தமிழகத்திற்கு உலக அளவி லான தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக இரண்டு வார அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் வர் ஸ்டாலின், தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை அள்ளிக் குவித்து வருகிறார். இதற்காக பிரபலமான அமெரிக்க நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.
சென்னையிலிருந்து 27-ந்தேதி புறப்பட்டு அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ நகரத்துக்குச் சென்றடைந்த ஸ்டாலினுக்கு, அந்த நகரத்தின் இந்திய துணைத்தூதர் ஸ்ரீகர்ரெட்டி, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் ஆகியோர் மலர்க்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-in-US.jpg)
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி செயலாள ரும், வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியத் தின் தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமையில் அமெரிக்கவாழ் தமிழர்கள் ஏர்போர்ட்டுக்கு திரண்டு வந்து உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர்.
தமிழர்களின் வரவேற்பில் பூரித்த தோடு அவர்களின் நலம் விசாரித்தார் ஸ்டாலின். அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிய அவர், "வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான ஆதரவைத் திரட்ட வந்திருக்கிறேன்''’என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-in-US1.jpg)
இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, முதல்வரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு ஐ.ஏ.எஸ்., மற்றும் முதல்வரின் தனி உதவியாளர் தினேஷ் ஆகியோர் சென்றிருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், சிலமணி நேர ஓய்வுக்குப்பிறகு, சான்பிரான் சிஸ்கோ நகரில் மறு நாள் (29-ந்தேதி) நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகளுடன் விவாதித் தார். மாநாட்டில் கலந்துகொள்ளவரும் தொழிலதிபர்கள் குறித்த விபரங்களையும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.
முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அந்த நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எனது தந்தை கலைஞரைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். இந்திய பிரதமர் பலரை உருவாக்கியவர். அப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரரான கலைஞர் 1971-ல் முதலமைச்சராக அமெரிக்காவுக்கு வந்தார். இப்போது நான் வந்திருக்கிறேன். நிலையான வளர்ச்சி, சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி ஆகிய இலக்குகளை உறுதிப்படுத்தும் வகையில் தொழில் வளர்ச்சி மையங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. மனித வளங்கள் மற்றும் திறன்கள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்குமான தொழில்ரீதியான உறவு எப்போதுமே வலிமையாக இருந்து வருகிறது. உலகளாவிய திறன் மையங்கள், சேவை மையங்கள், உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகிய துறைகளில் 300-க்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-in-US2.jpg)
குறிப்பாக, கேட்டர்பில்லர், ஃபோர்டு, காக்னிசண்ட், பேபால், சான்மினா, ஹனிவெல், குவால்காம், ஹெச்.பி., அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஃபைசர், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், விஸ்டியான் போன்ற நிறுவனங்கள் தங்களது திட்டங்களை தமிழகத்தில் நிறுவி வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதோடு தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. அந்த வரிசையில் இன்னும் பல நிறுவனங்கள் வரவேண்டும்.
தமிழகத்தின் முன்னேற்றப் பயணத்தில் பதிலளிக்கக்கூடிய துறைகளைப் பற்றி விவாதிக்க, அமெரிக்காவின் பெருந்திட்டங்களின் தலைவர் களை ஒரு பொதுமேடையில் கொண்டு வருவதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கான வழிகளை கண்டறியவும் இந்த மாநாடு உதவும்.
நவீன உள்கட்டமைப்பு, ஏராளமான வளங்கள், திறன்மிகு பணியாளர்கள் ஆகியவற்றால் உலக முதலீட்டாளர்கள் அதிகமாக ஈர்க்கப்படு கிறார்கள். மக்களின் ஆற்றலை தமிழ்நாடு நன்கு பயன்படுத்துகிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், இளைஞர்கள் மற்றும் பணிபுரியும் வயதினரின் எண்ணிக்கை அதிகம். எதிர்கால வளர்ச்சிக்கு தனித்துவமான நன்மையை இது வழங்குகிறது. அதற்கேற்ப பல்வேறு முன்முயற்சி களை எடுத்து வருகிறோம்.
வருகிற 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இலட்சிய இலக்கு. அதை அடைவதற்கான மூலதனம் அதிகமுள்ள தொழில்களையும், வேலை வாய்ப்புகளை அதிகப் படுத்தும் தொழில்களையும் ஈர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த முயற்சிக்கு சாதகமான பலன்கள் கிடைத்து வருகிறது.
தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இதற்குத் தேவையான பல்வேறு தொழில் கொள் கைகளையும், சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களையும் வெளியிட்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளப்படும் நல்லுறவுகளின் மூலம் தான் தொழில் வளர்ச்சியடையும். இந்தியாவுட னான நல்லுறவை, தமிழ்நாட்டின் முன்னேற்றத் துக்கு அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். மனித வாழ்வில் உயர்ந்த நெறியை கொண்ட அமெரிக்க முதலீட்டாளர்களை, தமிழ் நாட்டின் தொழில் மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக் காக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறோம்''’என்றார் மிகஅழுத்தமாக.
மாநாட்டில் கலந்துகொண்ட முதலீட்டாளர் களுக்கு, தடம் எனும் பெட்டகத்தைப் பரிசளித்தார் ஸ்டாலின். தமிழகத்தின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறை சாற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தடம் எனும் திட்டம்.
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட அந்த தடம் பரிசுப் பெட்டகத்தில், நெல்லையில் உருவாகும் சுற்றுச்சூழல்களுக்கு உகந்த வாழைநார் கூடை, விழுப்புரத்தை சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள், நீலகிரியிலுள்ள எம்பிராய்டரி ஆடை, பவானி ஜமுக்காளம், புலிகாட்டின் பனை ஓலை ஸ்டேண்ட், கும்பகோணத்தின் பித்தளை விளக்கு ஆகியவை அதில் இருந்தன.
மாநாட்டின் இறுதியில், நோக்கியா, பேபால், மைக்ரோசிப் டெக்னாலஜி, ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், இன்பிங்க்ஸ் ஹெல்த்கேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன்மூலம் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதனையடுத்து மறுநாள்(30-ந்தேதி), ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து விரிவாக விவா தித்ததுடன் தமிழகத்தில் தொழில் தொடங்கக் கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளப்பட்டன.
அதேபோல, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர், யான்ரோஸ்லான்ஸ் கியுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின், டேட் டா சென்டர் விரிவாக்கம், க்ளோபல் கேபபிலிட்டி சென்டர், செயற்கை நுண்ணறிவு திறன்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவரித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலெக்ட் ரோலைசர், ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவற்றை செய்துவரும் பிரபல ஓமியம் நிறுவனத்துடன், 500 பேருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 400 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டது பற்றி பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,”"கூகுளுடன் கூட்டிணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களில், செயற்கை நுண்ணறிவு முயற்சிகளை கூகுள் நிறுவனம் ஆராயும். கூகுளுடனான எங்களின் கூட்டாண்மை, தமிழகத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான ஏ.ஐ. மற்றும் மேம்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான செயல்பாடாகும்''” என்றார்.
கூகுள் க்ளவுட் ப்ளாட்ஃபார்ம் தலைவர் அமித் ஐவேரி பேசும்போது, "செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் எதிர்காலத்தை நோக்கிய தமிழ்நாடு அரசுடனான பயணத்தில், ஏ.ஐ.யை உள்ளடக்கிய வளர்ச்சி, முன்னேற்றம், ஊக்குவிப்பு, புதுமைகளை செயலாக்குதல், வாய்ப்புகளை உருவாக்குதல், திறன்களைக் கொண்ட தனிநபர்களுக்கு அதிகாரம் ஆகியவற்றை கூகுள் முன்னெடுக்கும்''’என்றார் பெருமிதமாக.
சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னிய நிகழ்வுகளை முடித்துக்கொண்டு சிகாகோ நகருக்கு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 1 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழகம் அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து தொழில் வளர்ச்சிக்காக ஸ்டாலின் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் பலனாக முதலீடுகள் கணிசமாக வருகின்றன! ஆனால், இலக்கை எட்டமுடியுமா? என்கிற கேள்வி தமிழக தொழில் நிறுவனங்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/cm-in-us-t.jpg)