கார் விபத்தில் கர்ப்பிணி பலி! கலெக்டர் மச்சினனை காப்பாற்றிய போலீஸ்!

accident

ந்த கர்ப்பிணிப்பெண் சுற்றும் முற்றும் கவனமாகப் பார்த்து விட்டுத்தான் சாலை யைக் கடந்தார். ஆனால்...?

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மகேஸ்வரனின் மனைவியான நிறை மாத கர்ப்பிணி சத்யப்ரியாவை, அவரது மாமியார் வள்ளி, இராமநாதபுரம் டவுனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, கடந்த 16-ஆம் தேதி அழைத்துச் சென்றார்.

accident

பரிசோதனை முடிந்து, இரவு பெருங்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ரோட்டைக் கடந்து வீட்டை நோக்கிச் சென்றபோது,

ந்த கர்ப்பிணிப்பெண் சுற்றும் முற்றும் கவனமாகப் பார்த்து விட்டுத்தான் சாலை யைக் கடந்தார். ஆனால்...?

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மகேஸ்வரனின் மனைவியான நிறை மாத கர்ப்பிணி சத்யப்ரியாவை, அவரது மாமியார் வள்ளி, இராமநாதபுரம் டவுனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, கடந்த 16-ஆம் தேதி அழைத்துச் சென்றார்.

accident

பரிசோதனை முடிந்து, இரவு பெருங்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ரோட்டைக் கடந்து வீட்டை நோக்கிச் சென்றபோது, இராமேஸ்வரத் தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த இன்னோவா கிரிஸ்டா கார் மோதியதில் சத்யப்ரியாவும் வள்ளியும் தூக்கி வீசப்பட்டனர். சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே சத்யப்ரியா மரணமடைந்தார். வயிற்றில் இருந்த ஆண் சிசுவும் பலியாகிவிட்டது. மாமியார் வள்ளி மதுரை அப்பல்லோவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

ஆந்திரா பதிவெண் கொண்ட அந்த காரின் டிரைவர் குறித்த விபரங்கள் தெரிய வில்லை. அவரைத் தேடிக்கொண்டிருப்பதாக போலீஸ் வெளியிட்ட அறிக்கையை பேப்பரில் படித்தவர்கள், தினசரி நடக்கும் சாலை விபத்தில் இதுவும் ஒன்று எனக் கடந்து சென்றனர். இராமநாதபுரம் எஸ்.பி. ஆபீசில் இருக்கும் நமது போலீஸ் சோர்ஸ் ஒருவர் சொன்ன தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.

’’""நவ. 14-ஆம் தேதிவரை இந்த மாவட்டத்தின் கலெக்டராக இருந்த வீரராகவ ராவ், வேலைவாய்ப்புத் துறை இயக்குனராக சென்னைக்கு மாற் றப்பட்டார். புதிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரி டம் 15-ஆம் தேதி பொறுப்புகளை ஒப்படைத்தார் ராவ். அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ராவ்வின் மச்சினன் சந்திரமௌலி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பதிவெண் கொண்ட இன்னோவா காரில் இராமேஸ்வரம் போய் விட்டுத் திரும்பிய வழியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. காரை ஓட்டி வந்தது சந்திர மௌலி தான்.

விபத்து நடந்ததும் நேராக உச்சிபுளி போலீஸ் ஸ்டேஷனுக்கு போயுள்ளனர். அங்கே காரை நிறுத்திவிட்டு, நேராக கலெக்டர் பங்களாவுக்குப் போய்விட்டனர். பிரச்சினை எதுவும் வராமலிருக்க, பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் ஐடியாப்படி வள்ளியின் சிகிச்சை செலவுக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து ஆஃப் பண்ணிவிட்டனர். இன்னொரு டிரைவரை செட்பண்ணி அவர்மீது கேஸ் போட முயற்சி நடக்கிறது'' என்றார்.

நாம் உச்சிப்புளி ஸ்டேஷன் எஸ்.ஐ. ஜோதிமுருகனைத் தொடர்புகொண்டபோது, “""ஆமா சார்... அது ஆக்ஸிடெண்ட்தான் சார். டிரைவர் லோக்கல்தான். அடையாளம் தெரியாத அவரைத் தேடிக்கிட்டிருக்கோம். இதுக்குமேல எனக்கு எதுவும் தெரியாது சார்''’’ என்றார். ""ஓ.கே. சார்'' என நாமும் போனை வைத்துவிட்டோம்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படங்கள்: பாலாஜி

nkn251120
இதையும் படியுங்கள்
Subscribe