கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் த.வெ.க. சார்பில் அக்டோபர் 18, சனிக்கிழமை மாலை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி கரூர் வந்த இக்குழுவினர், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்த த.வெ.க. நிர்வாகிகள் 2 பேரை 2 நாள் காவலிலெடுத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி இரவு கரூர் வந்தனர். அவர்கள் கரூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி, விசாரணையைத் தொடங்கினர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் தலா ரூ.2.50 லட்சம், ம.நீ.ம. சார்பில் தலா ரூ.1 லட்சம், வி.சி.க. சார்பில் ரூ.50 ஆயிரம் என பல்வேறு கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகளில் த.வெ.க. சார்பில் அக்டோபர் 18, சனிக்கிழமை மாலை தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி கரூர் வந்த இக்குழுவினர், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்த த.வெ.க. நிர்வாகிகள் 2 பேரை 2 நாள் காவலிலெடுத்து விசாரித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி இரவு கரூர் வந்தனர். அவர்கள் கரூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் தங்கி, விசாரணையைத் தொடங்கினர்.
இதனிடையே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் தலா ரூ.2.50 லட்சம், ம.நீ.ம. சார்பில் தலா ரூ.1 லட்சம், வி.சி.க. சார்பில் ரூ.50 ஆயிரம் என பல்வேறு கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, கரூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை வரவழைத்து, அங்கு அவர்களுக்கு விஜய் நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இடம் தேர்வுசெய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விஜய் வருகை தள்ளிப்போவதாகக் கூறப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vijay1-2025-10-23-16-22-25.jpg)
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், முதலில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நிவாரணமாக, 27 பேரின் வங்கிக் கணக்குகளிலும் சனிக்கிழமை த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி அவர்களது செல் போனுக்கு வந்தது. பின்பு மேலும் 10 பேரின் குடும்பத்தினருக்கும் த.வெ.க. சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந் திருந்தாலும், அந்தக் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மட்டும் நிவாரணம் வழங்கப் பட்டதாகவும் த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கரூரில் விஜய் கூட்டநெரிசலில் தனது இரு மகள் களைப் பறிகொடுத்த வேலுச்சாமிபுரம் செல்வராணி, “"என் பெண்கள் பழனி யம்மா, கோகிலா இருவரும் கூட்ட நெரிசலில் இறந்துவிட்டனர். அதற்கான நிவாரணம் ரூ 20 லட்சம் என் அக்கவுண்டுக்கு வந்துவிட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் என் பிள்ளை களுக்கு ஈடாகாது''’என்கிறார். செய்தியா ளர் ஒருவர், "விஜய்க்கு என்ன சொல்ல விரும்புறீங்க?' என கேட்க, "நம்பிக்கை யோட இருங்க. இந்தத் தேர்தலில் நீங்கதான் ஜெயிப்பீங்க''’என்கிறார்.
"நாங்க யாருமே இவ்வளவு கிட்டப்போய் அவரைப் பார்க்க முடியாது. அந்தப் பெருமையை எங்க குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்திருக் கான். அதுக்கு நஷ்டஈடா எங்க குழந் தையைக் கொடுத்திருக்கோம்''’என்கிறார் பலியான 2 வயது குழந்தை குரு விஷாலின் சின்ன பாட்டி செந்தாமரை.
இதற்கிடையில் மொத்தமுள்ள 41 பேரில் இருவர் கணக்கில் மட்டும் இன்னும் பணம் போடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தங்களது அனுமதியின்றி சி.பி.ஐ. வழக்குத் தொடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனுப் போட்ட ஏமூர் செல்வராஜ், ஷர்மிளா இருவருக்குத்தான் பணம் போடப்படவில்லை என சில செய்திகள் வெளியாகின. நாம் விசாரித்தவரையில் கூட்ட நெரிசலில் இறந்துபோன தாமரைக்கண்ணன், தனுஷ்குமார் என்ற இருவரின் குடும்பத்துக்குத்தான் பணம் போடப்படவில்லை எனத் தெரியவந்தது.
இந்த இருவரது குடும்பத்திலும் நிவாரணப் பணம் அனுப்ப வங்கிக் கணக்கு கேட்கப்பட்டபோது, இறந்தவ ரின் தந்தை தனியாகவும், மருமகள் தனியாகவும் வங்கிக் கணக்கு அளித்ததால் யாருடைய கணக்குக்கு பணம் அனுப்புவது என்ற குழப்பத் தில் பணம் போடப்படவில்லை யெனவும், சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்வு கண்டதும் பணம் போடப்படும் எனவும் த.வெ.க. தரப்பில் தெரிவித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vijay2-2025-10-23-16-22-41.jpg)
இந்நிலையில், பிரச்சனையைத் தீர்க்க இந்த இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஜாய்ண்ட் அக்கவுண்ட் தொடங்கி பணம் போடுவதாகவும், இருவரும் பகிர்ந்து கொள்ளும்படியும் த.வெ.க. சார்பில் கூறப்பட்ட யோசனைக்கு தனுஷ் குமார், தாமரைக்கண்ணன் குடும்பத் தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். நாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் பேசியபோது, "அக்டோபர் 22-ஆம் தேதி எங்களோட ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஓபன் பண்ணினோம். பணம் போட்டிருவோம்னு சொன்னாங்க. இன்னைக்கு (அக்டோபர் 23) எங்க கணக்குல வந்துடும்'' என நம்பிக்கையாகத் தெரிவித்தனர்.
விஜய் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்குப் பின் கரூர் மாவட்ட மா.செ. மதியழகன் தலைமறைவான நிலையில், கரூர் கூட்டத்தில் சந்தேகத் துக்கு இடமான நபர்கள் தென்பட்ட தாகவும், கூட்ட நெரிசலில் கீழே விழுந்தவர்களின் கழுத்தில் மிதித்துக் கொன்றதாகவும், ஸ்ப்ரே அடித்து கழுத்துச் சங்கிலியை வைத்து நெறித்ததாகவும் சதிக் கதைகளை ஊடகங்களில் பேசித் திரிந்தவர் மதியழகனின் மனைவி ராணி.
தற்போது பணம் போடுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன் றையும் போய் பார்த்து சமாதானப்படுத்தி, "சென் னை வரை போய் தலை வரை எல்லாம் பார்த்துப் பேசிட்டு வந்துட்டோம். நிவாரணத் தொகை இன்னும் இரண்டொரு நாள்ல வந்துடும். கிடைச் சதும் ஊடகங்கள் கேட்டா தலைவரைப் பாராட்டி நாலு வார்த்தை பேசுங்க'' எனக்கூறி கேன்வாஸ் செய்யும் வேலையை த.வெ.க. கரூர் மா.செ. மதியழகனின் மனைவி ராணியும், பிற நிர்வாகி களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்தே கரூர் சம்பவத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர், "என் பையன் உயிர் போனாலும் போய்ட்டுப் போவுது. என் மகனாட்டம் விஜய். அவர்தான் முதலமைச்சரா வரணும்''” என ஒரு தாயும், “என் மகன் படத்தை விஜய் மடியில் வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கிட்டா போதும்''’என ஒரு தாய் பேசு வதும், கரூர் கூட்ட நெரிசலில் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த ஒரு தாய், விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் காட்சி களும் அரங்கேறிவருகின்றன.
தற்போதுவரை அனைத்தும் சுமுகமாக விஷயங்கள் நடைபெற்று வருவதால், கரூர் விவகாரங்கள் முடிவுக்கு வந்ததும், மீண்டும் பிரச்சா ரங்களை தொடங்குவது குறித்தும், இமேஜுக்கு விழுந்த அடியை சரிசெய் வது குறித்தும் நிர்வாகிகளிடம் ஆலோ சிக்கத் தொடங்கியிருக்கிறாராம் விஜய்.
____________
இறுதிச்சுற்று!
முதல்வர் சுற்றுப்பயணம்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vijaybox-2025-10-23-16-22-57.jpg)
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் மேற்கொள்ள விருந்த முதல்வரின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. ரத்து செய்யப்பட்ட அந்த 2 நாள் பயணத்தை மீண்டும் மேற்கொள்கிறார் ஸ்டாலின். தென்காசி மாவட்டத்தில் வருகிற 29 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார் முதல்வர். இதற்கான அறிவிப்பு 23-ந் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 2 நாள் அரசுமுறைப் பயணத்தில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கிவைக்கும் முதல்வர் ஸ்டாலின், 30-ந் தேதி பசும்பொன்னில் நடக்கும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை யொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்வில், ஸ்டாலினுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
-இளையர்
எம்.எல்.ஏ. மறைவு!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/vijaybox1-2025-10-23-16-23-10.jpg)
சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி, மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்... சிகிச்சை பலனின்றி அக்டோபர் 23, வியாழனன்று கால மானார். அவருக்கு வயது 74. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், இதற்கு முன்னர் 2001, 2006ஆம் ஆண்டுகளிலும் சேந்தமங்கலம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-நாகேந்திரன்
Follow Us