திருமண நேரத்தில் சிறை! மது எதிர்ப்பு போரில் மனம் தளராத போராளி நந்தினி!

nn

திருமணத் தேதி நெருங்கி வந்த நேரத்திலும், மது எதிர்ப்பு போராளியாக சிறைவாழ்வை உறுதியுடன் ஏற்ற போராளி நந்தினி, இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறார்.

"படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்றுகூறி ஜெ. ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பிருந்தே, பூரண மதுவிலக்குக் கோரி தனிஆளாக, அதுவும் ஒரு பெண்ணாக போராட்டங்களை நடத்திவருகிறார் மதுரையைச் சேர்ந்த நந்தினி. வேளாண்துறையில் பொறியாளராக பணிபுரிந்துவந்த அவரது தந்தை ஆனந்தனும், நந்தினியோடு மதுவிலக்குப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள, கைகளால் எழுதப்பட்ட பதாகைகளோடு பொதுஇடங்களில் மக்களைச் சந்தித்து வந்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற டெல்லியில் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

nn

கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்துநிலையத்தில், மதுவிலக்கை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர் சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும். அப்போது அங்குவந்த போலீஸ்காரர் நாகராஜன், ""அரசு அனுமதியில்லாமல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது''’என்று கடுமையான குரலில் ஒடுக்க, இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆனந்தன் அடித்துக் கீழே தள்ளப்பட்டார். இதுதொடர்பாக திருப்பத்தூர் டவுன் காவல்நிலையத்தில் அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, கடந்த ஜூன் 27-ல் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

nn""சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியுள்ளது. வழக்கற

nn""சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியுள்ளது. வழக்கறிஞர்கள் வைத்துள்ளீர்களா?''’என நந்தினி தரப்பிடம் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா கேட்டபோது, தாங்களே குறுக்கு விசாரணை செய்வதாகத் தொடங்கினர் சட்டம் பயின்றவரான நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும். அரசுத்தரப்பு 2-வது சாட்சியமாக வந்தவர் போலீஸ்காரர் மணிகண்டன். அவரிடம், “""ஐ.பி.சி. பிரிவு 328-ன்படி மதுபானம் போதைப் பொருளா? மருந்துப் பொருளா? அல்லது உணவுப் பொருளா?''’என முதல் கேள்வியைத் தொடங்கியதுமே, "வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்கக்கூடாது' என்றார் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா.

""இந்த வழக்கிற்கு தேவையான கேள்விதான் இது. நீதிமன்றத்தை சாமான்யர்கள் நம்பியிருக்கும்போது, அரசுக்கு சாதகமாக அது செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார். ""நீதிமன்றத்திற்கு காலவிரயம் ஏற்படுத்துகிறீர்கள்'' என்று நீதிபதி குறிப்பிட... ""எல்லா வழக்கையும் முடித்தபிறகே அழைத்திருக்கலாமே'' என இருவரும் பதில்கூற, கோபமான நீதிபதி, ""நீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்துவிட்டீர்கள். இங்கேயே அமருங்கள்''’எனக் கூறிவிட்டு உணவு இடைவேளைக்குச் சென்றார்.

அதன்பிறகு 4 மணிக்கு வந்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, ""உங்களைக் கைது செய்ய உத்தரவிடுகிறேன். வேண்டுமென்றால் உங்களுக்காக ஜாமீன்தாரர் கொடுங்கள், விடுவிக்கிறேன்''’என்றார். “

""அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வாய்ப்பூட்டு போடப் பார்க்கிறீர்கள்''’என்று இருவரும் குரலெழுப்பவே, ஐ.பி.சி. 186, 189 மற்றும் 228 ஆகிய பிரிவுகளின் கீழ் நந்தினி, ஆனந்தனைக் கைதுசெய்து ஜூலை 07-வரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார் மாஜிஸ்ட்ரேட்’என்று நடந்ததை குறிப்பெடுத்த ஐ.பி.யைச் சேர்ந்த ஒருவர் விலாவாரியாக விவரிக்கிறார். நந்தினி, ஆனந்தனின் கைது வைரல் நியூஸாக மாற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்களால், தேசிய அளவில் அவருக்கு விடுதலைகோரும் முழக்கம் ட்ரெண்டிங்கில் இருந்தது.

bbb

“நீதிமன்ற அவமதிப்பு என்றால், முதலில் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் எவராவது ஒருவர் அதுதொடர்பாக புகார் கொடுக்கவேண்டும். அதை விசாரிக்க ஏழு நாட்களாவது காலஅவகாசம் கொடுக்கவேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட நாளில் நீதிமன்றத்தில் இருந்த நபர்களை சாட்சியங்களாக விசாரிக்கவேண்டும். அதன்பிறகுதான், உத்தரவு பிறப்பிக்க முடியும். குறிப்பாக, சூமோட்டோ வழக்கினை பிரயோகிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு அதிகாரமே கிடையாது.

உதாரணத்திற்கு, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், ஏ.பி.பி.-க்கும், நீதிபதிக்கும் இதேபோல் வாக்குவாதம் எழ, "நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார்' என்று ஏ.பி.பி. மீது விசாரணை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றத்திற்குதான் வழக்கு அனுப்பப்பட்டதே தவிர, நேரடியாக அந்த நீதிபதி வழக்கை எடுக்கவில்லை. மேலும், தேவையான பதிலைப்பெற சுற்றிவளைத்து எப்படி வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசின் தலையீடு இருப்பதாக ஐயம் எழுகிறது''’என்கின்றனர் வழக்கறிஞர்கள் பாஸ்கர் மதுரமும், ஆனந்த முருகனும்.

""இதுவரை 65 முறை சிறையில் தள்ளியும் இந்தப் பொண்ணு விடாம போராடுது. எவன் எதைக் குடிச்சிட்டு செத்தா இதுக்கு என்னவாம்? உண்ணாவிரதம், போராட்டம்னு வாழுற வயசுல இப்படி பண்ணிட்டு இருக்கு. அந்தப் பிள்ளையோட அப்பனும் கூட சேர்ந்துக்கிட்டு போராடுறதெல்லாம் டூமச். இப்படியே போனா அப்புறம் முகிலன் மாதிரி காணாமத்தான் போகணும்''’என்று எச்சரிப்பது போல் கோபத்தை வெளிப்படுத்தினார் போலீஸ்காரர் ஒருவர்.

ஜூலை 05-ஆம் தேதி நந்தினிக்கு, குணா ஜோதிபாசு என்பவருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில்... நந்தினி மற்றும் ஆனந்தனுக்கு ஜாமீன்கேட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல்செய்தார் வழக்கறிஞர் பழனிவேல். அதற்கு, “""மதுரையிலும் இங்கே நடந்ததுபோலவே நந்தினியும், ஆனந்தனும் நடந்துகொண்டனர். "இனிமேல் எந்த நீதிமன்றத்திலும் இப்படி நடந்துகொள்ள மாட்டோம்' என்று அபிடவிட் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குகிறேன்''’’ என்றார் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா. தங்களின் போராட்ட குணத்தை விட்டுக்கொடுத்து ஜாமீன் பெற மகளும் தந்தையும் தயாராக இல்லை.

ஆனந்தனுடன் வேளாண் துறையில் பணியாற்றும் நண்பரின் மகனான குணா ஜோதிபாசுவுடன் நந்தினிக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது. இந்த சம்பவங்களால் நந்தினியின் திருமண தேதி தள்ளிப்போயுள்ள நிலையில், அவரது வருங்கால வாழ்விணையர் குணா ஜோதிபாசுவிடம் பேசியபோது, “

""எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசை தனியாளாக நந்தினி எதிர்க்கிறார். அதனாலேயே காவல்துறையால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினை. அதைக் கண்ணெதிரில் பார்த்தவன் நான். சட்டமே தடைசெய்துள்ள பொருளை அரசு விற்பது தப்பில்லையா என்று கேட்டதற்காக நந்தினியையும், ஆனந்தனையும் சிறையில் அடைத்துவிட்டார்கள். இனிமேல் கேள்வியெழுப்ப மாட்டோம் போன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புதலோடு உத்தரவாதம் கேட்டார்கள். இந்த திருமணம் தள்ளிப்போவதால் கவலையில்லை. நந்தினி சிறைமீண்டு வந்தபிறகே நாங்கள் திருமணம் செய்துகொள்வோம்''’என்கிறார் உறுதியாக.

சமூகத்தின் குரலாக ஒலிப்பவர்களை விரோதிகளாகப் பார்ப்பதை, இந்த அரசு எப்போதுதான் நிறுத்தப்போகிறதோ?…

-நாகேந்திரன், அண்ணல்

____________

இது டாஸ்மாக் அரசு!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள ஜம்புகண்டி பகுதியில், ஜூன் 24-ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் டாக்டர் ரமேஷின் மனைவி ஷோபனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பாலாஜி, அசோக் ஆகிய இளைஞர்கள் அருகிலுள்ள மதுக்கடையில் மது அருந்துவிட்டு டூவீலர் ஓட்டியதே விபத்துக்குக் காரணமானது.

இதைக் கண்டித்து டாக்டர் ரமேஷ் அதே இடத்தில் மனைவியின் உடலைக் கிடத்தி நடத்திய போராட்டத்தின் விளைவாக, கோவை வடக்கு தாசில்தார் விஜயகுமார் டாஸ்மாக்கை மூடுவதாக உத்தரவாதம் கொடுத்தார். உடனடியாக அவரை பொள்ளாச்சிக்கு தூக்கியடித்து கடமையாற்றியது அரசு. "பாலாஜி, அசோக் இருவரும் மது அருந்தியிருந்தார்கள்' என்று பரிசோதனை செய்த டாக்டர்கள் சான்றிதழ் வழங்கியும், விபத்து ஏற்படுத்தியதாகவே தடாகம் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர். போலீஸார் செமத்தியாக கவனிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்கின்றனர். அவர்களின்மீது கொலைவழக்கு பதியக்கோரி டாக்டர் ரமேஷ் கோவை ஆட்சியர் ராஜாமணியிடம் அளித்த புகாரிலும் நடவடிக்கை இல்லை.

"விபத்துக்குக் காரணமான மதுக்கடையை மூடிவிட்டாலும், பேன்சி ஸ்டோர் முதல், மளிகைக்கடை வரை மதுவிற்பனை ஜோராக நடக்கிறது' என்கின்றனர் ஜம்புகண்டி ஊர்மக்கள். இன்னொருபுறம், மூடப்பட்ட டாஸ்மாக்கைத் திறக்கவேண்டும் என்று ஆதிவாசிகளைத் திரட்டி மனு கொடுக்க வைத்திருக்கிறார் டாஸ்மாக் பார் உரிமையாளர் பாலாஜி. அரசின் நடவடிக்கைகளும் அதற்கு இசைவாகவே இருக்கின்றன.

-அருள்குமார்

nkn090719
இதையும் படியுங்கள்
Subscribe