜர் அரங்கத்தில் என்றுமே இல்லாத கூட்டம். உடல் நலமில்லாத உடல் வருத்தத்துடனேயே அய்யா மூப்பனார் மேடையில் அமர்ந்திருந்தார். அந்த மேடைக்கு தோழர் நல்லகண்ணு அவர்களும் வந்து சேருகிறார். அப்பொழுதுதான் யாருமே எதிர்பார்க்காத, அந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அய்யா மூப்பனார் அவர்களைப் பார்த்து அய்யா "பிறந்தநாள் வாழ்த்துகள்' என்கிறார். உடனே கைகளை பற்றிக்கொண்டு "உங்கள் வயது என்னவென்று?' அய்யா கேட்கிறார். "தோழர் உங்களை விட நான் வயதில் மூத்தவன்' என்கிறார்.
மேடையில் இருப்பவர்கள் உணர்ச்சிப்பெருகில் அப்படியே நின்றுவிடும் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. அப்படியே இருங்கள் என்கிறார் தலைவர் மூப்பனார். தனது தோளிலிருந்த துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டார். காலைத் தொட்டு "என்னை ஆசிர்வதியுங்கள்' என்றார். அண்ணன் நல்லகண்ணு பதறிப்போனார் என்கிறார் பீட்டர் அல்போன்ஸ். அவருக்கு அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை. அய்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டார் என்கிறார்.
இத்தகைய உயர்மரியாதையை அந்தக் காலத்தில் அய்யா மூப்பனார் அவர்கள் வேறு யார் மீதாவது வைத்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுதான் தலைவர் மூப்பனார். அதுதான் தோழர் மூப்பனார்.
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us