அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27, ஞாயிறன்று நடை பெற்ற திருவாதிரை விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்தபின்னர் அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தார். விழா வில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். முன்னதாக, திருச்சி ஜெயங்கொண்டத்தில் நடந்த பிரம் மாண்ட ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருவதற்காக மாலத்தீவிலிருந்து தனி விமானம் மூலம் 26ஆம் தேதி, சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு தூத்துக் குடி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030 கோடி மதிப்பி லான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக் கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என சுமார் ரூ.4,800 கோடி மதிப்பி லான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றார். இரவு 10.15 மணி அளவில் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் மோடி ஓய்வெடுத்தார்.
ஞாயிறன்று காலையில் சாலை மார்க்கமாக, திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை, டி.வி.எஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், கொட்டப்பட்டு வழியாக திருச்சி விமான நிலையம் வரை ரோடு ஷோ சென்றார் பிரதமர். வழிநெடுக அவருக்கு பொதுமக்களும் பா.ஜ.க.வினரும் மலர்தூவி வரவேற்பளித்தனர். அவர்களைப் பார்த்து பிரதமர் கையசைக்க, உற்சாகமடைந்த பா.ஜ.க.வினர், 'மோடிஜி வாழ்க!' என கோஷம் எழுப்பினர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம், எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழ புரத்திற்கு ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர், பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கினார். அங்கிருந்து கார் மூலமாக கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு செல்லும்போது 2 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடந்தது. வழிநெடு கிலும் பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிர தமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதினம் தலை மையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், வாரணாசியிலிருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு சோழீஸ்வரருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்தார்..இதைத் தொடர்ந்து கோவிலிலுள்ள சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி யையும் பார்வை யிட்டு ரசித்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில், மாமன்னன் ராஜேந்திர சோழர் நினைவு நாண யத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். விழாவில் இசை ஞானி இளைய ராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடந்தது. இளையராஜாவின் இசையை பிரத மர் மோடியும் பொதுமக்களும் ரசித்துக் கேட்ட னர். பின்னர், மதியம் அங்கி ருந்து ஹெலிகாப் டரில் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கி ருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென் றார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், பொன்னேரி மற்றும் பொன்னேரிக்கும் கோவிலுக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை, விழா அரங்கம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. திருச்சியில் அவர் தங்கியிருந்த தனியார் ஓட்டல் முதல் விமான நிலையம் வரை வழிநெடுகிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட புதிய முனையத்தில், பயணிகள் தங்கும் ஓய்வறை இல்லாமலிருந்தது. ஓய்வறைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டதில், டெண்டரை எடுத்த அதானிக்கு சொந்தமான பெங்களூரு ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், "ஒவேட்ரா' என்ற பெயரில் எக்சிகியூட்டிவ் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கான ஓய்வறைகளை கட்டிக்கொண்டி ருக்கிறது. தற்போது திருச்சி வந்த பிரதமர் மோடி, அந்த ஓய்வறையை ஆன்லைன் மூலமாக (launch) திறந்துவைத்தார். விமான நிலைய ஒப்பந்தப் பணிகள், அதானி குழுமத்தின் கைகளுக்குச் சென்றிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.