ராங்கால் பிரதமர் விசிட்! நீட் என்னாகும்? ஆளுந்தரப்புக்கு நெருக்கமான நிறுவனம்! வருமானவரித்துறை குறி!

rang

"ஹலோ தலைவரே, நீட்டுக்கு விலக்களிப்பது தொடர்பாக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு இன்னும் ஒப்புதல் தராம கவர்னர் மாளிகை மௌனம் சாதிக்குதே...''”

"எடப்பாடி ஆட்சியில் அனுப்பப்பட்ட 7 பேர் விடுதலைத் தீர்மானமே கவர்னர் மாளிகையில் தூங்கிக் கிட்டுத்தானே இருக்குது.''”

ravi

"உண்மைதாங்க தலைவரே, நீட் விவகாரத்தில் கவர்னர் மாளிகையின் கனத்த மௌனத்தைப் பார்த்துட்டு, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆச்சுன்னு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேட்ட கேள்விக்கு, ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ராஜ்பவன் பதில் அனுப்பியிருக்கு. இந்த நிலையில் கவர்னர் உடனடியாக அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தரணும்னு வலியுறுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சந்திக்க இருக்காங்க. இந்த சூழல்ல மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க ஜனவரி 12-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதற்குமுன் இந்த விவகாரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிக்கணும்னு தி.மு.க. தரப்பும் முயற்சிக்குது. அந்த முயற்சியின் வெற்றியைப் பொறுத்தே மோடியின் பயணத்தின் வெற்றி அமையும்னு அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க.''”

stalin

"’தி.மு.க. தரப்புக்கு நெருக்கமான தொழில் நிறுவனம் ஒன்றை வருமான வரித்துறை குறி வச்சிருக்கேப்பா?''”

"தி.மு.க.வின் அதிகார மையத்துக்கு நெருக்கமான தொழில் நிறுவனம் அது. இப்ப ரியல் எஸ்டேட் தொழிலிலும் வேகமாக இறங்கிய அந்த நிறுவனம், மல்டி ஸ்டோரி

"ஹலோ தலைவரே, நீட்டுக்கு விலக்களிப்பது தொடர்பாக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு இன்னும் ஒப்புதல் தராம கவர்னர் மாளிகை மௌனம் சாதிக்குதே...''”

"எடப்பாடி ஆட்சியில் அனுப்பப்பட்ட 7 பேர் விடுதலைத் தீர்மானமே கவர்னர் மாளிகையில் தூங்கிக் கிட்டுத்தானே இருக்குது.''”

ravi

"உண்மைதாங்க தலைவரே, நீட் விவகாரத்தில் கவர்னர் மாளிகையின் கனத்த மௌனத்தைப் பார்த்துட்டு, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆச்சுன்னு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேட்ட கேள்விக்கு, ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக ராஜ்பவன் பதில் அனுப்பியிருக்கு. இந்த நிலையில் கவர்னர் உடனடியாக அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தரணும்னு வலியுறுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சந்திக்க இருக்காங்க. இந்த சூழல்ல மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க ஜனவரி 12-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதற்குமுன் இந்த விவகாரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிக்கணும்னு தி.மு.க. தரப்பும் முயற்சிக்குது. அந்த முயற்சியின் வெற்றியைப் பொறுத்தே மோடியின் பயணத்தின் வெற்றி அமையும்னு அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க.''”

stalin

"’தி.மு.க. தரப்புக்கு நெருக்கமான தொழில் நிறுவனம் ஒன்றை வருமான வரித்துறை குறி வச்சிருக்கேப்பா?''”

"தி.மு.க.வின் அதிகார மையத்துக்கு நெருக்கமான தொழில் நிறுவனம் அது. இப்ப ரியல் எஸ்டேட் தொழிலிலும் வேகமாக இறங்கிய அந்த நிறுவனம், மல்டி ஸ்டோரி பில்டிங்குகளைக் கட்டி விற்பனை செய்யத் தொடங்கியிருக்கு. சென்னையில் முக்கிய சாலைகளில் அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள் ளன. அந்த நிறுவனத் தை கண்கொத்திப் பாம்பாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கவனிக்கத் தொடங்கியிருக்கு. மேலிட வாரிசுக்கு நெருக்கமானவர்கள் சிலரின் முதலீடுகள், அந்த நிறுவனத்தில் இருப்ப தாக வந்த தகவலின் அடிப்படையில், வரு மான வரித்துறை அதற்கான ஆதாரங்களை ரகசியமாக திரட்டிக்கிட்டு இருக்குதாம்.''”

"பத்திரப்பதிவுத் துறையில் சில ’அஹாசுஹா’ வேலைகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கொட நாடு விவகாரத்தில், தொடர்புடைய கோவை மாவட்ட பத்திரப் பதிவாளராக இருந்த செல்வகுமார், மாஜி முதல்வர் எடப்பாடிக்கு தேவைப்பட்ட டாகு மெண்டுகளை ஏற்பாடு செய்து கொடுத் தவர்னு ஏற்கனவே விசாரணைக் குழு கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரசின் பத்திரப் பதிவுத் துறையின் தலைமைச் செயலக பெண் உயரதிகாரியும், அந்த ’பிளாக்ஷிப்’ செல்வக்குமாரும் ரகசியமாக ஒரு இடத்தில் சந்திச்சிருக்காங்க. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், மூன்று எழுத்தில் சித்திரமான பெயரைக் கொண்டவராம். அந்த சந்திப்பில், சில பத்திரப்பதிவு சம்பந்தமாகவும், செல்வகுமாரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது சம்பந்தமாகவும் அவங்க விவாதிச்சிருக்காங்க.''”

"இப்ப பத்திரப் பதிவுத் துறையின் முறைகேடுகளை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு கடந்த 15-ந் தேதி அமைக்கப்பட்டிருக்கே?''

modi

"ஆமாங்க தலைவரே, போன அ.தி.மு.க. ஆட்சியில் தென் சென்னை மண்டல உதவி பத்திரப் பதிவுத் தலைவராக இருந்த பி.வி.கீதாவின் நிர்வாகத்தில்தான் நிறைய முறைகேடுகள் நடந்திருக் குன்னும், அப்போதைய துறை அமைச்சர் வீரமணிக்கு நிறைய உதவிகள் செய்ததற்கு பிரதி உபகார மாக, அவர் சென்னை மண்டல அதிகாரியாக நியமிக்கப்பட்டாருன் னும் ஏற்கனவே சொல்லப்பட்டது. இப்ப அவருக்கு தென் சென்னை மண்டல ஏ.ஐ.ஜி. பதவியைக் கூடுதல் பொறுப்பாக, அந்த மூன்றெழுத்து பெண் அதிகாரி கொடுத்திருக்கிறா ராம். ஊழல் சர்ச்சையில் சிக்கியிருக் கும் கீதாவை முக்கியமான 2 பதவி களில் நியமித்ததுதான் இப்ப துறை யில் சூறாவளியை எழுப்பிக்கிட்டு இருக்குது. துறை முறைகேட்டை விசாரிக்கும் குழு இனி எந்த லட்சணத்தில் செயல்படும் என்றும், அவரது நியமனத்தின் பின்னணியில் பேரங்கள் நடந்திருக்கிறது என்றும் அதிகாரிகள் தரப்பு சொல்லுது.''”

"அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை உயர்த்திக் கொடுத்து அவர்களை தி.மு.க. அரசு உள்ளம் குளிரவச்சிருக்கே?''”

rang"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக் கைகளுடன் முதல்வர் ஸ்டாலினை பீட்டர் அந்தோணிசாமி தலை மையிலான தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தி யிருந்தது. பல்வேறு சங்கங்களும் இதேபோன்ற கோரிக்கைகளை வைத்தன. இந்த நிலையில்தான் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய தாரர்களுக்கும் இதுவரை வழங்கி வந்த 17 சதவீத அகவிலைப் படியுடன், 14 சதவீதத்தைக் கூட்டி, மொத்தம் 31 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் முதல்வர். ஜனவரி 1-ந் தேதி முதல் 18 லட்சம் பேர் பயனடையக்கூடிய இந்த அகவிலைப்படி உயர்வு, அமலுக்கு வருது. இதனால் மனம் குளிர்ந்து போன அரசு ஊழியர்கள், முதல்வருக்கு வாழ்த்து மலர்களைத் தூவிக்கொண்டு இருக்கிறார்கள்.''”

"மாஜி அ.தி.மு.க. மந்திரி ராஜேந்திர பாலாஜி ஓடுற ஓட்டத்தைப் பார்த்தா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராயிடுவார் போலிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, அப்படிதான் மக்கள் மத்தியில் டாக் இருக்கு. போலீஸ் தேடிக்கிட்டு இருக்கும் மாஜி மந்திரியான ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணகிரில இருக்கார். கேரளாவுல பதுங்கி இருக்கார். டெல்லிக்குப் பறந்துட் டார்னு பல தகவல்கள் வருது. போலீஸ் சைடிலிருந்தும் லீக் ஆகுது. பெரிய பெரிய குற்ற வாளிகளை எல்லாம் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் போலீஸ், அவரை பிடிக்க முடியாத மாதிரி, அவர் நிழலைத் துரத்திக்கிட்டு ஓடுது. ஆனால் காவல்துறை யிலேயே இருக்கும் சிலர், அவர் இருக்கும் இடத்தை இன்னும் ட்ரேஸ் பண்ணாதது, உளவுத் துறைக்கு பெரும் தோல்வி மாதிரின்னு சொல்றாங்க. இன்னும் சிலரோ, எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க உதவி இல்லாமல் அவரால் ஒளிய முடியாதுன்னு அழுத்தமாச் சொல்றாங்க. விசாரணை டீமோ, அவசரப்படாமல் வேடிக்கையை மட்டும் பாருங்க என்கிறது.''”

"சரிப்பா, நீதி தேவதையே கோமாவுக்குப் போன மாதிரி, அதி முக்கியமான வழக்குகள் கூட, வருடக் கணக்கில் இழுபட்டு வரும் நிலையில், பண விவகாரம் தொடர்பான பெரிய வழக்குகள் எல்லாம் விரைவாக முடித்து வைக்கப்படுதே?''”

"தலைவரே, நீங்க எங்க வர்றீங்கன்னு தெரியுது. சென்னை உட்பட பல ஊர்களிலும் மால்களை நடத்திவரும் பெருங்கோடீஸ்வரரான ராஜா என்பவர், தான் நிதானமில்லாமல் இருக்கும்போது, தன்னை பெண்களுடன் இருக்க வைத்து ஆபாசப்படம் எடுத்து மிரட்டித் தன்னிடம் இருந்து தனது நண்பர்கள் 10 கோடி ரூபாயைப் பறித்துக்கொண்டதாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி புகார் கொடுத்தார். பதிலுக்கு எதிர்தரப்பும், தங்களை ராஜாதான் மோசடி செய்தார்னு புகார் கொடுத்தது. இது தொடர்பான வழக்கு 20 -ந் தேதியே உயர் நீதிமன்றத்துக்குப் போனது. ராஜாவுக்காக பா.ஜ.க. வழக்கறிஞர்கள் டீம் களம் இறங்குச்சு. 21-ந் தேதியே இருதரப்பும் சமரசமாகப் போவதாகச் சொல்லி, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுவிட்டது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருக்கும் ஒரு பெரிய அதிகாரி, ஒரு முன்னாள் மாணவப் பத்திரிகையாளராம். அந்த நட்பில் அவரோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் பத்திரிகைகளுக்கு மட்டும் அரசு விளம்பரங்களையும், அரசு சார்ந்த செய்திகளையும் ஆர்வமாக அள்ளித் தருகிறாராம். மற்ற பத்திரிகையாளர்கள் விளம்பரமோ அல்லது செய்திகள் பற்றியோ கேட்டால் அவர் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல், சில பத்திரிகை நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் அரசு நிகழ்ச்சிகளில் கண்டாலே, அவர்களை வெளியே அனுப்புங்கன்னு சத்தம் போடறாராம். ஊருக்கே தெரிஞ்ச ஆட்சி மாற்றம், அந்த செய்தித்துறை அதிகாரியின் புத்திக்கு மட்டும் போய்ச் சேரலை யோன்னு பாதிக்கப்பட்ட பத்திரிகை யாளர்கள் ஆதங் கப்படறாங்களாம்.''

nkn010122
இதையும் படியுங்கள்
Subscribe