Advertisment

முதல்வரின் வேண்டுகோள்! பொலிவுபெற்ற அரசு பள்ளி!.

ss

மிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தன்னார்வலர்களும், தொழிலதி பர்களும் தாமாக முன்வர வேண்டுமென்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டி ருந்தார். முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, அமைச்சர் உதயநிதி ல்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க. இளைஞர் அணியினர், சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து அடிப்படை வசதி

மிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தன்னார்வலர்களும், தொழிலதி பர்களும் தாமாக முன்வர வேண்டுமென்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டி ருந்தார். முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, அமைச்சர் உதயநிதி ல்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க. இளைஞர் அணியினர், சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து அசத்தியுள்ளனர்.

Advertisment

ss

மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 16வது வட்டம் கன்னியம்மன்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள் ளது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கிவருகின்றது. இப்பள்ளியில் சுமார் 50 மாணவ மாணவிகள் கல்வி கற்கிறார்கள். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளராக இருக்கும் வக்கீல் புழல் எம்.நாராயணனிடம், பள்ளி வகுப்பறையை சீரமைத்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டு மென்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புழல் எம்.நாராயணன், சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் ஒரு நிகழ்வாக இந்தப் பள்ளியையும் சீரமைத்துத் தரவேண்டும் என முடிவெடுத்தார்.

ff

Advertisment

அதையடுத்து, பள்ளியில் சுவர் முழுவதும் வெள்ளையடித்து, ஐவகை நிலங்களின் படங்களை வரைந்துள்ளனர். 1 முதல் 10 வரை உள்ள வாய்ப்பாடு கள் எழுதப்பட்டன. மாதிரி வகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறையில், குழந்தைகள் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, தேசிய விலங்குகள், தேசியப் பறவைகள், விஞ்ஞான ரீதியாக வழிகாட்டும் படங்கள், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களைக் குறிக்கும் வரைபடங்கள் உட்பட, பாடங்கள் தொடர்பான பல்வேறு படங்களை சுவர் முழுக்க வரைந் துள்ளனர். கரும்பலகைகளுக்கு புதுவண்ணம் பூசப்பட்டு, குழந்தைகள் அமர்வதற்கு புதிய சேர்கள், டேபிள்கள், சுத்தமான குடிநீர் வசதி களோடு குழந்தைகளின் படிப்பு தொடர்பான பல்வேறு உபகரணங்களும் அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் மாதிரி வகுப்பறை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்கப்பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்குக் காரணமான தமிழக முதல்வ ரையும், தி.மு.க. நிர்வாகிகளையும், பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

-அ.அருண்

nkn210123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe