(102) ஈழத் தமிழர்களுக்கான கம்யூனிஸ்ட் தீர்மானம்!
அந்த நாளில் மலர்ந்த, அந்த அரசியலை இந்த தருணத்தில் திரும்பிப் பார்க்கிறேன். 2008 அக்டோபர் 2ஆம் நாள், தனி புத்தெழுச்சியை தந்த நாளாகத் தெரிகிறது. தமிழ் மொழி ஆதிமொழி என்பதால் அதன் மனவழி மனித உணர்வுகளும் மிகவும் தொன்மையானவை. மொழிக்கும் மொழி பேசும் மக்களுக்கும் கேடு நேர்ந்தால் அந்த நொடியிலேயே சிலிர்த்து எழுந்து விடும் இயல்பை இவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது நிரூ பிக்கப்பட்ட உண்மை. இந்த புரிதலை அக்டோபர் போராட்டம் கொண்டிருந்தது என்பதுதான் இதன் சிறப்பு. எத்தனையோ போராட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நடத்தினாலும், இந்த போராட் டம் மட்டும் தமிழ் மக்களை வித்தியாசமாகப் பார்க்க வைத்துவிட்டது. காரணம், ஒருபுறம் யுத்த எதிர்ப்பாகவும், மறுபுறத்தில் சொந்த சகோதரர் களின் துன்பத்தை அறிவதாகவும் போராட்டம் அமைந்திருந்தது. கம்யூனிஸ்டுகள் உலகத்தின் எல்லா மக்களைப் பற்றியும் கவலைப்படுவார்கள். தமிழ் மக்களின் நியாயங்களை உணர மறுத்து விடுவார்கள் என்ற குறை, இதன்மூலம் போக்கப்படுமா? என்ற எண்ணம் அப்பொழுது என்னிடம் எழுந்தது.
தமிழ் மக்களின் தீவிர உணர்வு களுடன், இந்தப் போராட்டம் இரண்டறக் கலந்து நின்றது. கட்சிக்கு, இது புதுவிதமான அனுபவம். மொழியை நேசிக்கும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துச் ச
(102) ஈழத் தமிழர்களுக்கான கம்யூனிஸ்ட் தீர்மானம்!
அந்த நாளில் மலர்ந்த, அந்த அரசியலை இந்த தருணத்தில் திரும்பிப் பார்க்கிறேன். 2008 அக்டோபர் 2ஆம் நாள், தனி புத்தெழுச்சியை தந்த நாளாகத் தெரிகிறது. தமிழ் மொழி ஆதிமொழி என்பதால் அதன் மனவழி மனித உணர்வுகளும் மிகவும் தொன்மையானவை. மொழிக்கும் மொழி பேசும் மக்களுக்கும் கேடு நேர்ந்தால் அந்த நொடியிலேயே சிலிர்த்து எழுந்து விடும் இயல்பை இவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது நிரூ பிக்கப்பட்ட உண்மை. இந்த புரிதலை அக்டோபர் போராட்டம் கொண்டிருந்தது என்பதுதான் இதன் சிறப்பு. எத்தனையோ போராட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நடத்தினாலும், இந்த போராட் டம் மட்டும் தமிழ் மக்களை வித்தியாசமாகப் பார்க்க வைத்துவிட்டது. காரணம், ஒருபுறம் யுத்த எதிர்ப்பாகவும், மறுபுறத்தில் சொந்த சகோதரர் களின் துன்பத்தை அறிவதாகவும் போராட்டம் அமைந்திருந்தது. கம்யூனிஸ்டுகள் உலகத்தின் எல்லா மக்களைப் பற்றியும் கவலைப்படுவார்கள். தமிழ் மக்களின் நியாயங்களை உணர மறுத்து விடுவார்கள் என்ற குறை, இதன்மூலம் போக்கப்படுமா? என்ற எண்ணம் அப்பொழுது என்னிடம் எழுந்தது.
தமிழ் மக்களின் தீவிர உணர்வு களுடன், இந்தப் போராட்டம் இரண்டறக் கலந்து நின்றது. கட்சிக்கு, இது புதுவிதமான அனுபவம். மொழியை நேசிக்கும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர். இதை கம்யூனிஸ்டு கட்சிக்குள் செயல்படுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளை பின்னர்தான் நான் தெரிந்துகொண்டேன். ஒருகட்டத்தில் உட்கட்சிப் போராட்டத்தில் இந்தப் பிரச்சனையால் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் கூட எனக்கு வந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சிகளில் சில உறுதியான நிலைப்பாடு இருக்கும். அந்த நிலைப்பாட்டை ஒரு மாநில கட்சி மாற்றியமைப்பது அத்தனை எளிதானது அல்ல. தேசியக்குழு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா மாநிலத்தைச் சார்ந்தவர்களும் தேசியக் குழுவில் இருப்பார்கள். சம்மந்தப்பட்ட மாநிலத்தின் அடிப்படையான பிரச்சினை என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் அதற்கான ஒப்புதலைத் தரவேண்டும். ஆரம்பத்தில் இந்தப்பயணம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
தமிழர்களை கொலை செய்யும் நோக்கத் துடன், இலங்கை அரசாங்கம் வெறிகொண்டு நடத்தும் யுத்தத்தைப் பற்றிய தகவல்கள் இந்தப் போராட்டத்திற்கு ஒரு ஆதரவு மனநிலையை உருவாக்கியது. இந்த தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் இந்திய தலைமைக்கு கொண்டுபோய் சேர்த்தோம். இப்படி இந்தியத் தலைமையின் இந்த உறுதிப்பாட்டிற்கு பல காரணிகள் இருந்தாலும், தோழர் நல்லகண்ணுவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கட்சியின் அகில இந்திய தலைமை, தோழர் நல்லகண்ணு மீது ஆழ்ந்த நம்பிக்கையை வைத்திருந்தது. சென்னையில் ஒரு தேசிய மாநாடு நடத்தி, அதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள தோழர் களால் அறியப்பட்டிருந்தார். அவரது தியாகம், நேர்மை, அர்ப் பணிப்பு ஆகியவை இந்த காலத்தில் கூடுதலாக வெளிச்சத்திற்கு வந்திருந்தது. சென்னையில் தோழர் தா.பாண்டியன் அவர்கள் தலைமையில் ஈழ மக்களின் அரசியல் உரிமை குறித்த, தீர்மான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டது என்றால் அதை இந்தியா முழுமையும் உள்ள தோழர்கள் ஏற்றுக்கொண்டதற்கு தோழர் நல்லகண்ணு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன்பின்னர் போராட்டம் வேகமெடுத்தது. இந்திய மாநில தலைநகரங்கள் அனைத்திலும் இது நடைபெற்றது. தமிழ் மாநிலத் திற்காக, இப்படி ஒரு இயக்கம், இந்தியா முழுவதிலும் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. டெல்லி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் தலைமையேற்றிருந் தார். சென்னையில் சேப்பாக்கத்தில், அக்டோபர்- 2 உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்தோம். ஒரே இடத்தில் மட்டும் நடத்த வேண்டாம் என்றும் மாநிலம் முழுவதும் பரவலாக நடத்த வேண்டும் என்பது கட்சியின் முடிவு. ஆங்காங்கே மாவட்ட தலைநகர்களில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ய கட்சி வழிகாட்டியிருந்தது. அந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் பங்கேற்றனர். சென்னை போராட்டத்தில் இலங்கையின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
சென்னைக் கூட்டத்திற்கு 500 பேர் அமர்வதற்குரிய பந்தல் போட்டிருந்தோம். 5 ஆயிரம் பேர் வந்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. பந்தல் சிறியதாக தெரிந்தது. கூட்டம் மிகவும் பெரியதாகக் காணப்பட்டது. இதைப்போல மாவட்டங்கள் அனைத்திலும் ஏற்பாடுகளை தாண்டிய பெருங்கூட்டம். உண்மைதானா? என்று எங்களாலேயே நம்பமுடியவில்லை. அந்த தருணங்களில் தோழர் நல்லகண்ணுவின் ஆழ்மன அரசியலை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை அவர் கூறிய கருத்து ஒன்றை இன்று நினைத்துப் பார்த்தாலும், அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ‘உழைக்கும் மக்களின் மொழி சார்ந்த பண்பாட்டு உணர்வை நாம் புரிந்துகொள்ளவில்லை’ என்றார். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எப்படி மக்களை ஒருங்கிணைக்க முடியும்? மொழியும் பண்பாடும் அதற்கு அடிப்படை அல்லவா? என்றார். இதனை கட்சியில் எத்தனை பேர் சரிவர புரிந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் அய்யா நெடுமாறன் அவர்களைப் பற்றிய சில விவரங்களை குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன். தோழர் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகிய இரண்டு தலைவர்களையும் ஆரம்ப காலம் முதலே மிக நன்றாக அறிந்தவர். தோழமை கொண்டவர். அவருடன் நெருக்கம் கொள்ளும் வாய்ப்பு அப்பொழுதுதான் எனக்குக் கிடைத்தது. போர் நிறுத்தம் என்பது அன்றைய காலத்தில் எத்தகைய முக்கியத்துவம் கொண்டது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் முன்னெடுப்பதில் உள்ள வலிமையை அவர் அறிந்திருந்தார். கம்யூனிஸ்டு கட்சியைப் பற்றி அய்யா நெடுமாறன் கொண்டி ருந்த மரியாதையை இந்த காலத்தில்தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பள்ளி மாணவானக இருந்தபோது, புகழ்மிக்க தலைவர் பி.ஜி.ஜோஷியை சந்தித்திருக்கிறார்
ஈழத்தமிழ் மக்களுக்காக எதை எதையோ இழந்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள், அவர் தலைவர் பிரபாகரன் குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்து எழுதியவை, எதிர்கால சந்ததிக்கு எத்தனையோ உண்மைகளைச் சொல்லக் காத்திருக் கிறது. அவர் அந்தக்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் இன்னமும் பசுமையாக என்னிடம் இருக்கிறது. அவர் இன்றுவரை வியந்துகூறும் ஒரு செய்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு ஹைதராபாத் பற்றியதாகும். அங்குதான் தமிழ் மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கையின் ராஜபக்சே அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், அதற்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அந்த தீர்மானம் இந்திய அளவில் மட்டுமல்ல. உலக கம்யூனிஸ்டு இயக்கங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மாநாட்டிற்கு உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வந்திருந்தனர்.
ஆனால் இந்த தீர்மானத்தை ஒற்றுமையோடு நிறைவேற்ற தோழர் நல்லகண்ணு அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் நான் அறிவேன். அதற்கு முந்திய நாள் இரவு அவர் முற்றாகத் தூங்கவில்லை... எங்களையும் தூங்க அனுமதிக்கவில்லை.
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us