களமிறங்கும் பிரேமலதா-கௌதமி விருதுநகர் மாவட்ட விறுவிறு!

vv

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகள் மீது, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் உள்ள பெண் வி.ஐ.பி.க்கள் இருவர் குறிவைத்துள்ளனர். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகர் தொகுதியையும், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரான நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியையும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகக் கருதுவதால், அவ்விரு கட்சிகளின் சார்பில், அ.தி.மு.க. தலைமையிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vv

விருதுநகரில் கட்சிக் கட்டமைப்பு என்பது தே.மு.தி.க.வுக்கு வலுவாக உள்ளது. அதனால்தான், 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராகப் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனால் எம்.எல்.ஏ. ஆக முடிந்தது. தெலுங்கு பேசும் நாயுடு சமுதாய வாக்குகள் கணிசமாக இருப்பதாலேயே, சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், 2006-ல் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வரதராஜன் போன்றோர் வெற்றிபெற்றுள்ளனர். இத்தொகுதியின் தட்பவெப் பம் அறிந்து, விருதுநகர் மேற்கு மாவட்ட தே.மு. தி.க., "அண்ணியார்’ விருதுநகரில் போட்டியிட வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விருதுநகர் தொகுதிய

விருதுநகர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. தரப்பிலும் கடும் போட்டி நிலவுகிறது. அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளான எஸ்.ஆர்.விஜயகுமரன், எஸ்.எஸ்.கதிரவன், கோகுலம் தங்கராஜ் ஆகியோர், ‘"எனக்கே சீட்'’ என்று முனைப்பு காட்டிவரும் நிலையில், யாருக்கு சீட் கொடுத்தாலும், "இப்படிப் பண்ணிட் டீங்களே...'’ என்று, விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜியை மண்டை காய வைப்பார்கள். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கிவிட்டால், ஆளும்கட்சியின ரிடம் இருந்து புகைச்சல் கிளம்பாது என்பது, தே.மு.தி.க.வுக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, தன்னுடைய இந்துமதப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாக, ""நானே பி.ஜே.பி.தான்.. பிறகு எதற்காக பி.ஜே.பி.க்கென்று இன்னொரு சீட்''’ என்று சிரித்திருக் கிறார் ராஜேந்திர பாலாஜி. அவ ருக்கும் எந்தத் தொகுதியில் நிற்கலாம் என்றொரு குழப்பம் தற்போது இருக்கிறது. கடந்த 10 வருடங்களில், அமைச்சராக, ஒரு எம்.எல்.ஏ.வாக, சிவகாசி தொகுதிக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று சாதனை புத்தகம் வெளியிடக்கூட, அவர் தயாராகி வருகிறார். ஆனாலும், குறிப்பிட்ட சாதியினரில் சிலர் பண்ணும் உள்ளடி வேலைகள், ""அமைச்சரால் பலனடைந்தது 10 சதவீதம் பேர்தானே! மீத 90 சதவீதம் பேருக்கு என்ன செய்துவிட்டார்?''’என கட்சியினரிடம் எழும் கேள்வியும், பொறாமையும் பாதகமாக இருப்பதால், சிவகாசியைக் காட்டிலும் பாதுகாப்பான தொகுதியாக அவருடைய கண்ணுக்கு ராஜபாளையம் தெரிகிறது. அதனால், கடந்த சில மாதங்களாக அந்தத் தொகுதியையும் தீவிரமாக ‘கவனித்து வருகிறார். இந்த நிலையில், ராஜபாளையத்தில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து, "பா.ஜ.க. வேட்பாளர் நானே'’ என்று களத்தில் குதித்திருக்கிறார் நடிகை கவுதமி. vvகடந்த தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு விழுந்த வாக்குகளின் அடிப்படையில், இந்தத் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்கள் கணிசமாக உள்ளதாக நம்பப்படுகிறது.

விருதுநகரையும், ராஜபாளையத்தையும் தே.மு.தி.க.வும், பா.ஜ.க.வும் கேட்டுவரும் நிலையில்... இம்மாவட்டத்திலுள்ள திருச்சுழி தொகுதியை, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவதே சரியாக இருக்கும் என்றொரு கணக்கு, அ.தி.மு.க. தலைமையிடம் இருக்கிறது. ஏனென்றால், இத்தொகுதியில், சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மக்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சி, ‘ஸ்ட்ராங்காக மண்ணின் மைந்தராக இருந்து வருவதுதான். ஆனாலும், கடந்த 2016-ல் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தினேஷ்பாபு, ஜாதி செல்வாக்கு உள்ளவர் என்பதால், இந்தத் தடவையும் சீட் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

கட்சித் தலைமையின் வழிகாட்டுதலில், ராஜேந்திரபாலாஜியை முறைத்துக்கொண்டு, அவருக்கு அறவே வேண்டாதவராகி, ‘தொகுதியின் செல்லப்பிள்ளை’ என்று தனி ஆவர்த்தனம் செய்து வரும் சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? ராஜேந்திர பாலாஜியின் வட்டத்துக்குள்ளேயே சுழன்றுவரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனுக்கு சாத்தூரில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது, விடை தெரியாத கேள்வியாக உள்ளது. ""சுறுசுறுப்பான எம்.எல்.ஏ. என்று மக்களிடம் பெயரெடுத்திருக்கும் எனக்கு சீட் மறுக்கப் பட்டால், நான் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது...''’என்று ‘வீரதீர’ வசனம் பேசிவரும் ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜியால் தேர்தல் களத்திலிருந்து விரட்டப்பட்டால், சாத்தூரை மட்டுமல்லாது, சிவகாசி தொகுதி யையும் பதம்பார்த்துவிடுவார் என்ற பேச்சு நிலவுகிறது.

அருப்புக்கோட்டையில், தேவையற்ற எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளாராம், சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேவாங்கர், நாடார், சாலியர் சமுதாயமெல்லாம் அண்ணாச்சியின் கைங்கர்யத்தால் பிளவுபட்டுள்ளது. தன் பேச்சுக்குத் தலையாட்டும் குறிப்பிட்ட மூவரை மட்டுமே பக்கத்தில் வைத்திருக்கிறார். ஒரிஜினல் தி.மு.க.வினரை அண்ட விடவே மாட்டார்.

முன்பெல்லாம், நகர்மன்றத் தலைவரென்றால், ஒருதடவை தேவாங்க செட்டியார் என்றால் மறுதடவை சாலியருக்கு அந்த வாய்ப்பு தரப்படும். எழுதப்படாத அந்த நடைமுறையை, தன் இஷ்டத்துக்கு மாற்றிவிட்டார். நகரச் செயலாளர் பொறுப்பும்கூட அப்படித்தான் கை மாறிப்போனது.’ என்று தொகுதியில் பரவலாக விமர்சிக்கப் பட்டாலும், ஆளுமை மிக்க தி.மு.க. வேட்பாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். மட்டுமே தெரிகிறார். “

இதெல்லாம் "முன்பு இருந்துச்சு... இப்ப எல்லா பிரச்சனையையும் சரி பண்ணியாச்சு...'’எனச் சொல்கிறார்கள், அண்ணாச்சி விசுவாசிகள். அவருக்கு எதிராக, அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வைகைச்செல்வன், ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், சேதுபதி போன்றோர் வரிசைகட்டி நிற்கின்றனர்.

மொத்தத்தில் விருதுநகர் மாவட்ட தேர்தல் களம், திகுதிகு’திருப்பங்களைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது.

nkn270221
இதையும் படியுங்கள்
Subscribe