Advertisment

ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு! பா.ஜ.க.வுக்கு பலத்தைக் காட்டிய எடப்பாடி!

ss

.பி.எஸ்.சுடன் இனி சமாதானத்துக்கு இடமில்லை என்பதில் கறாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தன்னை ஆதரிக்க மறுக்கும் பா.ஜ.க. தலைமைக்கு, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தனது செல்வாக்கை உணர்த்தியிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்.

Advertisment

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, கூட்டணியிலுள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெற தமிழகம் வந்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள தாஜ் ஹோட்டலில் செய்திருந்தது தமிழக பா.ஜ.க.

Advertisment

dd

அ.தி.மு.க.வில் நடந்துவரும் அதிகாரச் சண்டையால் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் இணைந்து வருவார்களா? தனி ஆவர்த்தனம் நடத்துவார்களா? என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. வில் எதிரொலித்த நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், எம்.பி.க்கள் 2 பேர் உள்பட தனது ஆதரவாளர்களுடன் ஹோட்டலுக்கு வந் தார் ஓ.பி.எஸ். அவர்களை வரவேற்று ஒரு அறை யில் இருக்க வைத்தார் பா.ஜ.க. அண்ணாமலை.

திரௌபதி ஆதரவு கேட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்துக்குள் ஓ.பி.எஸ்.ஸை அழைத்துச் செல்லவில்லை பா.ஜ.க. ஹோட்ட லுக்கு ஓ.பி.எஸ். வந்துவிட்டார் என்பதையறிந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் (63), எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்களின் படை சூழ ஹோட்ட லுக்கு வந்த எடப்பாடியை வரவேற்ற பா.ஜ.க. தலைவர்கள், அரங்கத்துக்குள் அவர்களை அழைத்துச் சென்று அமரவைத்தனர். இதனைத் தொடர்ந்து அரங்கத்துக்குள் வந்த திரௌபதி முர்முக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி

.பி.எஸ்.சுடன் இனி சமாதானத்துக்கு இடமில்லை என்பதில் கறாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தன்னை ஆதரிக்க மறுக்கும் பா.ஜ.க. தலைமைக்கு, ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தனது செல்வாக்கை உணர்த்தியிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்.

Advertisment

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, கூட்டணியிலுள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெற தமிழகம் வந்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள தாஜ் ஹோட்டலில் செய்திருந்தது தமிழக பா.ஜ.க.

Advertisment

dd

அ.தி.மு.க.வில் நடந்துவரும் அதிகாரச் சண்டையால் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் இணைந்து வருவார்களா? தனி ஆவர்த்தனம் நடத்துவார்களா? என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. வில் எதிரொலித்த நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், எம்.பி.க்கள் 2 பேர் உள்பட தனது ஆதரவாளர்களுடன் ஹோட்டலுக்கு வந் தார் ஓ.பி.எஸ். அவர்களை வரவேற்று ஒரு அறை யில் இருக்க வைத்தார் பா.ஜ.க. அண்ணாமலை.

திரௌபதி ஆதரவு கேட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கத்துக்குள் ஓ.பி.எஸ்.ஸை அழைத்துச் செல்லவில்லை பா.ஜ.க. ஹோட்ட லுக்கு ஓ.பி.எஸ். வந்துவிட்டார் என்பதையறிந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் (63), எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்களின் படை சூழ ஹோட்ட லுக்கு வந்த எடப்பாடியை வரவேற்ற பா.ஜ.க. தலைவர்கள், அரங்கத்துக்குள் அவர்களை அழைத்துச் சென்று அமரவைத்தனர். இதனைத் தொடர்ந்து அரங்கத்துக்குள் வந்த திரௌபதி முர்முக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசினார் திரௌபதி. அவர் பேசி முடித்ததும் அரங்கத்தைவிட்டு எடப்பாடி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர். இதனை அடுத்து அறையிலிருந்து அரங்கத்து வரவழைக்கப் பட்ட ஓ.பி.எஸ்., மேடையேறி திரௌபதிக்கு ஆதரவை தெரிவித்துவிட்டு பேசிய அவர், அ.தி. மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்பதை பதிவு செய்துவிட்டுக் கிளம்பினார். இப்படி தனித்தனியாக ஆதரவு தெரிவித்த கூத்துகளை திகைத்தபடி கவனித்திருந்தார் திரௌபதி.

இந்த நிகழ்ச்சி குறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் பா.ஜ.க. எதிர்ப்பாளருமான ஒருவரிடம் நாம் பேசியபோது,’"இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரையும் வைத்து கேம் ஆடுகிறது பா.ஜ.க. இருப்பினும் திரௌபதி ஓட்டு கேட்கும் நிகழ்வில் இருவரும் இணைந்தே வரவேண்டும் என விரும்பிய பா.ஜ.க. தலைமை, அண்ணாமலை மூலமாக அதனை இருவரிடமும் சொல்ல வைத்தது. ஓ.பி.எஸ்.ஸோ, "எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை' என சொல்லியிருக்கிறார். ஆனால் எடப் பாடியோ, "அவருடன் இணைந்து என்னால் நிற்கமுடி யாது. நாங்கள் இருக்கும் நிகழ்வில் அவர் (ஓ.பி.எஸ்.) வந்தால், நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் எழுந்து சென்று விடுவோம். அவரை எங்கள் எம்.எல்.ஏ..க் கள் விரும்பவில்லை. இதைத் தவிர்த்து நாங்கள் இருக்கும் நிகழ்வில் அவர் வந்தால், அவருக்கு எதிராக எங்கள் எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டால் நிகழ்ச்சி ஆரோக்கியமாக இருக்காது. அதற்கு நானும் பொறுப்பாகமாட்டேன். மற்றதை நீங்க முடிவு பண்ணிக்கோங்க' என ஓ.பி.எஸ். எதிர்ப்பை பா.ஜ.க.விடம் தெரிவித்தார்.

ee

இதனால் நொந்துபோன அண்ணாமலை, ஓ.பி.எஸ்.ஸிடம் நிலைமையைச் சொல்லி, அவர்கள் வந்துவிட்டுப் போகும்வரை அறையில் இருங்கள் எனச் சொல்ல, அதனை ஓ.பி.எஸ். ஏற்க வேண்டியிருந்தது. அ.தி.மு.க.வும் எம்.எல்.ஏ.க்களும் தன் பக்கம்தான் இருப்பதை இந்த நிகழ்வின் மூலம் பா.ஜ.க. தலைமைக்கு உணர்த்த விரும்பிய எடப்பாடி, அதனைச் சாதித்திருக்கிறார் என்கிறார் எடப்பாடியின் அரசியலை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்த மூத்த தலைவர். எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் நாம் பேசியபோதும் இதே கருத்துக்களே வெளிப்பட்டன. ஆனால், எடப்பாடியின் இந்த அரசியலை பா.ஜ.க.வின் தேசியத் தலைமை ரசிக்கவில்லை என்கிறது தமிழக பா.ஜ.க. தரப்பு.

புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து திரௌபதிக்கு ஏர்போர்ட்டில் அசத்தலான வரவேற்பு தந்தது பா.ஜ.க. தாஜ் ஹோட்டலுக்கு வந்த அவர், சற்று ஓய்வெடுத்தார். அப்போது அவரைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர்களிடம், நிகழ்ச்சியைப் பற்றி விசாரிக்க, அ.தி.மு.க.வில் நடக்கும் கருத்து வேறுபாடுகளை அவரிடம் விவரித்திருக்கிறார்கள் பா.ஜ.க.வினர். இந்த உள்ளூர் அரசியலை அறிந்துகொண்டதால், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்ததை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததை அறிந்து, திரௌபதியை தொடர்புகொண்ட பிரதமர் மோடி, தமிழகப் பயணத்தை விசாரித்துள்ளார்.

அவரிடம், ”"தமிழக பா.ஜ.க.வினர் நிகழ்ச்சி யை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய ஜன நாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து வந்து ஆதரவு தெரிவிக்க வைத்தது மன நிறைவாக இருந்தது. இது கூட்டணியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்''’என்று தனது மன உணர்வை மோடியிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் திரௌபதி.

காங்கிரஸ், தி.மு.க. உள்பட 22 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஸ்வந்த்சின்ஹா சென்னை வந்திருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது தி.மு.க. சின்ஹா, வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைக்கவில்லை தி.மு.க. ( விதிவிலக்காக வைகோ மட்டும் அழைக்கப்பட்டிருந்தார். அழகிரியும் திருமாவும் யஸ்வந்த் சின்ஹாவை ஹோட்டலில் தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்). மாறாக, கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை தி.மு.க. அழைத்திருந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்பட வில்லை. இதனைக் கண்டு யஸ்வந்த் சின்ஹா வருத் தப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் எதிரொலிக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள், ‘’ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்ட போது தி.மு.க.வின் ஆதரவு கேட்டு சென்னைக்கு வந்த அவருக்கு அடையாறு கேட் ஹோட்டலில் அன்றைக்கு பிரமாண்டமான வரவேற்பு தந்தார் கலைஞர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் என அனைவரும் வந்திருந்தனர். அந்த பிரமாண்டத் தைக் கண்டு உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் பிரணாப். கலைஞரை ஆரத்தழுவி தனது நன்றியை தெரிவித்தார். கலைஞர் கொடுத்த பிரமாண்டத்தை அன்றைக்கு சோனியாவிடம் சொல்லி நெகிழ்ந்தார் பிரணாப். அப்படி ஒரு மாஸ் பிரமாண்டத்தை யஸ்வந்த் சின்ஹாவுக்கும் தி.மு.க. கொடுக்கும் என எதிர்பார்த்த காங்கிரஸ் தலைமைக்கு, நிகழ்ச்சி மிக சிம்பிளாக முடிந்ததை கண்டு அதிர்ச்சிதான். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 155 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் அழைத்து தி.மு.க. ஒரு மாஸ் காட்டி யிருக்க வேண்டாமா?” என்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகப் பயணத்தை முடித்த தும் சோனியாவிடம் பேசிய யஸ்வந்த் சின்ஹா, தி.மு.க. நமக்கு ஆதரவு கொடுக்கிறது; ஆனால், அதனை முழுமையாக, மனநிறைவாக தருகிறார்களா? என தெரியவில்லை. நான் எதிர்பார்த்தது வேறு ; நடந்தது வேறு என சோனியாகாந்தியிடம் வருத்தப் பட்டுள்ளார் என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதியின் வெற்றி உறுதிசெய்யப் பட்டதாக இருக்கிறது. ஆனால், இது மட்டும் போதாது என மோடியும் அமீத்சாவும் நினைக் கிறார்களாம். அதாவது, திரௌபதியின் வெற்றிக் காக தற்போது வரை 55 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், சுமார் 70 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் திரௌபதி ஜெயிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார் களாம். அதனால், எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பெற மறைமுக காய்நகர்த்தல்களை செய்து வருகிறது பா.ஜ.க. தலைமை! தங்களின் கட்சி தலைமையோடு முரண்பட்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வளைத்து, அவர்களை பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சியை இந்தியா முழுவதும் திரைமறைவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.

தமிழகத்திலும் இந்த காய்நகர்த்தல்கள் ஊடுருவியுள்ளன. இதனால், ஜனாதிபதி தேர்தலில் கிராஸ் ஓட்டுகள் அதிகரிக்கும். இந்த கிராஸ் ஓட்டுக்காக பாஜகவுக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர்கள் தரப்பு களமிறங்கியுள்ளது என்கின்றன உளவு வட்டாரங்கள்.

nkn060722
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe