Advertisment

நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி! சர்ச்சையில் பா.ஜ.க.!

kidnapp

டெல்லியில் தன் கணவருடனிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, இந்திய அதிகாரிகள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் பங்களாதேஷ் எல்லையில் சென்று விட்டுவந்தது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Advertisment

சுனாலி காத்தூன், கணவர் தானிஷ் ஷேக், இவர்களது 8 வயது மகன் சபீர் ஆகியோர் டெல்லி ரோஹிணி செக்டரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்தனர். கூலித்தொழிலாளர்களான இவர்களை 2025, ஜூன் 18 அன்று பங்களாதேஷ் குடியேறிகள் என்ற சந்தேகத்தில் டெல்லி போலீஸ் கைதுசெய்தது.

டெல்லியில் தன் கணவருடனிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, இந்திய அதிகாரிகள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் பங்களாதேஷ் எல்லையில் சென்று விட்டுவந்தது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Advertisment

சுனாலி காத்தூன், கணவர் தானிஷ் ஷேக், இவர்களது 8 வயது மகன் சபீர் ஆகியோர் டெல்லி ரோஹிணி செக்டரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்தனர். கூலித்தொழிலாளர்களான இவர்களை 2025, ஜூன் 18 அன்று பங்களாதேஷ் குடியேறிகள் என்ற சந்தேகத்தில் டெல்லி போலீஸ் கைதுசெய்தது. பெரிய விசாரணை இல்லை,… உறுதிப்படுத்தல்கள் இல்லாமல் இவர்கள் மூவரையும் பங்களாதேஷ் எல்லையில் யாருமறியாமல் விட்டுவிட்டு வந்துவிட்டனர். இப்படி சம்பந்தப்பட்ட அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக விட்டுவிட்டு வருவதற்கு புஷ்பேக் எனப் பெயர். பங்களாதேஷ் குடும்பமொன்றின் ஆதரவோடு சில நாட்களைத் தள்ளிய சுனாலி குடும்பத்தை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையிலடைத்தது. அவர் மூன்றரை மாதங்கள் சிறையிலிருந்தார்.

Advertisment

சுனாலி காத்தூன் விவகாரம் ஊடகங்கள்மூலம், மேற்கு வங்கத்திலிருக்கும் அவரது தந்தை போடு ஷேக்குக்குத் தெரியவர, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்தார். சுனாலியை நாடுகடத்தியதை சட்டவிரோதமென அறிவித்த நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் அவர்களை இந்தியா கொண்டுவர உத்தரவிட்டது. இதற்கெதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்ய, வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் சுனாலி, நாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்க, இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கலாமா என நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்ய பாக்சி அமர்வு கேட்க, சுனாலியையும் அவரது எட்டுவயது மகனையும் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சுனாலியை கைதுசெய்யப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்து மருத்துவ உதவிகள் வழங்கி கண்காணிப் பின்கீழ் வைக்கவும், அவளது மகனை மேற்குவங்க அரசு பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. போடு ஷேக்கின் மரபணு பொருத்தம் ஆராயப்பட்டு, போடுஷேக்கின் வாரிசென நிரூபணமானால் சுனாலி, சபீரின் குடியுரிமை உறுதியாகுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுனாலியின் கணவர் தானிஷ்ஷேக்கை, தற்போதுவரை இந்தியா வர அரசு அனுமதிக்கவில்லை.

சுனாலி குடும்பத்தினர் எந்த அடிப்படையில் பங்களாதேஷ்வாசி  என முடிவு செய்யப்பட்டார்கள், அவர்கள் ஏன் சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டார்கள், போடுஷேக்கின் மரபணுவுடன் சுனாலி, சபீரின் மரபணு பொருந்தினால் அவர்கள் இந்தியர் களாகிவிடுவார்கள். அதேவேளை தானிஷ்ஷேக் இந்தியராக மாற யாருடைய மரபணுவுடன், அவர் மரபணுவை ஒப்பிடுவது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

nkn101225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe