"கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டதே'’ என மக்களை வேதனையில் புலம்ப வைத்த அருவருப்பான சம்பவத்தை ஸ்ரீவில்லி புத்தூரில் அரங்கேற்றிவிட்டனர் சில அர்ச்சகர்கள்.

Advertisment

உலக அளவில் பிரசித்திபெற்ற ஆண்டாள் கோவிலுக்கு அடுத்தபடியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏராளமான பக்தர்களால் வழிபடக்கூடிய பெண் தெய்வம் பெரிய மாரியம்மன். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஜூலை 2ஆம் தேதி கும்பாபி ஷேகம் நடக்கவிருக்கிறது. கடந்த 16ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில் தான் அர்ச்சகர்களின் ஒழுங்கீனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டன. 

கைபேசியில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொலியில்.. அந்த அறையின் தொலைக்காட் சிப் பெட்டியில், பருத்திவீரன் திரைப்படப் பாட லான "ஊரோரம் புளியமரம்' பாடல் ஒளிபரப் பாகிக்கொண்டிருக்க.. சட்டை அணியாத அர்ச்ச கர்ககள் மூவர்,  இடுப்பில் உடுத்தியிருந்த காவி உடையை அவ்வப்போது அவிழ்ப்பதும் காட்டு வதுமாக, மதுபோதையில் உற்சாகமாக  ஆட் டம்போட, அக்காட்சியை இருவர் உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் ரசித்துப் பார்க்கின்றனர். இன்னொரு காணொலியில் கோவிலுக்கு வந்த ஒரு பக்தையின் முகத்தில் ஜன்னல் வழியாக  மொத்தமாக விபூதி வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது. அர்ச்சகர்கள் ஆபாச நடனம் ஆடிய  வீடியோவை  அக் கோவிலின் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரனின் மகன் சபரிநாதன் சமூக வலைத் தளங்களில் பரப்பிவிட்ட கொடுமையும் நடந்து விட்டது. ஆட்டம் போட்டவர்கள் தற்காலிகப் பணிபுரியும் அர்ச்சகர்கள்  கோமதி விநாயகம், கணேசன், வினோத் எனத் தெரியவர, அம்மூவரும் அக்கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்ட செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தலைமை அர்ச்சகர் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

iyer1

Advertisment

இது பழைய வீடியோ என்றும், அர்ச்சகர் பணியில் இருப்பவர்கள் நடவடிக்கைக்கு ஆளாகும்போது,

iyer2

மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற உள்நோக்கத்துடன் பரப்பப்பட் டுள்ளது என்கிறார்கள், அக்கோவில் வட்டாரத்தில்.

Advertisment

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலச் செயலாளர் லட்சுமி நம்மிடம், "அர்ச்ச கர் வேஷம் போட்டு, கோவிலுக்கு வரக்கூடிய  பக்தர்களை ஏமாற்றும் வேலை நடந்திருக்கிறது. அறநிலையத்துறை இதுபோன்ற அநாகரிக சம்பவங்கள் நடக்கவிடாமல் கண்காணிக்க வேண்டும், உரிய நடவடிக்கையும் எடுக்கவேண் டும்''’என்றார் வேதனையுடன்.  

கோவிலைப் புனிதமாகக் கருதுகிறார்கள் மக்கள். அர்ச்சகர் பணியோ, கோவிலைத் தூய்மையாக வைத்திருந்து, வழி பாட்டிற்குரிய சூழலை அங்கு உருவாக்கி, தெய்வத்தின் அருளை பக்தர்களுக்கு வழங்குவதாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்திருப்பது கொடுமை அல்லவா?