அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒரு சாமியாரின் சர்ச்சையான மரணம், யோகியின் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகப் பொறுப்பேற்றதும் அவரது ஆட்சியை ஓவர் பில்டப் செய்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில், கோரக்பூர், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், நோய்த்தொற்றாலும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்மீது கறையாகப் படிந்தது. அச்சம்பவத்தில் அரசின் தவறை வெளிக்கொண்டுவந்த அரசு மருத்துவர் கஃபீல் கான் மீதே குற்றம்சுமத்தி, ஜெயிலில் தள்ளியது யோகி அரசு. தனது விடுதலைக்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று பெரும் சட்டப்போராட்டம் நடத்தினார் கஃபீல் கான். விடுதலையான பின்னரும் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள யோகியின் இந்துத்வா அரசு மறுத்தது.
தொடர்ச்சியாக, மாட்டுக்கறி உணவு அரசியலுக்காக இஸ்லாமியர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அவ்வப்போது விமர்ச
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒரு சாமியாரின் சர்ச்சையான மரணம், யோகியின் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகப் பொறுப்பேற்றதும் அவரது ஆட்சியை ஓவர் பில்டப் செய்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில், கோரக்பூர், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், நோய்த்தொற்றாலும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்மீது கறையாகப் படிந்தது. அச்சம்பவத்தில் அரசின் தவறை வெளிக்கொண்டுவந்த அரசு மருத்துவர் கஃபீல் கான் மீதே குற்றம்சுமத்தி, ஜெயிலில் தள்ளியது யோகி அரசு. தனது விடுதலைக்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று பெரும் சட்டப்போராட்டம் நடத்தினார் கஃபீல் கான். விடுதலையான பின்னரும் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள யோகியின் இந்துத்வா அரசு மறுத்தது.
தொடர்ச்சியாக, மாட்டுக்கறி உணவு அரசியலுக்காக இஸ்லாமியர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அவ்வப்போது விமர்சனத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், கொரோனா தொற்றுப்பரவலில் அவரது நிர்வாகத்திறமையின்மை மீண்டும் வெளிப்பட்டது. கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை உ.பி. அரசு மறைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டுகளை உ.பி. அரசு மறுத்த நிலையில், கங்கை நதியில் கொத்துக்கொத்தாக கொரோனாவால் இறந்தவர்களின் பிணங்கள் மிதந்துவந்து நாடு முழுக்க மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு உ.பி.யில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும், பா.ஜ.க.வின் இந்துத்வா அரசியலின் மையப்புள்ளியான அயோத்தியிலும் பா.ஜ.க. பின்னடைவைச் சந்தித்தது மோடி -அமித்ஷா -யோகி கூட் டணிக்கு அதிர்ச்சியளித் தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சி யும் மீண்டும் கணிசமான அளவில் வெற்றிகளைப் பெற்றன. வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ. க.வுக்கு இந்துத்வா அரசியல் மட்டுமே கைகொடுக்காது என்ற சூழல்தான் தற்போது அங்கே நிலவுகிறது. யோகி ஆதித்ய நாத்தின் ஆட்சி தொடர்வதற்கு 50-50 என்ற அளவில்தான் வாய்ப்பு இருக்கிறது. உதிரியாக உள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரளும்பட்சத்தில் பா.ஜ.க.வுக்கு பலத்த அடி கிடைக்க வாய்ப் புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எனவேதான் கர்நாடகா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் முன்னெடுத்தது போல எதிர்க்கட்சியினரை வளைத்துப்போடும் அரசியலை உத்தரப்பிரதேசத்திலும் பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. அதற்கு முதல் விக்கெட்டாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜிதின் பிரசாதா, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ. க.வுக்காக அக்கட்சியின் அமைச்சர்கள் குழுவும், காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா தலைமை யிலான குழுவும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டது.
இப்படியான சூழலில் தான், மஹந்த் நரேந்திர கிரி என்ற சாமியார் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டது யோகி ஆதித்யநாத்துக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள் ளது. அகில பாரதீய அகண்ட பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக உள்ள மஹந்த் நரேந்திர கிரி, தனது ஆசி ரமத்திலுள்ள அறையில், கடந்த 20-ம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்ன தாக, அதற்கான காரணமாக, தனது சிஷ்யர்கள் சாமி அனந்திரி கிரி, ஆதித்ய பிரசாத் திவாரி, அவரின் மகன் சந்தீப் திவாரி ஆகியோரைக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளி யிட்டுள்ளார். மேலும், அவர் எழுதிவைத்துள்ள கடிதம் ஒன்றில், தன்னை இன்னொரு பெண்ணோடு தொடர்புபடுத்தி புகைப்படம் ஒன்றை உருவாக்கி, தன்னை அந்த மூவரும் மிரட்டிய தாகவும், தனது பெயருக்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் களங்கம் ஏற்படுவதைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்வதாகவும் எழுதியிருந்தார். இதையடுத்து, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரையும் உ.பி. போலீசார் கைது செய்தனர்.
பொதுவாக, வேறொரு கட்சியின் ஆட்சியில் இப்படி சாமியார் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அதை வைத்து மிகப்பெரிய அரசியலை பா.ஜ.க. முன்னெடுத்திருக்கும். ஆனால் ஆட்சியிலிருப்பதே பா.ஜ.க. என்ற நிலையில், தற்கொலை செய்துகொண்ட சாமியாரும் பிரபலமானவர், பா.ஜ.க. அரசால் கைது செய்யப்பட்ட சாமியார்களும் பிரபலமானவர்கள் என்ற நிலையில், இச்சம்பவம், யோகி அரசுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. யோகி ஆட்சியில் ஒரு சாமியாருக் குக்கூட பாதுகாப்பில்லை என்று காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. இந்த சாமியாரின் மரணம், தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லையென்றும், கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகத்தை எழுப்பி யுள்ளனர். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை யென்றும் சாமியாருக்கு ஆதர வாகக் குரலெழுப்பியுள்ளனர்.
இந்து மக்களைக் காப்பாற்றவே ஆட்சி செய்வ தாகக் கூறிக்கொள்ளும் யோகி அரசால், ஒரு சாமியாரைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்று அவரது இந்துத்வா அரசியலைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இவர்களோடு சேர்ந்து இந்துத்வா அமைப்புகளும் இப்பிரச்சனையில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளனர். எனவே, இவ்விவகா ரத்தில், தேர்தல் அறிவிப்பு வருமுன்பே விசாரணையை நடத்திமுடிக்க யோகி அரசு முடிவெடுத்துள்ளது. ஆக, கத்தியை எடுத்தவனுக்கு அந்த கத்தியாலேயே தான் முடிவு என்பதுபோல, யோகியின் இந்துத்வா அரசியலுக்கு அந்த அரசியலே ஆப்பாக மாறி யுள்ளது!