Advertisment

சிறைத்துறை டி.ஐ.ஜி. அதிரடி மாற்றம்! -திருச்சி களேபரம்!

s

dd

திருச்சி மத்திய சிறை யின் கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோர் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சாரங்கன் என்பவரை திருச்சி மத்திய சிறையிலுள்ள தனிச் சிறையில் அடைத்து வைத் துள்ளனர். இவர் பெண் வேடமிட்டு திருட்டு சம்பவங் களில் ஈடுபடுவதால் இவரை பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி எனக்

dd

திருச்சி மத்திய சிறை யின் கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோர் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலை யத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சாரங்கன் என்பவரை திருச்சி மத்திய சிறையிலுள்ள தனிச் சிறையில் அடைத்து வைத் துள்ளனர். இவர் பெண் வேடமிட்டு திருட்டு சம்பவங் களில் ஈடுபடுவதால் இவரை பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி எனக் கூறுகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் மாரீஸ்வரன் என்ற சிறைக் காவலர், சாரங்கனை அடித்து ஓரினச் சேர்க்கைக்கு அழைத் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாரங்கன், சிறை கண்காணிப்பாளர் மற்றும் டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில் சாரங்கன் புகாரளித்துள்ளார். வழக்கறிஞர் ஒருவரை நியமித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணையில், சிறை வளாகத்தில் உள்ள கண் காணிப்பு வீடியோக்களில் சாரங்கன் தாக்கப்படுவது பதிவானது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி நீதி மன்றத்தில் ஒப்படைத்த நிலையில், சிறைக் கண்காணிப் பாளர் மற்றும் டி.ஜ.ஜி. ஆகிய இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட சிறைக் காவலர் மாரீஸ்வரனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதற்கிடையில் டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீது ஏற்கெனவே பல புகார்கள் இருந்துவரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையும், இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதிகேட்டு சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்த கடிதம் தற்போது அமைச்சரின் மேஜையின்மீது உள்ளது. இந்நிலையில் அவரை காத் திருப்புப் பட்டியலிலிருந்து விடுவித்து, கண்காணிப்பாளர் ஆண்டாளை திருச்சியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிக்கும், டி.ஐ.ஜி. ஜெய பாரதியை அவர் கேட்டதின் அடிப்படையில் வேலூர் பயிற்சிப் பள்ளிக்கும் பணி யிடமாற்றம் செய்துள்ளனர். டி.ஐ.ஜி. இங்கிருந்து புறப் படும்போது, தன்னுடைய சக ஊழியர்களிடம். "அமைச்சர் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார், என்னை எதுவும் செய்ய முடியாது. நான் நினைத்தது போல வேலூரில் பணி வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன்' என்றும், "எந் தத் துறையும் என்னை எதுவும் செய்ய முடியாது' என்றும் கூறிவிட்டுச் சென் றுள்ளார்.

இதுகுறித்து கருத்தறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதியையும். அவரது தனி உதவியாளரையும் தொடர்பு கொண்டும், இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.

nkn270724
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe