னைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற் கான சட்ட மசோதாவை, தந்தை பெரியா வின் விருப்பப்படி 1970-ல் சட்ட மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார் அன்றைய முதல்வரான கலைஞர்.

அதன்பின் இந்தத் திட்டம் பல எதிர்ப்புகளையும், பல வழக்குகளையும் எதிர்கொண்டது. இருப்பினும் 2006 ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, தி.மு.க. அரசு, இதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

dd

எனினும் அது சாத்தியமாக இத்தனை வரு டங்கள் உருள வேண்டி இருந் தது. இதற்கிடை யே நடந்தவை களை மேலோட் டமாகப் பார்க்க லாம்.

Advertisment

அந்த அர சாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அது, அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட் டம், பயிற்சிக் காலம், கோவில் களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது.

இதன்படி, சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்ச கர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் உரு வாக்கப்பட்டன.

அவர்களுக் கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அடுத்த 13 மாதங் களில் தமிழ் மந்தி ரங்கள், பூஜை முறைகள், கோவில் களின் பழக்க வழங்கங்கள் ஆகி யவை தொடர்ந்து கற்பிக்கப்பட்டன. அதன்பின் 2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர் களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில், அதே முறைப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்ச கர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப் படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித் தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்' அது தனது தீர்ப்பில் தெரிவித்தது.

Advertisment

ss

இந்நிலையில் தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு இந்து சமய அற நிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பத் தைந்து வயதுக்கு உட்பட்ட நபரை அர்ச்ச கராக நியமிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிசைவ சிவாச்சார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இது குறித்து பதில் அளித்த அரசுத் தரப்பு, உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து, அதன் பிறகே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கான இறுதித் தீர்ப்பு வெளியானது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் அரசு வெளியிட்ட விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங் கியது. அதனை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 2022-2023 திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை உற்சாகத்தோடு வழங்கினார்.

திருச்சி -ஸ்ரீரங்கத்தில் 22 பேர் பயிற்சி பெற்றிருந்தனர். அதில் தமிழகத்தில் முதல் முறையாக 3 பெண்கள் அர்ச்சகர்களாக பயிற்சி முடித்துள்ளனர். இது குறித்து அனுபவங்களை அறிய, நாம் பயிற்சி முடித்த பெண்களை சந்தித்தோம். அப்போது...

ss

பெண் அர்ச்சகரான கிருஷ்ணவேணி, நம் மிடம் “"எனக்கு சொந்த ஊர் கடலூர் மாவட் டம் மேல ஆதனூர். திட்டக்குடி தாலுக்காவில் வசித்து வருகிறோம். விவசாயம் தான் பிரதான தொழில். வீட்டிற்கு நான் மூத்த மகள். எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். நான் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்துள்ளேன். எனக்கு கடவுள் பக்தி அதிகம். அதிலும் பெருமாள் மீது எனக்கு பக்தி அதிகம். இருப்பினும் எனக்கு இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஓராண்டு காலம் பயிற்சி பெற்றோம். எங்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் அனைத்து மந்திரங்களையும், வேதங்களையும் கற்றுக் கொடுத்தனர். எங்களுடன் பயிற்சி பெற்ற ஆண்களும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் எங்களை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர். இந்தத் திட்டத்தை கொண்டுவந்த கலைஞருக்கும், அதை இன்றுவரை செயல் படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்''’என்றார் உற்சாகமாக.

அர்ச்சகர் ரஞ்சிதாவோ’"எனக்கு சொந்த ஊர் திருவாரூர். கலைஞர் பிறந்த ஊரில் இருந்து நான் பயிற்சி பெற சென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. நான் பி.எஸ்.சி விஸ்காம் படிச்சிருக்கேன். நான் படித்த படிப்புக்கும், நான் செய்யப் போகும் வேலைக் கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று யோசித்துக்கூட பார்த்தது இல்லை. அப்பா நடராஜன் விவசாயத்தை நம்பி இருக்கிறவர். ஆனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. கொஞ்சம் சிரமப்பட்டு தான் பயிற்சி பெற்றோம். வேதங்கள், மந்திரங்கள் எல்லாம் சுந்தர் பட்டர் எங்களுக்கு நிதானமாகக் கற்றுக்கொடுத்தார். பெண்கள் கருவறைக்குள் செல்ல தடை இருக்கும் நிலையில், நாங்கள் கருவறைக்குள் நுழைந்து மந்திரங்கள் ஓத எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. கடவுளுக்கு சேவை செய்வது எல்லாருக்கும் கிடைத்துவிடாது'' என்றவர், கலைஞருக்கும் இன்றைய முதல்வருக்கும் நன்றி சொல்லிப் பூரித்தார்.

dd

அடுத்து நாம் சந்தித்த அர்ச்சகர் ரம்யா "எனக்கு சொந்த ஊர் கடலூர், திட்டக்குடி தாலுக்கா, மேல ஆதனூர். அப்பா, அம்மா கூலி வேலைக்கு போறாங்க. நான் எம்.எஸ்.சி கணிதம் படிச்சிருக்கேன். எங்க ஊர்ல இருக்கிற அரசு கல்லூரியில் தான் படிச்சேன். இந்த பயிற்சிக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். என்னுடைய கனவு நிறைவேறியது. என்னு டைய அம்மா, அப்பாவுக்கும் இதில் மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல் என்னுடைய ஊரில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி தான். நான் என்னு டைய சேவையை கோவிலுக் கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் செய்வேன். பெண் அர்ச்சகர்களான நாங்கள் 3 பேரும், தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகர்கள் என்ற பெருமையைப் பெற்றிருக் கிறோம். எங்களைப் போன்று இனிவரும் காலங்களில் பயிற்சி பெற விரும்பி வரும் பெண்களுக்கு நாங்கள் முன் உதாரணம்' ’என்றார் பெருமிதமாக.

இவர்களுக்கு பயிற்சியளித்த சுந்தர்பட்டர் என்ன நினைக்கிறார்? அவரிடமும் பேசினோம்.

அப்போது அவர், "“இன்றைய காலகட்டத் தில் ஆண்களும், பெண்களும் எத்தனையோ தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முன்வந்தவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற வர்களுக்கு பயிற்சி அளித்து வேதங்களையும், மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தவர்கள் எப்படி எங்களை வழிநடத்தினார்களோ அதே போல் தான் என்னிடம் பயிற்சி பெற்றவர்களை யும் நான் வழிநடத்தினேன். பல எதிர்ப்புகள் எனக்கு வந்தது. ஆனால் கடவுள் முன்பு எல் லோரும் சமம், அதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். இருப்பினும் பல எதிர்ப்புகளையும், பிரச்சனைகளையும் மீறி அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அனை வரும் மிகச் சிறப்பாகப் பயிற்சி பெற்றுள்ளனர்'' என்றார் மகிழ்ச்சிப் பெருக்கோடு.

திங்கட்கிழமை, அமைச்சர் உதயநிதி மூன்று அர்ச்சகர் பெண்களை அழைத்து பாராட்டி, அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் ஒரு ஸ்மார்ட் போனும் வழங்கி பாராட்டினார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். இதற்கிடையே, ஓராண்டு மட்டும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் களை அங்கீகரிக்க கூடாது என்றும், 3 ஆண்டுகள் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்களுக்குத் தகுதி யானவர்கள் என்றும் ஒரு வழக்கு தற் போது நீதிமன்றம் சென்றிருக்கிறது.

எது எப்படியோ, தந்தை பெரியாரின் கனவை தி.மு.க. ஆட்சி கண்முன் நனவாக்கி இருக்கிறது ’என்று மகிழ்கிறார்கள் பக்தர்கள்.