Advertisment

மருத்துவம் படிக்காமலேயே பிரசவம்! கொல்லப்பட்ட தாய்-சேய்!

dd

"அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவப் படிப்பை படிக்காமலேயே தவறான சிகிச்சை செய்து எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிரை பறித்துவிட்டார்கள். இது, நிரூபிக்கப்பட்டும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை''’என்று நம்மிடம் புகார் கொடுத்து கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

Advertisment

dd

இதுகுறித்து, இளம் வயதிலேயே தனது மனைவியை இழந்து வாடும் சென்னை நெற் குன்றத்தைச்சேர்ந்த கார்த்திக் நம்மிடம், “""என் மனைவி கலாவை சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள டபுள்யூ.சி.எஃ

"அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவப் படிப்பை படிக்காமலேயே தவறான சிகிச்சை செய்து எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிரை பறித்துவிட்டார்கள். இது, நிரூபிக்கப்பட்டும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை''’என்று நம்மிடம் புகார் கொடுத்து கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

Advertisment

dd

இதுகுறித்து, இளம் வயதிலேயே தனது மனைவியை இழந்து வாடும் சென்னை நெற் குன்றத்தைச்சேர்ந்த கார்த்திக் நம்மிடம், “""என் மனைவி கலாவை சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள டபுள்யூ.சி.எஃப். மருத் துவமனையில் கடந்த 2018 ஆகஸ்டு 4- ந்தேதி புறநோயாளிகள் பிரிவில் அட்மிட் பண்ணி னோம். 25-ந்தேதி ஆபரேஷன் பண்ணினாங்க. இரவு 2:30 மணிக்கு வந்து "தாய்க்கு வெண்டி லேட்டர் வைக்கணும். அந்த, வசதி எங்ககிட்ட இல்ல. அதனால, விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப்போங்க'ன்னு சொல்லிட்டாங்க. விஜயா ஹாஸ்பிட்டலுக்குள்ள நுழைஞ்சதுமே என் மனைவி உயிருடன் இல்லைன்னு டாக் டர்கள் செக்-அப் பண்ணி சொல்ல, அதிர்ச்சியில் உறைஞ்சு போயிட்டேன். அப்படின்னா, டபுள்யூ.சி.எப். ஹாஸ்பிட்டலிலேயே என் மனைவி இறந்துட்டா. அதை மறைக்கிறதுக்காக வேற ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியிருக்காங்கங் கிறது புரிய ஆரம்பிச்சது. சரி, குழந்தையை யாவது கொடுங்கன்னு கேட்டா அதுவும் இறந்துபோச்சுன்னு அசால்ட்டா சொல்லிட் டாங்க. விசாரித்தபோதுதான், எம்.டி. மகப்பேறு மருத்துவம் படிக்காம லேயே மகப்பேறு மருத்துவம் படித்ததாக தகுதி குறைந்த மருத் துவர்களை வைத்து பிரசவம் பார்த்து ஒரே நேரத் துல, என் மனைவியை குழந் தையையும் கொன்னுட்டாங் கன்னு தெரியவந்தது''’என்று கண்ணீர்விட்டு கதறுகிறார் கார்த்திக்.

ஒருவருடம் கழித்தே வழக்குப்பதிவு செய்த சென்னை தி.நகர் சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் ஏ.சி. கோவிந்தராஜுலுவை தொடர்பு கொண்டு "ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என்று கேட்டபோது, சொல்ல மறுத்துவிட்டார்கள். டி.சி. அசோக்குமார் கவனத்துக்கு கொண்டுசென்றபோது ""குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடு கிறேன்''’என்றார். இதுகுறித்து, தமிழ்நாடு மருத் துவக்கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் நம்மி டம், “""தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய் யாமலேயே மகப்பேறு மருத்துவர் என்று சொல் லிக்கொண்டு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தது சட்டப்படி குற்றம். மேலும், அந்த சிகிச்சையில் தவறு நடந்திருப்பதாக ஆரம்ப கட்ட ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம். முழுமையாக நிரூபிக்கப்பட் டால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

டபுள்யூ.சி.எஃப் மருத்துவமனை எம்.டி.யும் டாக்டருமான ராஜசேகரிடம் கேட்டபோது "நேரில் விளக்கம் அளிக்கிறோம்' என்றவர், பலநாட்கள் ஆகி யும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

காவல்துறை- தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக் காத வரை இதுபோன்ற உயிர்ப்பலிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

-மனோசௌந்தர்

Advertisment
nkn130819
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe