கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்கள் பயன்பெறும் வகையில் புதுப் புது பெயரில் கடன்வழங்கும் திட் டங்களை அறிமுகப் படுத்தியது மத்திய அரசு. விவசாயிகள், மீனவர்கள், வரிசையில் சாலையோர வியாபாரிகளுக்கு பி.எம். ஸ்வநிதியுதவி திட்டத்தின் கீழ் கடன்வழங்கும் திட்டத்தை துவங்கிவைத்தார் நரேந்திர மோடி.
""திட்டம் ஆவணங்களில் இருந்தால் போதுமா... நிஜத்தில் இருக்கவேண்டாமா?'' என உற்சாகமின்றி முனகுகிறார்கள் சாலையோர வியாபாரிகள்.
சென்னையில் மட்டும் பி.எம். ஸ்வநிதி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 80% சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. வெறும் 20% பேருக்கு மட்டுமே வங்கிகள் கடன்களை வழங்கியுள்ளன என மாநகராட்சி இணை ஆணையர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
இதனைய

இதனையடுத்து சென்னையின் சாலையோர வியாபாரிகளுக்கு உடனே கடன் வழங்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. 19,000 சாலையோர வியாபாரிகள் ஸ்வநிதி உதவித் திட்டத்தின்கீழ் பதிவுசெய்திருக்க, வெறும் 2,600 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப் பட்டதாகவும் மீதமுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவுகளை வங்கிகள் நிராகரித்திருப்பதாகவும் கூறுகிறார் சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரி ஒருவர்.
சில வாரங்களுக்கு முன்பு வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி. பிரகாஷ் கூறுகையில், ""இன்னும் 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும்''’’ என்று உத்தரவிட்டார். ஆனால் வங்கிகளோ வெறும் 500-க்கு குறைவான நபர்களுக்கே கடன் வழங்கியது. இதனையடுத்து விண்ணப்பங்களை நிராகரித்த அனைத்து வங்கிக் கிளைகளின் பட்டியலையும் தொகுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கடன் வழங்க ஏன் வங்கிகள் மறுக்கின்றன என்று வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ""வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாங்கள் கடன் கொடுத்தபிறகு ஒரு வேளை வியாபாரிகள் அதனை உரிய தேதியில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் எங்கள் வேலைக்குத்தான் ஆபத்து.
பொதுவாக நாங்கள் தனிநபருக்கு கடன் வழங்கும்போது அவருக்கு மாதாமாதம் உரிய தேதியில் வருமானம் வருகிறதா? அவரால் அதைத் திரும்பக் கட்டமுடியுமா? அல்லது அவரிடம் அடமானமாக ஏதேனும் ஒரு உடைமையை பெற்றுக்கொண்டுதான் கடன்வழங்குவோம். ஆனால் சாலையோர வியாபாரிகளுக்கு அப்படி எதையும் எங்களால் வாங்க முடியாது. ஒருபக்கம் அரசு நெருக்கடி கொடுக்கிறது மறுபக்கம் எங்கள் உயரதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள்'' என்றார் குழப்பத்துடன்.
இதுகுறித்து ராயபுரம் வியாபாரிகள் சங்கங்களின் பொறுப்பாளர் ஏ.கே சாஜஹானிடம் பேசியபோது, “""இந்த திட்டம் மக்களுக்குப் பயன்தரக்கூடிய ஒன்றுதான். ஆனால் முழுமையாகச் சென்றடையவில்லை. இத்திட்டத்தின்கீழ் கடன்பெறவேண்டும் என்றால் தங்களின் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு பயோமெட்ரிக் கார்ட் கொடுப்பார்கள். அந்த கார்டை வைத்து வங்கிக்குச் சென்றால் அவர்கள் கடன்தர மறுக்கிறார்கள். ராயபுரம் பகுதியில் இரண்டு அல்லது மூன்று நபர்களே கடன் பெற்றிருக்கிறார்கள்.
ஒருபுறம் வங்கிக்குச் செல்லுங்கள் கடன் நிச்சயம் கிடைக்கும் என்று மாநகராட்சி சொல்கிறது. வங்கிக்குச் சென்றால் கடன் இல்லை என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். சில வங்கிகள் ஆவணங்கள் முறையாக இல்லை என்று கூறி நிராகரிக்கின்றன. அடையாள அட்டை இல்லாத வியாபாரிகளுக்கு வியாபாரிகள் சங்கம் மூலம் கடிதம் கொடுத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். மேலும் சில வங்கிகளில் கடன்பெறுவதற்கான படிவத்தில் 25 கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். பி.எம் ஸ்வநிதி திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை உடனடியாக அரசு தலையிட்டு சரிசெய்து வியாபாரிகள் நலனில் அக்கறை காட்டவேண்டும்'' என்றார்.
“""பி.எம் ஸ்வநிதி திட்டத்தில் மட்டும் இந்த குளறுபடிகள் நடக்கவில்லை. விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட கிசான் கடன் திட்டம் மீனவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தற்போது மீனவர்களுக்கான கடன் திட்டத்திலும் இதே அலைக் கழித்தல் போக்கு தொடர்கிறது''’என்று கூறுகிறார்கள் வடசென்னை மீனவர்களான வேலவன் மற்றும் தேசமணி.