Advertisment

அர்ச்சகர் - காதலியின் கூடா உறவால் கோவிலுக்குள் கொலை!

tt

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ளது வி.ஆண்டிக்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, வயது 29. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இவரைப் போலவே மனைவியைப் பிரிந்து வாழ்ந்த, பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கூடிக்குலாவி கூடா உறவை வளர்த்துக் கொண்டதோடு, வி.ஆண்டிக்குப்பத்தில் குடும்பம் நடத்தத் தொடங்கினர்.

Advertisment

te

இந்த நிலையில்தான், கடந்த 12ந் தேதி பண்ருட்டியில் மளிகைக் கடைக்கு வேலைக் குச் சென்ற கண்ணதாசன் வீடு திரும்பவில்லை என மஞ்சுளா பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷ னில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசார ணையைத் தொடங்கினர். இதில், கண்ணதாசன், மஞ்சுளா ஆகியோ ரின் செல்போன் எண்களை வாங்கி ஆராய்ந்த போதுதான், இதே ஊரில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகரான கோபிநாத்துடன், மஞ்சுளா அளவுக்கதிமாக பேசியிருப்பது போலீசா ருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இதுபற்றி கூடு

இதுபற்றி கூடுதலாக விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது, வேணு கோபால சுவாமி கோவிலில் அர்ச்சகரான கோபிநாத்(58), வீட்டில் மஞ்சுளா வேலை பார்த்து வந்துள்ளார். கோபிநாத் அர்ச்சக ராக இருப்பதோடு, கோவில் வளாகத் திலேயே ஜோதிடராகவும் செயல்பட்டி ருக்கிறார். திரைப் பிரபலங்கள், தொழிலதி பர்கள் மட்டுமின்றி, தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இவரது அப்பாயின் மெண்ட்டிற்காக காத்திருக்கும் அளவுக்கு பிரபலம். அர்ச்சகர் கோபிநாத் வீட்டில் வேலைகளைப் பார்த்துக் கொள்வதோடு, அவரது உதவியாளராகவும் மஞ்சுளா செயல்பட்டுள்ளார். வீட்டுவேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும், அர்ச்சகர் கோபிநாத்துடன் எந்நேரமும் செல்போனில் பேசியிருக்கிறார். இதனால், கண்ணதாசனுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் மஞ்சுளா தன்போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் அர்ச்சகர் கோபிநாத்தின் வீட்டுக்கே சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் கண்ணதாசன். கர்ப்ப கிரகத்தில் பூஜைசெய்யும் கிழவனுக்கு, கள்ளக்காதல் ஒரு கேடா என தனக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பை ஊருக்கு முன்னால் பகிரங்கமாக பேசியதோடு, தனது இமேஜை டேமேஜ் செய்த கண்ணதாசன்மீது அர்ச்சகர் கோபிநாத்துக்கு கடுங்கோபம் ஏற்பட்டிருக்கிறது.

tt

இதையடுத்து, கண்ணதாசனைத் தீர்த்துக் கட்ட அர்ச்சகரும், மஞ்சுளாவும் முடிவு செய்தனர். இதற்காக நாள் குறித்து, "கோவிலுக்கு வா, ஒண்ணா உட்கார்ந்து பேசிட்டோம்னா எல்லாம் சரியாகிடும்' என்று சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அழைப் பதுபோல், கண்ணதாசனை பவ்யமாக அழைத் திருக்கிறார் அர்ச்சகர் கோபிநாத். இதை நம்பி வேணுகோபால சுவாமி கோவிலுக்குச் சென்ற கண்ணதாசனை, அழையா மத்தியஸ்தர்களாக வந்த சிலரோடு சேர்ந்து மஞ்சுளாவும் இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார். கோவிலுக்குள்ளேயே அந்தக் கொடூரக்கொலை சத்தமில்லாமல் நடந்துமுடிந்தது.

கோவிலுக்குள் பூஜைப் பொருட்களை வைக்கும் அறையில், ஏற்கனவே கண்ணதாசனுக்காக தோண்டப்பட்ட ஏழடி ஆழக்குழியில், உடலை அமர்ந்த நிலையில் வைத்து, உப்பு மணல் மூட்டைகளை அடுக்கி, சிமெண்ட்டால் பூசி, அதன் மீது டைல்ஸ் கற்களைப் பதித்துள்ளனர். இப்படி புதைக்கப்பட்ட உடலை தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்துள்ளனர்.

21ந்தேதி இரவுக்கு மேல் தோண்டி எடுத்தது போலீசாரின் விசாரணையின் போக்கில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி பண்ருட்டி போலீசாரிடம் கேட்டபோது, ""பகலில் உடலை தோண்டியெடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கும். நள்ளிரவில் மீடியாக்களுக்கு தெரியாமல் தோண்டி எடுத்தோம். மற்றபடி, சட்டப்படி எல்லாமே நடக்கிறது'' என்றனர்.

இந்தக் கொலைக்காக ஆயத்தமாகி, கோவிலுக்குள்ளேயே கண்ணதாசனை கொன்று புதைக்க முன்கூட்டியே திட்டம் தீட்டியிருக்கிறார் அர்ச்சகர் கோபிநாத். குழிக்கான நோக்கமே தெரியாமல், அதைத் தோண்டிய தொழிலாளர்கள், கோவில் அறைக்குள் இவ்வளவு பெரிய குழி எதற்காக என கேட்டுள்ளனர். அதற்கு அர்ச்சகர் கோபிநாத்தோ, ""ஊரே கொரோனா அச்சத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில் கடவுளின் அனுக்ரகம் கிடைத்தால் நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கலாம். விக்கிரகத்தை இந்தப் பள்ளத்தில் போட்டு மூடிவிட்டால் பண்ருட்டியில் கொரோனா படிப்படியாக குறையும்'' என்று நம்பவைத்து வேலை வாங்கியிருக்கிறார். அவர்களும் உற்சாகமாக குழியைத் தோண்டியுள்ளனர்.

இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியிலும் கசிந்ததால், நல்ல நோக்கத்திற்காக அர்ச்சகர் உழைக் கிறார் என்றும் பேசப்பட்டிருக்கிறது. அதேசமயம், கோவிலுக்குள் உடலைப் புதைப்பது மற்ற இடத் தைக் காட்டிலும் பாதுகாப்பானது. கடவுள் நம்பிக் கையை சாக்காக வைத்து தப்பித்துவிடலாம். தனது இச்சைக்கு இடையூறாக இருந்தவனைத் தீர்த்துக் கட்டியதால், மஞ்சுளாவும் இனி நமக்குதான் என அர்ச்சகர் போட்டு வைத்திருந்த கணக்கு தப்பாகிப் போனது. மஞ்சுளா, கோபிநாத்தைப் போல, இதில் தொடர்புடையை மற்றவர்களைக் கைதுசெய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவிலுக்குள் உயிர்பலி கூடாதென்று ஆகமவிதியைக் காட்டுகிறார்கள். இங்கு அர்ச்சகர் ஒருவரே கொலை செய்து, உடலை கோவில் வளாகத்திலேயே புதைத்திருக்கிறார். மனிதன் வகுத்த விதிகளை, மனித மிருகங்கள் மீறுகின்றன.

-எஸ்.பி.சேகர்

nkn290820
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe