"ஹலோ தலைவரே, அரசியல் களம் விறு விறுத்துவரும் நிலையில், ஆளாளுக்கு அடுத்தவரை தங்கள் பக்கம் எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.''”
"ஆமாம்பா, நடிகர் விஜய் யால் எடப்பாடி ஏகத்துக்கும் நொந்து போயிருக்கிறார் என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப் படும் என சமீபகாலமாக சொல்லிக்கொண் டிருந்த எடப்பாடி, தங்கள் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வார் என்றும் நம்பிக் கொண்டிருந்தாராம். ஆனால் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், விஜய் தலைமையில்தான் கூட்டணி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்துதான் எடப்பாடி டென்ஷனாக இருக் கிறாராம். இதன்மூலம் விஜய் கூட்டணியின் கதவை சாத்திவிட்டதாகவும் எடப்பாடி நினைக்கிறாராம். எடப்பாடியின் மனக்குழப்பத்தை அறிந்த அ.தி. மு.க. சீனியர்கள், "கவலைப்படாதீர்கள். விஜய்க்கு நம்மைத் தவிர வேறு போக்கிடம் கிடையாது. கடைசி நேரத்தில் நம் கூட்டணிக்குத்தான் அவர் வருவார். நம் கூட்டணிக்கு அவர் வரவில்லை யெனில் அவரே தோற்றுப்போவார். தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் உண்மையானால், இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர் நம்மிடம் வருவார்' என்று அவருக்கு ஆறுதல் கூறினார் களாம்.''”
"மா.செ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி ஏகத்துக்கும் கொந் தளித்திருக்கிறாரே?''”
"சமீபத்தில் மா.செ.க் களை அழைத்து கூட் டம் கூட்டினார் எடப்பாடி. அதில் நியூஸ் ஜெ.யின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் அந்த நபர் பணம் வசூலித்தது குறித்து, திண்டுக்கல் சீனிவாசன் நேரடியாகவே குற்றம் சாட்டினார். அனைத்து மா.செ.க்களின் கருத்துக் களையும் கேட்ட எடப்பாடி வடக்கு, மேற்கு மண்டலங்களைத் தவிர்த்து எங்கு பூத் கமிட்டியின் கட்டமைப்பு இருக்கின்றது? 9 நபர்கள் கொண்ட ஒரு பூத் கமிட்டியைக் கூட கட்டமைக்கவில்லை யென்றால் எப்படி தேர்தலை எதிர்கொள்வது? அதுபோல் ஐ.டி. விங்கின் செயல்பாடுகளும் மோச மாக இருக்கிறது. உடனடியாக பூத் கமிட்டியையும், ஐ.டி. விங்கின் கட்டமைப்பையும் சரி செய்யுங்கள் என கோபமாக கொந்தளித்திருக்கிறார். மதுரை திருப்பாலைப் பகுதியில் நாகராஜன் என்பவரின் பொறுப்பில் 4 பூத் கமிட்டிகள் உள்ளன. அவர் நான்கிற்கும் சேர்த்து 36 நபர்களைச் சேர்க்க வேண்டும். அவரால் அதைச் செய்யமுடியவில்லை என்பதால், இதற்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட தஞ்சாவூர் காந்தியிடம் புலம்ப, அவரோ "அப்ப பூத் காசெல்லாம் வாங்குறீங்களே... அது யாருக்கு?' என அவரை வெளுத்து வாங்கியதோடு மட்டுமில்லாமல் இதனை எடப்பாடியிடமும் அப்டேட் செய்திருக்கிறார். இதையெல்லாம் அறிந்ததால்தான் எடப்பாடி கொந்தளித்தாராம்.''”
"அ.ம.மு.க. பிரமுகர்களுக்கு எடப்பாடி குறிவைக்கிறார் என்கிறார்களே?''”
"த.வெ.க. கூட்டணிக்குத் தயார் என தாமாக கூட்டணிக்குத் தூது விட்டபோதும், நடிகர் விஜய் கழற்றிவிட்டதால் பெரும் அப்செட்டிற்கு ஆளாகி யிருக்கிறாராம் எடப்பாடி. இதனால் தங்கள்பக்க சரிவை சரிசெய்ய

"த.வெ.க. கூட்டணிக்குத் தயார் என தாமாக கூட்டணிக்குத் தூது விட்டபோதும், நடிகர் விஜய் கழற்றிவிட்டதால் பெரும் அப்செட்டிற்கு ஆளாகி யிருக்கிறாராம் எடப்பாடி. இதனால் தங்கள்பக்க சரிவை சரிசெய்ய மாற்றுக் கட்சிகளி-ருந்து ஆட்களைத் தூக்கி வந்து, தங்களது பலத்தை நிரூபிக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக அவர்தரப்பு முதலில் குறிவைத்தது அ.ம.மு.க.வை. குறிப்பாக மதுரை டேவிட் அண்ணாதுரை மற்றும் சிவகங்கையின் தேர்போகி பாண்டி ஆகியோரை முதலில் தங்கள் பக்கம் அவர் கொண்டு வர நினைக்கிறாராம்.''”
"விஜய் தரப்பு, தனது செல்வாக்கை அறிய ஒரு ரகசிய சர்வே எடுத்ததாகக் கூறுகிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, விஜய்யின் செல்வாக்கு குறித்து சமீபத்தில் ஒரு சீக்ரெட் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வேயை தி.மு.க.விற் காக தேர்தல் பணிகளைச் செய்துவரும் உளவுத் துறையினர் எடுத்துள்ளனர். அந்த சர்வேயில், விஜய் தனியாக போட்டியிடுவது தி.மு.க.வுக்கு சாதகம் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனாலும் நாம் தனித்தே போட்டியிடலாம் என்று சிலர் விஜய்யைத் தூண்டிவருகிறார்களாம். அவர்களிடம் பேசும் விஜய், தனித்துப் போட்டியிட்டால் நாம் எத்தனை தொகுதிகளில் ஜெயிப்போம் என கேட்டிருக்கிறார். அதற்கு த.வெ.க. முக்கிய நிர்வாகிகள், கணிசமாக வெற்றி பெறுவோம், அதிலும் வெற்றிபெறும் வேட் பாளர்களில் நீங்கள்தான் அதிக வித்தியாசத்தில் ஜெயிப்பீர்கள். எந்த தொகுதியில் நீங்கள் நின்றா லும் இதுதான் நிலைமை என்று உசுப்பேத்திவரு கிறார்களாம். இந்த நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த்கிஷோரிடமும் விஜய் ஆலோசனை கேட்டிருக்கிறார். பீஹார் தேர்தலில் சீரியசாக இருக்கும் பி.கே., "இன்னும் தமிழ் நாட்டு அரசியல் குறித்து கவனம் செலுத்தவில்லை' என்று தெரிவித்தாராம். மேலும் அவர், ’"ஒன்று மட்டும் சொல்வேன். தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி உங்கள் கட்சிக்கு இப்போதைக்குக் கிடையாது. இப்போ தைய நிலையில் போட்டியிட்டால் நீங்கள்கூட தோற்றுப்போவீர்கள் என்று அதிரடியாகக் கூறி, விஜய்யை பகீரில் ஆழ்த்தி விட்டாராம்.''”
"இந்த நிலையில் காங்கிரஸை த.வெ.க. கூட்டணிக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஆதவ் அர்ஜுன் இருக்கிறார் என்கிறார்களே?''”
"கடந்த தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கருப்பு சிவப்பு துணி கட்டிய சைக்கிளில் சென்று வாக்களித் தார் எம் தலைவர். அதையே மறந்து விட்டார்கள் என்று ஆதவ் அர்ஜுன் பேசியதை நடிகர் விஜய் ரசிக்கவில்லை யாம். இதுகுறித்து தன் நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்த விஜய், ஆதவ்வை நேரில் சந்திக்கக்கூட விரும்பவில்லையாம். இதனால் பதட்டமான ஆதவ், எப்படியாவது காங்கிரஸைத் தங்கள் பக்கம் கொண்டு வந்தாலோ அல்லது மாற்றுக்கட்சிப் பிரமுகர்களை அழைத்து வந்தாலோ அவரது கோபம் தணியும் என்று நினைத்தார். இதற்காக பெங்களூருவில் தங்கி, தன் மாமனாரான மார்ட்டினின் தொடர்புகள் மூலம் கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமாரை சந்தித்து, அவர் மூலம் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் டீலிங்கில் இறங்கியிருக்கிறாராம். மற்றவர்கள் கேட்டதற்கு, "இங்கு ஸ்டேடியம் திறக்க வந்துள்ளேன்'’என்று டபாய்த்து வருகிறாராம்.''”
"சி.பி.ஐ.யின் அதிரடி மூவ்களால் நடிகர் விஜய் பதட்டத்தி-ருக்கிறார் என்கிறார்களே?''”
"கரூர் துயர சம்பவம் தொடர்பான பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது சி.பி.ஐ.. இந்த சூழலில், விஜய்யிடம் விசாரிக்க வேண்டும் என்று அவருக்கு தகவல் தந்துள்ளனர். அதற்கு விஜய், ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருப்பதால் ஜனவரியில் உங்களின் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதனை ஏற்க மறுத்த சி.பி.ஐ. தரப்பு, "உங்களுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம். இதில் ஒரு நாளை சொல்லுங்கள். அப்போது உங்களிடம் விசாரிக்க வருகிறோம். இதனை மறுத்தால், நாங்கள் முடிவுசெய்யும் நாளில் வருவோம். அதற்கு ஒத்துழைக்க மறுத்தால் எங்களின் ஆக்ஷன் வேறு மாதிரி இருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதனால் பதட்டத்தில் இருக்கிறாராம் விஜய்.''”
"காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களின் பல்ஸ்ரேட்டும் சரியில்லை என்கிறார்களே?''”
"தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களது செயல்பாடுகள் அவர்கள் சார்ந்த தொகுதியில் எப்படி இருக்கிறது என விசாரித் திருக்கிறார் ராகுல். பீஹார் தேர்தலில் இதுவரை கவனம் செலுத்திவந்த ராகுல், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர்களிடம் தமிழக நிலவரம் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் சரியான ரிசல்ட்டை சொல்லவில்லை. இந்த நிலையில், காங்கிரசின் 17 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய தகவல்கள் குறித்து காங்கிரசின் வியூக வகுப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார் ராகுல். அவர்களோ, 17 எம்.எல்.ஏ.க்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நெகட்டிவ் விமர்சனம் இருக்கிறது என்று சொல்லி யுள்ளனர். இதில் அதிக குற்றச்சாட்டுகள் இருப்பது பொன் னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் மீதுதான் என்றார்களாம். ஒவ்வொரு விசயத்திலும் கமிசன் அடிக்கிறார் என்றும், மணல் கடத்தல் தொடங்கி சின்ன சின்ன காண்ட்ராக்ட் விசயம் வரை கமிசன் கேட்கிறார். கமிசன் தரவில்லையெ னில் தகராறு செய்கிறார் என்றும் அவர்கள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். எனவே இந்தமுறை புதுமுகங்களுக்கு அதிக சீட் தரவேண்டும் என்று நினைக்கிறாராம் ராகுல்.''”
"இதனால்தான் பா.ஜ.க. மாஜி நிர்வாகி புதுக்கட்சி தொடங்கவிருக்கிறார் என்று கூறுகிறார்களே?''”
"நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே மாஜி மாநிலத் தலைவரை கட்சியில் யாரும் சீந்துவதில்லை. அதனால் அவர் சொந்தச் செலவில் தற்பொழுது வரை "வார் ரூம்' நடத்தி, தன்னைப் பற்றி செய்திகளை வரவழைத்து, கொங்கு அரசியலில் தான் ஒரு தவிர்க்கமுடியாத சக்தி என்பதுபோல் காட்டிவருகிறார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் சமீபத்தில் பாரட்டு விழா நடந்த போது, இந்த மாஜியையும் அழைத் திருக்கிறது விழாக்குழு. அதே சமயம் கோவையில் செவ் வாய்க்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிக்கு இவருக்கு அழைப் பே இல்லையாம். நிர்மலாவே, அவரைக் கூப்பிடவேண்டாம் என்று சொல்லிவிட் டாராம். மேலும் கட்சித் தலைமையிடம் நிர்மலா தன்னைப் பற்றிப் போட்டுக் கொடுத்த கடுப்பிலும் இருக்கும் அந்த மாஜி, ’ஜனநாயக பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரில் விரைவில் ஒரு கட்சியைத் தொடக்க முடிவெடுத்திருக்கிறாராம்.''”
"இந்தமுறை பா.ஜ.க. நயினார் தனது நெல்லை தொகுதியில் நிற்க விரும்பவில்லை என்கிறார்களே?''”
"திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை நயினார் நாகேந்திரன் போட்டியிட மாட்டார். தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார் என அவரது ஆதர வாளர்கள் இப்பொழுதே பரப்புரையை நடத்தி வருகின்றனர். ஆனால் உண்மை யான காரணம் அதுவல்லவாம். அவர் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் என்றாலும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் அவருடைய சட்டமன் றத் தொகுதிக்குட்பட்ட மானூர் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் தி.மு.க.விற்கு கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. போதாக்குறைக்கு முன்னாள் அமைச்சர் ஆவுடையப்பனின் மகன் இந்த தொகுதியைக் குறி வைத்திருப்பதால் நயினாருக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி ஆகிவிட்டதாம். அதனால்தான் இந்த முடிவாம்.''”
"கோவை பகுதியில் நடந்த கஞ்சா வேட்டை குறித்து பரபரப்பான தகவல்கள் கசிகிறதே?''”
"கோவை மாநகர காவல்துறை சார்பாக குனியமுத்தூர், சுந்தரா புரம், குறிச்சி, உக்கடம் மற்றும் போத்தனூர் காவல் நிலைய எல் லைகளுக்கு உட் பட்ட இடங்களில், புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு எதிராக தீவிர சோதனையை நடத்தியது சம்பந்தப்பட்ட காவல்துறை. அப்போது கிலோ கணக்கில் கஞ்சா சிக்கியதாக நுண்ணறிவுப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் எவரும் ரிமாண்டிற்கு அனுப்பப்படவில்லை. தொடர் விசாரணையில், வெறும் 100 கிராமிற்கும் குறைவாகவே கஞ்சா கிடைத்தது அதனால் ஸ்டேஷன் பெயிலில் சம்பந்தப்பட்டவர்களை விடவேண்டியதாயிற்று என்று சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மழுப்பினவாம். கஞ்சாவை பிடிக்கும்போது கூறியது கிலோக்கணக்கில். ஆனால் முதல் தகவலறிக்கையில் காட்டியது கிராம் கணக்கில். அப்படியெனில் மீதம் எங்கே..? என விசாரணையை தொடங்கியுள்ளதாம் நுண்ணறிவுப் போலீஸ்.''”
"தி.மு.க.வில் ஒரே தொகுதியை அக்காவும் தம்பியும் குறிவைத்திருக்கிறார்களாமே?''”
"வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூத்துக் குடி தொகுதி தங்களுக்கே கிடைக்கவேண்டும் என்ற வேகத்தோடு, அமைச்சர் கீதா ஜீவனும், அவர் தம்பி மேயர் ஜெகன் பெரியசாமியும் வேலையைத் தொடங்கியுள்ளனர். அது எப்படி..? எனக் கேட்டால், கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கீதா ஜீவன் நம்பிக்கையாக இருக்க, "எனக்கு இங்க சீட் கொடுத்தால் ஓ.கே. இல்லையென்றால் இந்தமுறையும் அக்காவுக்கே சீட் என்றால், எனக்கு மா.செ. பதவி வேண்டும்' என்கிறாராம் பலத்த எதிர்பார்ப்போடு ஜெகன்.''”
"தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமீது அர சியல் கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றனவே?''”
"தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். எஸ்.ஐ. ஆர். பணிகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக் கும் நிலையில், அதில் ஏகப்பட்ட சந்தேகங்கள், குளறுபடிகள் இருப்பதால் அது குறித்து தெளிவு பெற தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அர்ச்சனாவைத் தொடர்பு கொண்டால் அவர்களின் போனை அவர் அட்டெண்ட் செய்வதே இல்லையாம். இதனால், அவர் மீது ஏக கோபத்தில் இருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கும் சூழலில், அது குறித்து கவனமும் அக்கறையும் இருக்கவேண்டிய அர்ச்சனா பட்நாயக் போன்ற அதிகாரிகள், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப் பது அரசியல் கட்சிகளிடம் அதிருப்தியை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவர்கள் எல் லோரும் அரசியல் கட்சிகளால் எளிதாக அணுகும் நிலையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.''
"அ.தி.மு.க.வுல பண விவகாரமா ஏதோ சலசலப்புன்னு சொல்றாங்களே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. வேட்பாளர் களா அறிவிக்கிறதுக்கு அதிகபட்சத் தொகையாக ரூ 10 கோடியும், குறைந்தபட்சத் தொகையாக ரூ 2 கோடியும் எடப்பாடி தரப்பிலிருந்து வசூலித்திருக் கிறார்கள். ஆனால் விஜய் தரப்பிலிருந்து தன் தலைமையில்தான் கூட்டணி என தெளிவாக அறிவித்துவிட்டதால், மா.செ.க்கள் மூலமாகவும் நேரடியாகவும் பணத்தைக் கொடுத்தவர்கள் திரும் பக் கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கிறார்களாம். இப்ப இருக்கும் சூழலில் டி.டி.வி., ஓ.பி.எஸ்., சசிகலாவையும் எடப்பாடி சேர்த்துக்கொள்ள மாட்டார். விஜய்யும் கூட்டணியில் இல்லை. வெறும் பா.ஜ.க.வுடனான கூட்டணிக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை என நினைக்கும் பலர், எங்களால் இதற்குமேல் பணம் புரட்டமுடியாது. நாங்க கொடுத்த காசை திரும்பக்கொடுங்கனு எடப்பாடியிடம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அ.தி.மு.க.வின் கூட்டணி விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என எடப்பாடி, பேசியதன் சூட்சுமம் இதுதான். இதுபோக, கூடியவிரைவில் அ.தி.மு.க.வில் வைத்திலிங்கம் மீண்டும் இணைவார் என்கிற தகவல் வர டெல்டா பகுதி ர.ர.க்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நேற்று வந்தவர்களின் பேச்சைக் கேட்டுட்டு 'அத்தான்' என்னை மதிப்பதில்லை என்றபடி, கடலோர அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனுடன் ஆதங்கத்தில் ஒதுங்கி இருந்தார், அமைச்சரின் நிழலான உமரி சங்கர். இதை நமது நக்கீரனும் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் அவர் அமைச்சரைவிட்டு வெளியேறினால் பிரச்சனைகள் எழக்கூடும் என இரு தரப்பிற்கும் வேண்டப்பட்டவர்கள் சமாதான முயற்சியில் இறங்கிப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இரு வருக்கும் இடையே பேச்சுவார்த் தை நடத்த, இப்போது பழையபடி அமைச்சர் அனிதாவுடன் ஹாயாக வலம் வருகிறாராம் உமரி.''’
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us