Advertisment

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகை சங்கம்!

dd

சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், உயர்நீதி மன்றத்தில் இருந்தபடி செய்தி களை வழங்கிவரும் நிலையில், அவர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் ந

சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், உயர்நீதி மன்றத்தில் இருந்தபடி செய்தி களை வழங்கிவரும் நிலையில், அவர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர் சங்கம்' என பெயரிடப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட இந்த சங்கத்தை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்வில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர் .மகாதேவன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய- மாநில அரசு வழக்கறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Advertisment

ff

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நிறு வனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.சுப்ரமணி தலைவராகவும், சன் டி.வி. குழுமத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் டி.ரமேஷ்குமார் செயலாளராகவும், தினகரன் நிருபர் வில்சன் ஆசிர்வாதமும் கலைஞர் டி.வி. நிருபர் ராம்ஜியும் துணைத் தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளனர். பாலிமர் டி.வி.யின் கே. அனந்தகுமார் பொருளாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "ஊடகங்களும் லட்சுமண ரேகையும்' என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றினார். அதில், "ஜன நாயகத்தில் பத்திரிகைகள் முக்கியமானவை. அரசியல் சாசனத்தின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமே பத்திரிகை சுதந்திரம் என்று குறிப்பிட்டார். பத்திரிகைகள் தங்கள் வரம்பை மீறாமல் பொறுப்புடன் செயல் பட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

"ஊடக விசாரணை என்ற பெயரில் ஒருவர்மீது குற்றம் சாட்டி, பின் நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப் படும்போது அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்ட முடியாது'' என்று பொறுப்பு தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனநாயகத்தில் நான்கு தூண்கள் மட்டுமே உள்ளன. அதில் 4-வது தூண்தான் ஊடகங்கள். இந்திய அரசியல் அமைப்பில் 19-வது சரத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அடிப்படையில் ஊடகங்கள் நான்காவது தூணாக கருதப் படுகிறது. அதனால் பத்திரிகை கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

nkn220323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe