நெருக்கடி யுகத்தில் அச்சு ஊடகம்! -பிரதமரை வலியுறுத்தும் எம்.பி.க்கள்!

ff

ரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே போனதன் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் படுபாதாள சரிவை சந்தித்திருக்கிறது. அதில், அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்து தாறுமாறான தகவல்கள் பல வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன. இந்நிலையில், மக்களிடம் உண்மையான செய்திகளை விரிவாக கொண்டு செல்லக்கூடியவை அச்சுப் பத்திரிகைகள்தான். ஆனால், பேப்பரைத் தொட்டால் கொரோனா பரவும் என வாட்ஸ்ஆப்களில் பரவிய தகவல்களால், அச்ச

ரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே போனதன் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் படுபாதாள சரிவை சந்தித்திருக்கிறது. அதில், அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறித்து தாறுமாறான தகவல்கள் பல வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன. இந்நிலையில், மக்களிடம் உண்மையான செய்திகளை விரிவாக கொண்டு செல்லக்கூடியவை அச்சுப் பத்திரிகைகள்தான். ஆனால், பேப்பரைத் தொட்டால் கொரோனா பரவும் என வாட்ஸ்ஆப்களில் பரவிய தகவல்களால், அச்சு ஊடகங்களைத் தொடுவதில் மக்களுக்குத் தயக்கம் ஏற்பட்டது. பத்திரிகை விற்பனை பாதிக்கப்பட்டது.

printmedia

கடந்த சில ஆண்டுகளாகவே அரசுத் தரப்பின் ஒத்துழைப்பின்றி, அச்சு ஊடகங்கள் தவித்து வரும் நிலையில், கொரோனா காலம் மிகப் பெரிய நெருக்கடி யுகமாகிவிட்டது. இதிலிருந்து மீளவேண்டுமானால், பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரி யை மத்திய அரசு குறைக்க வேண்டும், அரசு விளம்பரங் கள் தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உட னடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும், காலத் தின் தேவை கருதி அரசு விளம் பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதம ரிடம் வைக்கப்பட்டுள் ளன.

இதனையடுத்து, தமிழ் நாட்டைச் சேர்ந்த நாளிதழ் நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பிரதம ரிடம் கோரிக்கை மனு தந் துள்ளனர். "இந்து' என்.ராம், "தினமலர்' ஆதி மூலம், "தினத்தந்தி' பாலசுப்ரமணிய ஆதித்தன், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' மனோஜ்குமார் சொந்தாலியா, "தினகரன்' ஆர்.எம். ஆர்.ரமேஷ் ஆகியோர் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சி.பி.எம்-சி.பி.ஐ. கட்சித் தலைவர் கள் ஆகியோரிடம் நேரில் அளிக்கப் பட்டன.

printmedia

தமிழகத்தில் உள்ள கட்சிகளின் எம்.பிக் கள், பிரதமரிடம் வலியுறுத்தி அச்சு ஊடகத்தினை மீட்க வேண்டும் என்று கோ ரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர், எதிர்க் கட்சித்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கட்சி எம்.பிக்கள் இதுகுறித்து பிரதமரிடமும் நாடாளு மன்றத்திலும் வலியுறுத்து வார்கள் என்ற உறுதியினைத் தந்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செய லாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தன் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்துள் ளார். அனைத்து தரப்பின் ஒத்துழைப்புடன் அச்சு ஊடகத்தினை மீட்கும் முயற்சியில் "இந்து' என்.ராம் உள்ளிட்ட தமிழகப் பத்திரிகை யாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

-கீரன்

nkn230520
இதையும் படியுங்கள்
Subscribe